SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

இந்தியாவில் ஒரு நாள் கொரோனா பாதிப்பு 11,739 ஆக குறைந்தது... சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 92 ஆயிரத்தை தாண்டியது!!

2022-06-26@ 09:28:01

டெல்லி: நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 லட்சத்தை தாண்டியது. அதே போல், பாதிப்பு 4 கோடியை தாண்டியது. இன்று காலை 9 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில், நாட்டில் கொரோனாவால் புதிதாக பாதித்தவர்கள், குணமடைந்தோர், பலியானோர், இறப்பு விகித நிலவரம் குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:

* புதிதாக 11,739 பேர் பாதித்துள்ளனர்.

* இதன் மூலம், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4,33,89,973 ஆக உயர்ந்தது.

* புதிதாக 25 பேர் இறந்துள்ளனர்.

* இதனால், நாட்டின் மொத்த உயிரிழந்தோர் எண்ணிக்கை 5,24,999 ஆக உயர்ந்தது.

* தொற்றில் இருந்து ஒரே நாளில் 10,917 பேர் குணமடைந்துள்ளனர்.

* இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 4,27,72,398 ஆக உயர்ந்துள்ளது.

* இந்தியாவில் குணமடைந்தோர் விகிதம் 98.58% ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்தோர் விகிதம் 1.21% ஆக குறைந்துள்ளது.

* சிகிச்சை பெறுவோர் விகிதம் 0.21% ஆக குறைந்துள்ளது.

* இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 92,576 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

*இந்தியாவில் 1,97,08,51,580 கோடி கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் 12,72,739 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்

LikeGamezop
Like Us on Facebook Dinkaran Daily News
  • boat_medit

    மத்தியதரைக் கடலில் குடியேறியவர்கள் பத்திரமாக மீட்பு..!!

  • nasa-project-artemis

    ஆர்டிமிஸ் 1 திட்டத்துக்கான ஒத்திகையை தொடங்கியது நாசா

  • sea-18

    கடலுக்கு அடியில் அதிசய நகரம்: அழகிய ரோமன் நகரின் அற்புத காட்சி..!!

  • america_fire

    கலிபோர்னியாவை அச்சுறுத்தும் காட்டுத்தீ.. தீயை அணைக்க வீரர்கள் போராட்டம்!!

  • mexico-mine-17

    மெக்சிகோ சுரங்கத்தில் ஏற்பட்ட வெள்ளத்தால் சுரங்கத் தொழிலாளர்களை மீட்கும் முயற்சி தீவிரம்...

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்