விலகினார் ஹலேப்: பைனலில் பியான்கா
2022-06-25@ 00:08:41

ஹோம்பர்க்: ஜெர்மனியில் பேட் ஹோம்பர்க் ஓபன் மகளிர் டென்னிஸ் போட்டி நடக்கிறது. அதன் காலிறுதி ஒன்றில் முன்னணி வீராங்கனையான ரஷ்யாவின் டாரியா கசட்கினாவை(25வயது , 13வது ரேங்க்) வீழ்த்தி கனடாவின் பியான்கா ஆண்டிரீஸ்கு(22வயது, 64வது ரேங்க்) அரையிறுதிக்கு மு ன்னேறினார். முன்னாள் யுஎஸ் கிராண்ட் ஸ்லாம் சாம்பியனான பியான்கா, கொரோனா காலத்துக்கு பிறகு பெரிய அளவில் வெற்றியை குவிக்க முடியாமல் திணறி வந்தார்.
இந்நிலையில் இந்த ஆண்டில் முதல் முறையாக இந்த தொடரில் தான் அரையிறுதிக்கு முன்னேறினார். அவரை எதிர்த்து முன்னணி வீராங்கனையான ருமேனியாவின் சிமோனா ஹாலேப்(30வயது, 19வது ரேங்க்) அரையிறுதியில் களம் காண இருந்தார். முன்னாள் பிரெஞ்ச், விம்பிள்டன் ஓபன் கிராணட் ஸ்லாம் சாம்பியனான சிமோனா அடிக்கடி காயத்தால் அவதிப்பட்டு வருகிறார். மீண்டும் காயம் அவரை அவதிப்படுத்த, ஹோம்பர்க் தொடரின் அரையிறுதியில் இருந்து நேற்று விலகினார்.
அதனால் பியான்கா இறுதி ஆட்டத்துக்கு முன்னேறியுள்ளார். அவர் 2021ம் ஆண்டு மார்ச் மாதம் நடந்த மயாமி ஓபனுக்கு பிறகு இப்போதும் தான் இறுதி ஆட்டம் ஒன்றில் விளையாட இருக்கிறார். கூடவே 2019ம் ஆண்டு யுஎஸ் ஓபனுக்கு பிறகு ஒரு பட்டம் கூட அவர் வென்றதில்லை.
மேலும் செய்திகள்
டொரன்டோ ஓபன் டென்னிஸ் அரையிறுதியில் சானியா இணை: ஜெசிகா, சிமோனா முன்னேற்றம்
சில்லி பாய்ன்ட்...
வெஸ்ட் இண்டீசை வீழ்த்தி நியூசிலாந்து தொடர் வெற்றி
இந்தியாவை எதிர்கொள்ள தயார்: ஜிம்பாப்வே பயிற்சியாளர் டேவிட் சிறப்பு பேட்டி
உலகின் நெம்பர் ஒன் வீராங்கனை; ஸ்வியாடெக்கை விரட்டும் தோல்வி: மிரட்டிய ஹடாத் மியா
சர்வதேச கேரம் போட்டி: எல்லா தங்கங்களையும் வென்ற தமிழக வீரர்கள்
நாட்டின் 75-வது சுதந்திர தின கொண்டாட்டம்: மூவர்ண விளக்குகளால் ஜொலிக்கும் ஒன்றிய, மாநில அரசு கட்டடங்கள்..!!
போதையைத் தவிர்..கல்வியால் நிமிர்!: தமிழக பள்ளி மாணவர்கள் போதைக்கு எதிராக உறுதிமொழி ஏற்பு..!!
கியூபாவில் பயங்கர தீ விபத்து: 17 பேர் பலி..!!
தென்கொரியாவை புரட்டிபோட்ட கனமழை!! இதுவரை 9 பேர் பலி..
பிரிட்டன் ஃபார்ன் தீவில் பரவும் பறவை காய்ச்சல்: ஆயிரக்கணக்கான பறவைகள் துடிதுடித்து இறப்பு..!!