சென்ட்ரல் ரயில் நிலையத்தில் 40 லட்சம் மதிப்புள்ள தங்க கட்டிகள் பறிமுதல்
2022-06-26@ 00:38:27

சென்னை: சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து ரயிலில் எடுத்து செல்ல முயன்ற ரூ.40 லட்சம் மதிப்புள்ள தங்க கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டது. சென்னை சென்ட்ரல் நிலையத்தில் நேற்று ஆர்.பி.எப் போலீசார் சோதனை செய்தபோது, ஆந்திர மாநிலம் குண்டூரை சேர்ந்த சாம்பசிவராவ் என்பவரை சந்தேகத்தின் பேரில் சோதனை செய்தபோது, தங்கம் இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து அவரை காவல் நிலையம் அழைத்து சென்று சோதனை செய்த போது அவரிடம் 100 கிராம் எடை கொண்ட 8 தங்க கட்டிகள் இருப்பது தெரியவந்தது.
இதன் மதிப்பு ரூ.40 லட்சம் ஆகும். மேலும், விசாரணையில் சாம்பசிவராவ் சென்னையில் தங்க கட்டிகளை வாங்கி கொண்டு, குண்டூருக்கு ரயில் மூலம் சென்ட்ரல் ரயில் நிலையம் வந்தது தெரியவந்தது. ஆனால், அதற்கான ஆவணம் இல்லை. இதையடுத்து இந்த 8 தங்க கட்டிகளும் பறிமுதல் செய்யப்பட்டு, வருமான வரித்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது.
மேலும் செய்திகள்
சிறுவனை மிரட்டி ஓரினச்சேர்க்கை அரபி பாடசாலை ஆசிரியர் கைது
13 வயது சிறுமி பலாத்காரம்; தாயின் 2வது கணவருக்கு 30 வருடம் சிறைதண்டனை
மயிலாடுதுறையில் நள்ளிரவில் பயங்கரம்; வன்னியர் சங்க நிர்வாகி சரமாரி வெட்டிக்கொலை: 10 பேரை பிடித்து போலீஸ் விசாரணை
திருவள்ளூர் அருகே ரூட்தல பிரச்னையில் கல்லூரி மாணவரை வெட்டிய 3 மாணவர்கள் அதிரடி கைது
துபாயில் இருந்து கடத்தி வந்த 300 கிராம் தங்க பிஸ்கெட்டுகளை பறித்து சென்ற கும்பல் கைது: கடலூரில் போலீசார் அதிரடி
வீட்டில் பதுக்கிய ரூ.1 கோடி கடல் அட்டை பறிமுதல்
மத்தியதரைக் கடலில் குடியேறியவர்கள் பத்திரமாக மீட்பு..!!
ஆர்டிமிஸ் 1 திட்டத்துக்கான ஒத்திகையை தொடங்கியது நாசா
கடலுக்கு அடியில் அதிசய நகரம்: அழகிய ரோமன் நகரின் அற்புத காட்சி..!!
கலிபோர்னியாவை அச்சுறுத்தும் காட்டுத்தீ.. தீயை அணைக்க வீரர்கள் போராட்டம்!!
மெக்சிகோ சுரங்கத்தில் ஏற்பட்ட வெள்ளத்தால் சுரங்கத் தொழிலாளர்களை மீட்கும் முயற்சி தீவிரம்...