SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சேலத்து சிங்கம்னு விவிஐபியை பார்த்து கோஷம் எழுப்பிய போலி நபர்களை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

2022-06-26@ 00:11:19

‘‘சேலம் விவிஐபியின் சொந்தக்காரர் ஒருவர்தான் போலி அடையாள அட்டைகளை கொடுத்து... இலையின் பொதுக்குழுவில் கோஷம் போட வைத்தாராமே, அப்படியா...’’ என்றார் பீட்டர் மாமா.‘‘இலைக்கட்சியின் பொதுக்குழு கூட்டத்துல தலைமை பொறுப்பை தட்டிப்பறித்து விடலாம் என்று சேலத்துக்காரர் நினைத்தார். ஆனால், அதிகாலையில அந்த நினைப்பு தவிடு பொடியாகிடிச்சாம். கட்சியில் முதல்வர், எதிர்க்கட்சி தலைவர் என அனைத்து பதவிகளையும் தனது ராஜதந்திரத்தினால் திட்டமிட்டு பறித்தாராம். ஆனால், நீதிமன்ற முடிவால் திட்டம் அப்படியே அப்செட் ஆகிவிட்டதாம். இதனால ரொம்பவே அதிர்ச்சியாயிட்டாராம். மம்மி பொதுக்குழுவை கூட்டினால் குண்டூசி விழுந்தாலும் சத்தம் கேட்கும். ஆனா ரெட்டை தலைமை கூட்டிய பொதுக்குழு சந்தைக்காடாகி போனதாம். கொங்கு மண்டலத்துக்கிட்ட கட்சி வந்தே ஆகணுமுன்னு திட்டம் போட்டு காய் நகர்த்தினாங்களாம். இதுக்கு வடக்கு மண்டலத்தை சேர்ந்த எம்பி பதவியை துறந்தவரையும், புது எம்பி தரப்பினரை வைத்து உசுப்பேத்தி விட்டாங்களாம்.

ரெண்டுபேரும் குதிச்ச குதியை பார்த்து மேடையில் இருந்த தென் மாவட்ட ஆதரவு மாவட்ட செயலாளர்களே அப்செட் ஆகிட்டாங்களாம். 3 முறை முதன்மையானவரா ஆட்சியில் இருந்திருக்காரு, அவருக்கு எதிரா எழுப்பிய கோஷத்தை சேலத்துக்காரர் தடுத்து நிறுத்தியிருக்கலாம். ஆனா அதற்கான எந்த முயற்சியிலும் அவர் ஈடுபடலையாம். இதனால சேலத்துக்காரருக்கு ஆதரவு கொடுத்த கோபிக்காரர் ரொம்பவுமே வேதனை அடைஞ்சாராம். இதனால மேடையில இருந்த பல மாவட்ட செ.க்களின் எண்ணத்திலும் தேனிக்காரர் அடைஞ்ச வேதனை தொத்தியிருக்காம். அன்று நடந்த பொதுக்குழுவுல ‘சேலத்து சிங்கம்’ என்கிற கோஷம் அதிகமா இருந்துச்சாம். இதுக்காக எந்த பொறுப்பும் இல்லாத சவுண்ட் பார்ட்டிகளை போலி பாஸ் கொடுத்து உள்ளே கொண்டு போயிருந்ததாக இலை கட்சியிலேயே பேசிக்கிறாங்க.  கோஷம் போடும் முகத்தை வச்சி பார்த்ததில் இவரு எப்படி உள்ளே போனாருங்கிற கேள்விதான் மாங்கனி மாநகரத்துல ஒரே கேள்வியா இருக்காம். மாங்கனி மாஜி விவிஐபியின் நெருங்கிய உறவினர்தான் உள்ளே கூட்டிக்கிட்டு போனதாக பேசிக்கிறாங்க...’’ என்றார் விக்கியானந்தா.‘‘ அதிகாரத்தை பறிக்கும் திட்டம் தெரிந்தும் புல்லட்சாமி அமைதியாக இருக்கிறாராமே, அப்படியா...’’ என்றார் பீட்டர் மாமா.

‘‘புதுச்சேரி தேஜ கூட்டணி ஆட்சிக்கு வந்தால் பெஸ்ட் புதுச்சேரி ஆக்குவோம் என ‘பவர் புல்லான’ ஒன்றிய இரட்டையர்கள் முழங்கிவிட்டு போனாங்க. ஆனால் ஓராண்டாகியும், எதுவும் புதிதாக வந்துவிடவில்லை. நிதி செயலர், பழைய தலைமை செயலர் வகையிலும் ரூல்ஸ் ராமானுஜமாக செயல்பட்டு திட்டங்களை கெடுத்து வந்தனர். இதற்கிடையே தலைமை செயலர் அதிரடியாக மாற்றப்பட்டார்.இது புல்லட்சாமிக்கு சாதகமாக இருந்தது. புதிய தலைமை செயலரும், ஆளும் அரசின் அன்றாட நடவடிக்கைகளுக்கு ஒத்துழைத்தார். இதற்கிடையே புதுச்சேரி வளர்ச்சி திட்டங்கள் குறித்து நடந்த கூட்டத்தில் தலைமை செயலர், நிதி செயலர் உள்ளிட்ட முக்கிய துறையின் செயலர்கள் கலந்து கொண்டனர்.அப்போது ஏஎப்டி மில்லின் பட்டானூர் இடம் விற்பனை, விமான நிலைய விரிவாகத்துக்கு நில ஆர்ஜிதம் உள்ளிட்ட விவகாரங்களில் புல்லட்சாமியின் நில அதிகாரத்தின் விதிகள் தடையாக இருப்பதால், எதுவும் செய்ய முடியவில்லை. மத்திய அரசின் உடனடி உதவி கிடைப்பதில் சிக்கல் நிலவுவதாக தலைமை செயலர் தெரிவித்துள்ளார். இதற்கு தீர்வாக புல்லட்சாமியின் நில அதிகாரம் கவர்னருக்கு மாற்றப்பட்டால், கூடுதல் அதிகாரம் கிடைக்கும் உடனடியாக நிலம் விற்பனை, வாங்குவதில் உள்ள சிக்கல்களையும் தீர்த்துக்கொள்ள முடியும் என தலைமை செயலர் தனது ஆலோசனையை தெரிவித்தார். இந்த கூட்டத்தில் இசையும், புல்லட்சாமியும் கலந்து கொண்டபோதும், நில அதிகார விவகாரத்தில் புல்லட்சாமி எதிர்ப்பு தெரிவிக்காமல் அமைதியாக இருந்துள்ளார்.

இத்தகவல் வெளியே கசிந்ததால், எதிர்கட்சிகள் புதுச்சேரியிடமிருந்து நில, நிர்வாக, நிதி அதிகாரத்தை ஒன்றிய அரசு பறிக்க பார்க்கிறது. மாநில அந்தஸ்துக்காக கட்சி ஆரம்பித்த புல்லட்சாமி இப்போதும் மவுனசாமியாக இருப்பது ஏன் என கேள்வி மேல் கேள்வி எழுப்புகின்றனர். இசையும், இதனை ஒரேயடியாக மறுக்காமல் நான் யாருடைய உரிமையிலும் தலையிடவில்லை என்றும் மழுப்புகிறார்... அதிகாரம் பறிபோகும் நிலையிலும் புல்லட்சாமி அமைதி காப்பது ஏன் என்பதுதான் மில்லியன் டாலர் கேள்வியாக இருக்காம்...’’ என்றார் விக்கியானந்தா.‘‘ஒற்றை தலைமை விவகாரத்தில் மாஜி அமைச்சர் கப்சிப் ஆன கதையை சொல்லேன்... ’’ என்றார் பீட்டர் மாமா.‘‘ தேனிக்காரர் தர்மயுத்தம் நடத்தியபோது மன்னர் மாவட்டத்தை சேர்ந்த தேனிக்காரரின் ஆதரவாளர்களான இரண்டு எம்எல்ஏக்கள் உள்பட முக்கிய நிர்வாகிகள் அவருக்கு கடைசி வரையிலும் விசுவாசியாக இருந்தார்களாம். ஆனால், தனக்கு ஆதரவாக இருந்த விசுவாசிகளுக்கு தேனிக்காரர் கட்சியில் பெரிதாக உதவி எதுவும் செய்யவில்லையாம். தற்போது ஒற்றை தலைமை விவகாரத்தில், இவர்கள் சேலத்துக்காரருக்கு திடீர் என ஆதரவு தெரிவித்துள்ளார்களாம். இதனால் தேனிக்காரர் அணி கடும் அதிர்ச்சியில் உள்ளதாம்.

மன்னர் மாவட்டத்தில் முக்கிய நிர்வாகிகள் பலரும், சேலத்துக்காரருக்கு தான் ஆதரவு கரம் நீட்டியுள்ளார்களாம். மாஜி நகர மன்ற தலைவர் மட்டும் தேனிக்காரருக்கு விசுவாசியாக இருந்து வருகிறாராம். அவரும் சேலத்துக்காரர் பக்கம் எப்போது சாய்வார் எனவும் தெரிய வில்லையாம். இந்த பிரச்னைக்குள் மன்னர் மாவட்டத்தை சேர்ந்த மாஜி அமைச்சர் மட்டும் ஒற்றை தலைமை விவகாரத்தில் ‘கப்சிப்பாக’ இருந்து வருகிறாராம். அவர் யாருக்கு ஆதரவு தெரிவிப்பது என தெரியாமல் கொஞ்சம் ஒதுங்கியே இருந்து வருவதாக மன்னர் மாவட்ட இலைகட்சிக்குள் அரசல் புரசலாக பேசிக்கிறாங்க...’’ என்றார் விக்கியானந்தா.    

மேலும் செய்திகள்

LikeGamezop
Like Us on Facebook Dinkaran Daily News
 • america_fire

  கலிபோர்னியாவை அச்சுறுத்தும் காட்டுத்தீ.. தீயை அணைக்க வீரர்கள் போராட்டம்!!

 • mexico-mine-17

  மெக்சிகோ சுரங்கத்தில் ஏற்பட்ட வெள்ளத்தால் சுரங்கத் தொழிலாளர்களை மீட்கும் முயற்சி தீவிரம்...

 • oil-tanker-17

  பாகிஸ்தானில் ஆயில் டேங்கர் லாரியும், பயணிகள் பேருந்தும் மோதி தீ விபத்து.. 20 பேர் உடல் கருகி உயிரிழப்பு..!!

 • kite_chennai

  மாமல்லபுரத்தில் நடைபெற்ற பிரம்மாண்ட பட்டத் திருவிழா..!!

 • poland-fish-16

  போலந்தில் நதிநீர் மாசுபாட்டால் டன் கணக்கில் செத்து மிதக்கும் மீன்கள்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்