சாதி ரீதியாக அதிமுகவினரை பிரிக்க முயற்சி: அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பரபரப்பு பேட்டி
2022-06-26@ 13:03:04

மதுரை: சாதி ரீதியாக பிரிவினை ஏற்படுத்துவப்பவர்களுக்கு அதிமுக தொண்டர்கள் இடம்கொடுக்க கூடாது என அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார். டெல்லி பயணத்தை முடித்துவிட்டு, ஓ.பன்னீர்செல்வம் சென்னை திரும்பினார். அவர், முன்னாள் அமைச்சர்கள், எம்பி, எம்எல்ஏக்கள், மாவட்டச் செயலாளர்களுடன் தொடர்பு கொண்டு பேசி வருகிறார். இதனால், அதிமுக அரசியல் களம் மீண்டும் சூடுபிடித்துள்ளது. மதுரை வரும் ஓபிஎஸ்கு வரவேற்பு அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில் மதுரையில் செல்லூர் ராஜூ செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர்; சாதி ரீதியாக பிரிவினை ஏற்படுத்துவப்பவர்களுக்கு அதிமுக தொண்டர்கள் இடம்கொடுக்க கூடாது.
அதிமுக தொண்டர்கள் எப்போதும் சாதி, மதம், பார்ப்பதில்லை, மதச்சார்பற்றவர்களாகவே இருந்து வருகின்றனர். ஜூலை 11ம் தேதி அதிமுக பொதுக்குழு திட்டமிட்டப்படி நடைபெறும். அதிமுக தொண்டர்களை பிரித்து தேசிய கட்சியில் சேர்த்துவிடலாம் என்று யாரவது நினைத்தால் அது நடக்காது. அதிமுக விழாது; புத்துணர்ச்சியோடு மீண்டு வரும். அதிமுக மக்கள் இயக்கமாகும்; அதிமுக தொண்டர்களின் இயக்கமாகும். அதிமுக லட்சியத்தோடு செயல்பட்டு கொண்டிருக்கிறது. யார் நினைத்தாலும் அதிமுகவை பிரிக்கவும் முடியாது, வீழ்த்தவும் முடியாது எனவும் கூறினார்.
மேலும் செய்திகள்
ஒன்றிய அரசின் ஒரே தேர்வு முறையை எதிர்க்க வேண்டும்: காரைக்குடியில் ப.சிதம்பரம் பேட்டி
சொல்லிட்டாங்க...
தவறு செய்தவர்களை தண்டிக்காமல் போதைப்பொருட்களை எப்படி ஒழிக்க முடியும்? பாமக தலைவர் அன்புமணி கேள்வி
கொரோனா தொற்றில் இருந்து சோனியா காந்தி முழுமையாக குணமடைய வேண்டும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் டிவிட்
ஒன்றிய அரசின் கொள்கைகளை கண்டித்து 30ம் தேதி மாநிலம் தழுவிய மறியல்: இந்திய கம்யூனிஸ்ட் அறிவிப்பு
தேவையான அளவு கையிருப்பு உள்ளதால் உரங்களை கூடுதல் விலைக்கு விற்க வேண்டியது இல்லை: எடப்பாடிக்கு அமைச்சர் பதில்
நாட்டின் 75-வது சுதந்திர தின கொண்டாட்டம்: மூவர்ண விளக்குகளால் ஜொலிக்கும் ஒன்றிய, மாநில அரசு கட்டடங்கள்..!!
போதையைத் தவிர்..கல்வியால் நிமிர்!: தமிழக பள்ளி மாணவர்கள் போதைக்கு எதிராக உறுதிமொழி ஏற்பு..!!
கியூபாவில் பயங்கர தீ விபத்து: 17 பேர் பலி..!!
தென்கொரியாவை புரட்டிபோட்ட கனமழை!! இதுவரை 9 பேர் பலி..
பிரிட்டன் ஃபார்ன் தீவில் பரவும் பறவை காய்ச்சல்: ஆயிரக்கணக்கான பறவைகள் துடிதுடித்து இறப்பு..!!