குளிர்பானத்தில் மது கலந்து கொடுத்து தங்கையின் தோழியை பலாத்காரம் செய்ய முயற்சி: வாலிபர் கைது
2022-06-25@ 18:55:04

புதுக்கோட்டை: தங்கையின் திருமணத்திற்கு வந்த தோழிக்கு குளிர்பானத்தில் மது கலந்து கொடுத்து பலாத்காரம் செய்ய முயற்சித்த டிரைவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அருகே சூசைப்புடையான்பட்டியை சேர்ந்தவர் சிவா(28). டிரைவர். இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். இந்தநிலையில் இவரது தங்கையின் திருமணம் நேற்று முன்தினம் நடந்தது. திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக மணப்பெண்ணின் தோழி கரூரை சேர்ந்த 19 வயது பெண் வந்திருந்தார். அவரது அழகில் மயங்கிய சிவா, அந்த பெண்ணுக்கு குளிர்பானத்தில் பீரை கலந்து கொடுத்தார்.
சற்று நேரத்தில் போதை தலைக்கேறியதும் மயங்கிய அந்த இளம்பெண்ணை ஒரு வீட்டுக்கு அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றார். அப்போது அந்த இளம்பெண் திடீரென சுதாரித்துக்கொண்டு பதற்றத்துடன் சிவாவின் பிடியிலிருந்து தப்பி வந்து உறவினர்களிடம் நடந்த சம்பவத்தை கூறினார். இதையடுத்து அவர்கள் கீரனூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.
புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் லதா தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றதாக சிவா மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புதுக்கோட்டை சிறையில் அடைத்தனர். தங்கையின் திருமணத் திற்கு வந்த தோழியை வாலிபர் பலாத்காரம் செய்ய முயற்சித்தது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் செய்திகள்
சிறுவனை மிரட்டி ஓரினச்சேர்க்கை அரபி பாடசாலை ஆசிரியர் கைது
13 வயது சிறுமி பலாத்காரம்; தாயின் 2வது கணவருக்கு 30 வருடம் சிறைதண்டனை
மயிலாடுதுறையில் நள்ளிரவில் பயங்கரம்; வன்னியர் சங்க நிர்வாகி சரமாரி வெட்டிக்கொலை: 10 பேரை பிடித்து போலீஸ் விசாரணை
திருவள்ளூர் அருகே ரூட்தல பிரச்னையில் கல்லூரி மாணவரை வெட்டிய 3 மாணவர்கள் அதிரடி கைது
துபாயில் இருந்து கடத்தி வந்த 300 கிராம் தங்க பிஸ்கெட்டுகளை பறித்து சென்ற கும்பல் கைது: கடலூரில் போலீசார் அதிரடி
வீட்டில் பதுக்கிய ரூ.1 கோடி கடல் அட்டை பறிமுதல்
மத்தியதரைக் கடலில் குடியேறியவர்கள் பத்திரமாக மீட்பு..!!
ஆர்டிமிஸ் 1 திட்டத்துக்கான ஒத்திகையை தொடங்கியது நாசா
கடலுக்கு அடியில் அதிசய நகரம்: அழகிய ரோமன் நகரின் அற்புத காட்சி..!!
கலிபோர்னியாவை அச்சுறுத்தும் காட்டுத்தீ.. தீயை அணைக்க வீரர்கள் போராட்டம்!!
மெக்சிகோ சுரங்கத்தில் ஏற்பட்ட வெள்ளத்தால் சுரங்கத் தொழிலாளர்களை மீட்கும் முயற்சி தீவிரம்...