அமெரிக்காவில் துப்பாக்கி கட்டுப்பாடு சட்டம் அமலானது: பிரதிநிதிகள் சபையிலும் நிறைவேறியது
2022-06-26@ 00:19:54

வாஷிங்டன்: அமெரிக்க நாடாளுமன்றத்தின் பிரதிநிதிகள் சபையிலும் துப்பாக்கி கட்டுப்பாடு மசோதா நிறைவேற்றப்பட்டது. அமெரிக்காவில் துப்பாக்கி வன்முறை கலாசாரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதையடுத்து, துப்பாக்கியை எடுத்து செல்ல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட வேண்டும் என எதிர்ப்பு குரல்கள் எழுந்தன.இந்நிலையில், துப்பாக்கி கலாசாரத்தை கட்டுப்படுத்தும் வகையில் புதிய சட்டத்தை அமெரிக்கா முன்மொழிந்து உள்ளது.
இதற்கு அமெரிக்க நாடாளுமன்ற மேல் சபையான செனட் சபை ஒப்புதல் அளித்துள்ளது. இதன் மூலம் 21 வயதிற்குப்பட்டவர்கள் துப்பாக்கிகளை வாங்கச் சென்றால் அவர்களை பற்றி விரிவான விசாரணை நடத்தப்படும். இந்த சீர்திருத்தங்கள் அதிபர் ஜோ பைடன் முன்மொழிந்த திருத்தங்களை விடக் குறைவு தான் என்றாலும், 30 ஆண்டுகளுக்குப் பின்னர் இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது. இறுதியாக பிரதிநிதிகள் சபையிலும் நேற்று இந்த மசோதா நிறைவேற்றப்பட்டது. இதன்மூலம், இந்த மசோதா சட்டமாகி உள்ளது. ஜெர்மனியில் நடைபெறும் ஜி7 மாநாட்டில் கலந்து கொள்ள புறப்படும் முன்பாக, இந்த சட்டத்தில் பைடன் கையெழுத்திட்டார். இதனால், இது உடனடியாக அமலுக்கு வந்துள்ளது. இது பற்றி பைடன் கூறுகையில், ‘‘இந்த சட்டத்தின் மூலம் பல மனித உயிர்கள் காப்பாற்றப்படும்,’’ என்றார்.
மேலும் செய்திகள்
இலங்கையில் மின்சார நுகர்வு கட்டணம் கடும் உயர்வு: ரணில் விக்ரமசிங்கே அரசைக் கலைக்க மக்கள் வலியுறுத்தல்
நேட்டோ கூட்டமைப்பில் பின்லாந்து, சுவீடன் நாடுகள் இணையும் உடன்படிக்கையில் கையெழுத்திட்டு ஜோ பைடன் ஒப்புதல்
இந்திய மாணவர்கள் மீண்டும் படிப்பை தொடர நடவடிக்கை: சீன வெளியுறவு அமைச்சகம் தகவல்
வெள்ளை மாளிகை கோப்புகள் மாயம்.! முன்னாள் அதிபர் டிரம்ப் வீட்டில் எப்பிஐ சோதனை: அமெரிக்காவில் பரபரப்பு
சீனாவுக்கு போட்டியாக தைவான் போர் பயிற்சி: மேலும் பதற்றம் அதிகரிப்பு
கண்ணிவெடி தாக்குதலில் பாக். டிடிபி அமைப்பின் தளபதி பலி: ஆப்கான் சென்ற போது பயங்கரம்
ரக்ஷா பந்தனை முன்னிட்டு சென்னை சவுகார்பேட்டையில் ராக்கி கயிறு விற்பனை படு ஜோர்..!!
தைவான் கடல் எல்லைக்குள் ஏவுகணைகளை வீசி சீன ராணுவம் போர் பயிற்சி..!!
பறக்கும் ஹெலிகாப்டரில் 25 புல் அப்ஸ் எடுத்து கின்னஸ் சாதனை படைத்த யூடியூபர்!
எகிப்தில் 4500 ஆண்டு பழமையான சூரிய கோவில் கண்டுபிடிப்பு; தொல்லியல் துறை அசத்தல்..!!
குடியரசு துணைத் தலைவர் தேர்தல்: ஜனநாயக கடமையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, காங். எம்.பி. ராகுல் காந்தி..!!