முகவரி கேட்பதுபோல் நடித்து மூதாட்டியை தாக்கி 5 சவரன் பறிப்பு
2022-06-25@ 01:29:44

புழல்: சோழவரம் அருகே ஆங்காடு கிராமம், பஜனை கோயில் தெருவை சேர்ந்தவர் சாந்தா (60). இவர், நேற்று காலை தனது வீட்டு வாசல் முன்பு கோலம் போட்டுக் கொண்டிருந்தார். அப்போது, பைக்கில் வந்த 2 மர்ம நபர்கள், சாந்தாவிடம் முகவரி கேட்பது போல், நைசாக பேச்சு கொடுத்தனர். அப்போது, சாந்தா கழுத்தில் அணிந்து இருந்த 5 சவரன் செயினை ஒரு மர்ம நபர் பறிக்க முயன்றார். இதனால், அதிர்ச்சியடைந்த அவர், செயினை கெட்டியாக பிடித்துக்கொண்டு, ‘‘திருடன்திருடன்’’ என அலறி கூச்சலிட்டார்.
இதனால், ஆத்திரமடைந்த மர்ம நபர்கள் இருவரும், சாந்தாவை சரமாரியாக தாக்கி, காலால் எட்டி உதைத்து கீழே தள்ளிவிட்டு, செயினைப் பறித்துக்கொண்டு, பைக்கில் ஏறி மின்னல் வேகத்தில் அங்கிருந்து தப்பி சென்றனர். இதில், அவருக்கு லேசான காயம் ஏற்பட்டது. புகாரின்பேரில், சோழவரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள் மூலம் 2 மர்ம நபர்களையும் வலைவீசி தேடி வருகின்றனர். இதேபோல், கடந்த சில நாட்களுக்கு முன் பூதூர் பகுதியில், மூதாட்டி ஒருவரிடம் முகவரி கேட்பது போல் நடித்து ஒரு சவரன் கம்மலை மர்ம நபர்கள் பறித்து சென்றது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகள்
நாங்குநேரியில் 1 கிலோ தங்கம் கடத்தி வந்த 4 பேர் சிக்கினர்
தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழக தேர்வு எழுத பாஜ மாவட்ட தலைவருக்காக ஆள்மாறாட்டம் செய்தவர் கைது
நெய்வேலியில் பயங்கரம் பிரபல ரவுடி வெட்டிக்கொலை
எத்தியோப்பியாவில் இருந்து சென்னைக்கு கடத்திய ரூ.11.41 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல்: அங்கோலா பெண் கைது
தனியார் நகை கடன் வழங்கும் வங்கியில் ஊழியர்களை கட்டி போட்டு ரூ.20 கோடி நகைகள் கொள்ளை
கல்பாக்கம் அருகே தனியார் பள்ளியில் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் அதிரடி கைது: உறவினர்கள் சாலை மறியலால் பரபரப்பு
நாட்டின் 75-வது சுதந்திர தின கொண்டாட்டம்: மூவர்ண விளக்குகளால் ஜொலிக்கும் ஒன்றிய, மாநில அரசு கட்டடங்கள்..!!
போதையைத் தவிர்..கல்வியால் நிமிர்!: தமிழக பள்ளி மாணவர்கள் போதைக்கு எதிராக உறுதிமொழி ஏற்பு..!!
கியூபாவில் பயங்கர தீ விபத்து: 17 பேர் பலி..!!
தென்கொரியாவை புரட்டிபோட்ட கனமழை!! இதுவரை 9 பேர் பலி..
பிரிட்டன் ஃபார்ன் தீவில் பரவும் பறவை காய்ச்சல்: ஆயிரக்கணக்கான பறவைகள் துடிதுடித்து இறப்பு..!!