ரூ.10 கோடி திமிங்கல எச்சம் பறிமுதல்: பதுக்கிய 3 பேர் மதுரையில் கைது
2022-06-25@ 00:48:57

மதுரை: மதுரையில் ரூ.10 கோடி மதிப்பிலான திமிங்கல எச்சத்தை பதுக்கி வைத்திருந்த வாலிபர் உட்பட 3 பேரை வனத்துறையினர் கைது செய்து விசாரித்து வருகின்றனர். விலை உயர்ந்த வாசனை திரவியங்கள் மற்றம் மருந்து பொருட்களை தயாரிக்க பயன்படுத்தப்படும், அரசால் தடை செய்யப்பட்ட திமிங்கல எச்சம், மதுரை தெற்குவாசல் பகுதி மறவர் சாவடி பகுதியில் ஒரு கடையில் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக வனத்துறை அதிகாரி குருசாமி தபாலாவுக்கு நேற்று முன்தினம் இரவு தகவல் கிடைத்தது. இதையடுத்து அவரது தலைமையில் வனத்துறை அலுவலர்கள் மற்றும் தெற்குவாசல் போலீசார், சம்பவ இடத்திற்கு சென்று சோதனை செய்தனர்.
இதில் மஞ்சணக்கார தெருவை சேர்ந்த ராஜாராம் (36) என்பவருக்கு சொந்தமான கடையில் 10 கிலோ எடை கொண்ட ரூ.10 கோடி மதிப்புள்ள திமிங்கல எச்சம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. விசாரணையில், தூத்துக்குடி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்து சேகரிக்கப்பட்ட திமிங்கல எச்சத்தை சேகரித்து கொண்டு வந்து, கடையில் பதுக்கி வைத்து ராஜாராம் விற்பனை செய்து வந்துள்ளார் என்பது தெரியவந்தது.
அவருக்கு உடந்தையாக அவரது நண்பர்கள் வில்லாபுரம் ஹவுசிங் போர்டு காலனி பகுதியைச் சேர்ந்த சுந்தரபாண்டி (36), சிவகங்கை மாவட்டம் கீரனூர் பகுதியைச் சேர்ந்த கவி (48) ஆகியோர் செயல்பட்டுள்ளனர். இதையடுத்து ராஜாராம் உட்பட 3 பேரையும் கைது செய்து, அவர்கள் பதுக்கி வைத்திருந்த திமிங்கல எச்சத்தையும் வனத்துறையினர் பறிமுதல் செய்தனர். வனத்துறை அதிகாரிகள் கூறும்போது, ‘‘‘‘அரசால் தடை செய்யப்பட்ட திமிங்கல எச்சத்தை இவர்களுக்கு சப்ளை செய்தது யார், எத்தனை நாட்களாக இந்த தொழிலில் இவர்கள் ஈடுபட்டு வருகின்றனர் என்று விசாரணை நடத்தி வருகிறோம்.
மேலும் செய்திகள்
நாங்குநேரியில் 1 கிலோ தங்கம் கடத்தி வந்த 4 பேர் சிக்கினர்
தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழக தேர்வு எழுத பாஜ மாவட்ட தலைவருக்காக ஆள்மாறாட்டம் செய்தவர் கைது
நெய்வேலியில் பயங்கரம் பிரபல ரவுடி வெட்டிக்கொலை
எத்தியோப்பியாவில் இருந்து சென்னைக்கு கடத்திய ரூ.11.41 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல்: அங்கோலா பெண் கைது
தனியார் நகை கடன் வழங்கும் வங்கியில் ஊழியர்களை கட்டி போட்டு ரூ.20 கோடி நகைகள் கொள்ளை
கல்பாக்கம் அருகே தனியார் பள்ளியில் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் அதிரடி கைது: உறவினர்கள் சாலை மறியலால் பரபரப்பு
நாட்டின் 75-வது சுதந்திர தின கொண்டாட்டம்: மூவர்ண விளக்குகளால் ஜொலிக்கும் ஒன்றிய, மாநில அரசு கட்டடங்கள்..!!
போதையைத் தவிர்..கல்வியால் நிமிர்!: தமிழக பள்ளி மாணவர்கள் போதைக்கு எதிராக உறுதிமொழி ஏற்பு..!!
கியூபாவில் பயங்கர தீ விபத்து: 17 பேர் பலி..!!
தென்கொரியாவை புரட்டிபோட்ட கனமழை!! இதுவரை 9 பேர் பலி..
பிரிட்டன் ஃபார்ன் தீவில் பரவும் பறவை காய்ச்சல்: ஆயிரக்கணக்கான பறவைகள் துடிதுடித்து இறப்பு..!!