ஒரே நாளில் ராக்கெட் வேகத்தில் எகிறிய தங்க விலை..!!! சவரனுக்கு ரூ.80 உயர்ந்து ரூ.38,040க்கு விற்பனை!!
2022-06-25@ 10:20:24

சென்னை: தங்கம் விலை இன்று சவரனுக்கு ரூ.80 உயர்ந்தது என நகை வியாபாரிகள் தெரிவித்தனர். தங்கம் விலை கடந்த சில மாதங்களாக ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கடந்த 15ம் தேதி தங்கம் விலை சவரனுக்கு .200 குறைந்து ஒரு சவரன் ரூ.37,720க்கு விற்கப்பட்டது. பின்னர் 16,17ம் தேதிகளில் சவரன் ரூ.120 மற்றும் ரூ.160 என அதிகரித்து ஒரு சவரன் ரூ.38,000க்கும் விற்பனையானது. தொடர்ச்சியாக 2 நாட்களில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.280 அதிகரித்தது. இந்த விலை அதிகரிப்பு நகை வாங்குவோரை அதிர்ச்சிக்குள்ளாக்கி வந்தது.
இந்நிலையில் 18ம் தேதி தங்கம் விலை கிராமுக்கு 10 குறைந்து ஒரு கிராம் ரூ.4,765க்கும், சவரனுக்கு ரூ.80 குறைந்து ஒரு சவரன் 38,120க்கும் விற்கப்பட்டது. ஞாயிற்றுக்கிழமை தங்க மார்க்கெட்டுக்கு விடுமுறை என்பதால், அன்றைய தினம் சனிக்கிழமை விலையிலேயே தங்கம் விற்பனை செய்யப்பட்டது. பின்பு, இந்த வார தொடக்கத்தில் தங்கம், கிராமுக்கு ரூ.10 அதிகரித்து ஒரு கிராம் ரூ.4,775க்கும், சவரனுக்கு ரூ.80 அதிகரித்து ஒரு சவரன் ரூ.38,200க்கும் விற்கப்பட்டது. அதற்கு மறுநாளே, கிராமுக்கு ரூ.10 குறைந்து ஒரு கிராம் 4,765க்கும், சவரன் 80 குறைந்து ரூ. 38,120க்கும் விற்பனையானது.
நேற்று தங்கம் விலை கிராமுக்கு 20 குறைந்து ஒரு கிராம் ரூ.4,745க்கும், சவரனுக்கு ரூ.160 குறைந்து ஒரு சவரன் ரூ.37,960க்கும் விற்கப்பட்டது. இந்த நிலையில், இன்று ராக்கெட் வேகத்தில் அதிகரித்த தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 உயர்ந்து ரூ.38,040க்கு விற்பனை ஆகிறது. ஒரு கிராம் ரூ.10 உயர்ந்து ரூ. 4,755க்கு விற்பனையாகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் வெள்ளியின் விலை ரூ.30 காசு குறைந்து ஒரு கிராம் ரூ.65.70க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.65,700க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
மேலும் செய்திகள்
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.40 உயர்ந்து ரூ.39,120-க்கு விற்பனை
தங்கம் விலையில் அதிரடி; காலையில் குறைந்து மாலையில் அதிகரிப்பு: நகை வாங்குவோர் குழப்பம்
ரூ. 38 ஆயிரத்துக்கு கீழ் சென்றது தங்கத்தின் விலை.: சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.264 குறைந்து, ரூ.38,880-க்கு விற்பனை
சரிவுடன் தொடங்கிய தங்கவிலை... சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.56 குறைவு..!!
தங்கம் விலையில் அதிரடி மாற்றம்: இன்று காலையில் ரூ.240 உயர்ந்தது, பவுன் ரூ.39 ஆயிரத்தை தாண்டியது
சற்று உயர்வை காணும் தங்க விலை... சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.40 உயர்ந்து, ரூ.38,800-க்கு விற்பனை
நாட்டின் 75-வது சுதந்திர தின கொண்டாட்டம்: மூவர்ண விளக்குகளால் ஜொலிக்கும் ஒன்றிய, மாநில அரசு கட்டடங்கள்..!!
போதையைத் தவிர்..கல்வியால் நிமிர்!: தமிழக பள்ளி மாணவர்கள் போதைக்கு எதிராக உறுதிமொழி ஏற்பு..!!
கியூபாவில் பயங்கர தீ விபத்து: 17 பேர் பலி..!!
தென்கொரியாவை புரட்டிபோட்ட கனமழை!! இதுவரை 9 பேர் பலி..
பிரிட்டன் ஃபார்ன் தீவில் பரவும் பறவை காய்ச்சல்: ஆயிரக்கணக்கான பறவைகள் துடிதுடித்து இறப்பு..!!