‘சின்னத்தை முடக்கிருவாங்க... அப்புறம் என்ன சின்னம்மா தான்..’ என குக்கரு விசிலடிப்பதை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா
2022-06-25@ 00:18:37

‘‘ரேஷன் அரிசி கடத்தலுக்கு மைய புள்ளி யாருனு தேடறாங்களாமே..’’ என்று கேட்டார் பீட்டர் மாமா. ‘‘குயின்பேட்டை மாவட்டத்தில் ஆறு காடான ஊர் இருக்குது. இந்த ஊர்ல மக்கன்பேடா, பிரியாணி ஸ்பெஷல், இப்ப ரேஷன் ரைஸ் கடத்தல் ஸ்பெஷல் ஏரியாவாக மாறிகிட்டு வருதாம். இந்த ஊர்ல சில மாசத்துக்கு முன்னாடி, மூட்டை மூட்டையாக ரேஷன் ரைஸ் பறிமுதல் செஞ்சாங்களாம். இதுல ரேஷன் கடைக்கு அனுப்புன மூட்டையை பிரிக்காமலேயே, அப்படியே கடத்திகிட்டு போனதை பார்த்து அதிகாரிங்க ஷாக் ஆகிட்டாங்களாம்.
இதையடுத்து மாவட்ட உயர் அதிகாரிங்க ரேஷன் ரைஸ் கடத்தல தீவிரமாக கண்காணிக்க உத்தரவிட்டிருக்காங்க. அதுக்கு அப்புறமா, பஸ்கள்ல கடத்த முயன்றவர்கள கைது செஞ்சாங்களாம். குடோன் உரிமையாளர்களையும், டிரைவர்களையும் கைது செஞ்சாங்களாம். கடத்தலுக்கு உடந்தையாக இருந்த சிலரையும் கைது செஞ்சாங்களாம். ஆனா, இந்த கடத்தல் எங்கிருந்து ஆரம்பிக்குது, முக்கியபுள்ளி யாரு, மையப்புள்ளியாக செயல்படுறது யாருன்னு இன்னமும் தெரியலையாம். கண்டுபிடிக்க முடியலையா, கண்டுக்கலையான்னு ஜனங்களுக்கு சந்தேகம் வந்திருக்குது.
இதனால, சம்மந்தப்பட்ட மாவட்ட அதிகாரிங்க, ரேஷன் ரைஸ் கடத்தலை தடுக்க, எங்கிருந்து கடத்தல் தொடருதுன்னு கண்டுபிடிச்சு கடத்தலை தடுக்க நடவடிக்கை எடுக்கணும்னு ஜனங்க கோரிக்கை வெச்சிருக்காங்க’’ என்றார் விக்கியானந்தா. ‘‘ஒருங்கிணைப்பில் இருந்து இணை ஒருங்கிணைப்புக்கு தாவியது ஏனாம்..’’ என சிரித்தார் பீட்டர் மாமா. ‘‘மெடல் மாவட்ட இலைக்கட்சியில் மேற்கு, கிழக்கு என இரு மாவட்டங்கள் இருக்கின்றன. இதில் மேற்குப்புற மாவட்டத் தலைமையாக முன்னாள் பால்வளமும் கிழக்கில் முன்னாள் சபாநாயகரின் உடன்பிறப்பான நிலாவானவரும் இருக்கின்றனர்.
இருவருக்கும் கடும் மோதல் வந்த நிலையில், முன்னாள் பால்வளம், இணை ஒருங்கிணைப்பாளரின் தீவிர ஆதரவாளராக மாறிப்போனார். இவரை எதிர்க்கும் வகையில் நிலாவானவர் ஒருங்கிணைப்பாளருக்கு தன் ஆதரவை தீவிரமாகக் காட்டி, முழுமையான ஆதரவாளராக மாறினார். மெடல் மாவட்டம் முழுக்க நிலா தரப்பினர், ஒருங்கிணைப்பிற்கு ஆதரவாக தலைமகனே வா.. தலைமை ஏற்க வா.. என்று போஸ்டர்கள் ஒட்டி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி, எதிர்தரப்பை கலங்கடித்தார்களாம். இதையடுத்து, இவரை சரிக்கட்ட, உதயமான முன்னாள் மந்திரி களத்தில் இறங்கினாராம்.
இதுமாதிரி வேலைகளில் கில்லாடியான அவர், நிலா தரப்பை சந்தித்து பேசியிருக்கிறார். இதன்பிறகு தனது நிலைப்பாட்டை மாற்றி, நிலா தரப்பு இணை ஒருங்கிணைப்பிற்கு ஆதரவு அறிவிப்பை வெளியிட்டதாம். ஒருங்கிணைப்பிற்கு ஆதரவளித்தால், வரும் நாட்களில் மாவட்டப்பதவியே பறிபோகலாம் என்ற அச்சத்தை, தனது சந்திப்பின் போது உதயம் ஏற்படுத்தி விட்டதாகவும், அதனால் தான் நிலா பதறியடித்து, பல்டியடித்து விட்டதாகவும் மாவட்ட இலைக்கட்சியினர் தங்களுக்குள் காது கடிக்கிறார்கள்’’ என்றார் விக்கியானந்தா.
‘‘தரமற்ற பணிகள் மூலம் மாஜி மந்திரி பல கோடி சுருட்டி விட்டதா சேதி உலாவுதே..’’ ‘‘கடலோர மாவட்டத்தில் தூண்டில் வளைவு, மீன்பிடித்துறைமுகம் அமைப்பதற்கும், கடல் அரிப்பை தடுக்க கருங்கல் கட்டுவதற்காகவும் கடந்த இலை ஆட்சியின் போது ₹750 கோடிக்கு திட்டம் தீட்டப்பட்டு அதற்கான ஒப்பந்தப்புள்ளிகள் பெறப்பட்டு பணிகள் நடந்து வருகின்றன. இதில் மாஜி அமைச்சர் மணியானவர் உதவியுடன் செயற்பொறியாளர், கண்காணிப்பு பொறியாளர்கள் கூட்டணி சேர்ந்து மிகப்பெரிய அளவில் ‘விட்டமின் ப’ பெற்றுள்ளார்களாம்.
இதனாலேயே பணிகள் தரம் இல்லாமல் நடந்து வருகிறதாம். குறிப்பாக, தரமற்ற கற்கள் மூலம் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், இந்த பணிகள் மூலம் கடந்த இலை ஆட்சியில் பல கோடி சுருட்டப்பட்டுள்ளதாகவும் குற்றச்சாட்டு இருந்து வருகிறது. இதுகுறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும் எனவும், தற்போது நடைபெற்று வரும் இந்த பணிகள் தரமற்றதாக உள்ளதாக கடலோர நகர் முழுவதும் ஒட்டப்பட்ட போஸ்டர்களால் மாஜி அமைச்சர், அவருடைய ஆதரவாளர்களான அதிகாரிகள் ‘கிலி’யில் இருந்து வருகிறார்களாம்’’ என்றார் விக்கியானந்தா.
‘‘சின்னமம்மி குக்கரு நிலையென்ன...’’ ‘‘சேலத்துக்காரருக்கும், தேனிக்காரருக்கும் வெடித்துள்ள முட்டல் மோதலால் மாங்கனி மாவட்டத்தில் குக்கர் கட்சிக்காரங்களும், சின்ன மம்மியின் ஆதரவாளர்களும் செம குஷியில் இருக்காங்களாம். பொதுக்குழுவில் சேலம் கோஷ்டியும், தேனி கோஷ்டியும் முட்டிக் கொண்டதால் இலையின் நிலை இனிமேல் அவ்வளவு தான். எப்படியும் தேனிக்காரரு கோர்ட்டுக்கு போயி, சின்னத்தை முடக்கிடுவாரு. அப்புறம் அங்க இருக்கிற ரத்தத்தின் ரத்தங்களுக்கு ஒரே அடைக்கலம் சின்ன மம்மியும் நாங்களும் தான்.
இந்த மாதிரி ஒரு சந்தர்ப்பத்தை எதிர்பார்த்துதான் சின்னமம்மியும் காத்திருக்காங்க. குக்கர் கட்சி தலைவரும் அதுக்காகத்தான் வெயிட் பண்றாரு. ஏற்கனவே ஜெனரல் செகரிட்டரியாக இருந்த சின்ன மம்மியை தேடித்தான் எல்லாரும் வருவாங்க. அவங்க கூட தேனிக்காரரு வந்தா சேத்துக்குவோம். ஆனால் சேலத்துக்காரரை மட்டும் எந்த நிலையிலும் சேத்துக்கவே மாட்டோம் என்று மாவட்ட நிர்வாகி ஒருத்தரு பப்ளிக்கில் போட்டு உடைச்சாராம். இது என்னடா அண்ணன் எப்ப சாவான், திண்ணை எப்போ காலியாகும் கதையா இருக்கே என்று நொந்து கொண்டார்களாம் அடிமட்ட ரத்தத்தின் ரத்தங்கள்’’ என்றார் விக்கியானந்தா.
மேலும் செய்திகள்
தேனியை தன் கட்டுப்பாட்டில் கொண்டு வர மாஜி அமைச்சரை களம் இறக்கியுள்ள நபரை பற்றி சொல்கிறார் wiki யானந்தா
சின்ன மம்மிக்காக தேனிக்காரருடன் ரகசிய பேச்சுவார்த்தை நடத்திவரும் நபரை பற்றி சொல்கிறார் wiki யானந்தா
20 ஆடுபுலி ஆட்டம் ஆடும் இலை கட்சியின் மாஜி அமைச்சரால் கடுப்பாகும் சின்ன மம்மி ஆட்களை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா
தேனி ஆதரவாளரை வரவேற்காமல் வறுத்தெடுத்த குக்கர் நிர்வாகிகளை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா
இலை கட்சியின் மாஜி அமைச்சர் சினிமா நடிகைக்கு அல்வா கொடுத்த கதையை சொல்கிறார்: wiki யானந்தா
மக்களையும், மிக்சரையும் கைவிட்ட இலை கட்சி நிர்வாகிகளை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா
ரக்ஷா பந்தனை முன்னிட்டு சென்னை சவுகார்பேட்டையில் ராக்கி கயிறு விற்பனை படு ஜோர்..!!
தைவான் கடல் எல்லைக்குள் ஏவுகணைகளை வீசி சீன ராணுவம் போர் பயிற்சி..!!
பறக்கும் ஹெலிகாப்டரில் 25 புல் அப்ஸ் எடுத்து கின்னஸ் சாதனை படைத்த யூடியூபர்!
எகிப்தில் 4500 ஆண்டு பழமையான சூரிய கோவில் கண்டுபிடிப்பு; தொல்லியல் துறை அசத்தல்..!!
குடியரசு துணைத் தலைவர் தேர்தல்: ஜனநாயக கடமையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, காங். எம்.பி. ராகுல் காந்தி..!!