மும்பை தாக்குதல் வழக்கில் குற்றவாளிக்கு 15 ஆண்டு சிறை: பாக். நீதிமன்றம் அதிரடி
2022-06-25@ 16:26:24

லாகூர்: மும்பை தாக்குதல் வழக்கில் குற்றவாளிக்கு 15 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி பாகிஸ்தான் நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் கடந்த 2008, நவம்பர் 26ம் தேதி அடுத்தடுத்து பயங்கரவாத தாக்குதல்கள் நடந்தது. இதில் 166 பேர் உயிரிழந்தனர். பாகிஸ்தானில் இயங்கி வரும் லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்பை சேர்ந்த பயங்கரவாதிகள் இந்த தாக்குதலை நடத்தினர். தாக்குதல் நடத்திய 9 பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரால் சுட்டு கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு லஷ்கர் இ தொய்பா அமைப்பின் தலைவன் ஹபீஸ் சயது என்ற பயங்கரவாதி மூளையாக செயல்பட்டுள்ளான்.
பயங்கரவாதத்திற்கு நிதி திரட்டிய வழக்கில் ஹபீஸ் சையத்திற்கு பாகிஸ்தான் நீதிமன்றம் 15 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கியது. இதையடுத்து, லாகூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளான். இதனிடையே, மும்பை தாக்குதல் வழக்கில் தொடர்புடைய மற்றொரு குற்றவாளி சஜீத் மஜீத் மீர். பயங்கரவாதத்திற்கு நிதி திரட்டிய வழக்கில் மஜீதை, பாகிஸ்தான் போலீசார் கைது செய்து சிறையிலடைத்தனர். இந்த வழக்கு லாகூர் பயங்கரவாத தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இதில், பயங்கரவாதத்திற்கு மஜீத் நிதி திரட்டியது நிரூபிக்கப்பட்டது. இதையடுத்து குற்றவாளி மஜீத்திற்கு 15 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, சிறையில் அடைக்கப்பட்டான்.
மேலும் செய்திகள்
அடுத்த வாரம் இலங்கை திரும்புகிறார் கோத்தபய ராஜபக்சே?
சீனா - இலங்கை நட்பு பலப்படும்: சீன உளவு கப்பல் கேப்டன் கருத்து
நாங்களும் யூஸ் பண்ணுவோம்ல... குரங்குகளும் விதி விலக்கல்ல
60 ஆண்டுகளில் இல்லாத வகையில் வெப்பத்தின் பிடியில் சிக்கி தவிக்கும் சீனா: தொழிற்சாலைகளை மூட உத்தரவு
ஓமன் நாட்டில் சிக்கி தவிக்கும் இளைஞர்; அவரை பிரிந்து குமரியில் வாடும் 3 குழந்தைகள்: தங்களை காப்பாற்றுமாறு முதலமைச்சருக்கு கண்ணீர்மல்க கோரிக்கை
இலங்கையில் அவசர நிலை பிரகடனம் நீட்டிக்கப்படாது: அதிபர் ரணில் விக்ரமசிங்கே திட்டவட்டமாக அறிவிப்பு..!!
கலிபோர்னியாவை அச்சுறுத்தும் காட்டுத்தீ.. தீயை அணைக்க வீரர்கள் போராட்டம்!!
மெக்சிகோ சுரங்கத்தில் ஏற்பட்ட வெள்ளத்தால் சுரங்கத் தொழிலாளர்களை மீட்கும் முயற்சி தீவிரம்...
பாகிஸ்தானில் ஆயில் டேங்கர் லாரியும், பயணிகள் பேருந்தும் மோதி தீ விபத்து.. 20 பேர் உடல் கருகி உயிரிழப்பு..!!
மாமல்லபுரத்தில் நடைபெற்ற பிரம்மாண்ட பட்டத் திருவிழா..!!
போலந்தில் நதிநீர் மாசுபாட்டால் டன் கணக்கில் செத்து மிதக்கும் மீன்கள்..!!