சர்வதேச ஏலத்தில் குன்னூர் தேயிலை விலை கடும் சரிவு: தேயிலை தூள் தேக்கம்
2022-06-24@ 14:18:42

குன்னூர்: நீலகிரி மாவட்டத்தில் பிரதான தொழிலாக தேயிலை தொழில் உள்ளது. இதனை நம்பி பல்லாயிரக்கணக்கான சிறு குறு விவசாயிகள், தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இங்கு பறிக்கும் பசுந்தேயிலை பல்வேறு தொழிற்சாலைகளில் தேயிலை தூளாக உற்பத்தி செய்யப்படுகிறது.இவை குன்னூரில் உள்ள ஏல மையத்தில் ஏலம் விடப்பட்டு, பிற மாநிலங்கள் மற்றும் பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. இந்நிலையில், உலக சந்தையில் இந்திய தேயிலை மதிப்பு குறைந்து கொண்டே வருகிறது.
இதற்கிடையே, குன்னூர் ஏல மையத்தில் கடந்தாண்டு ஜூன் மாதத்தில் ரூ.122 விற்பனையானது. ஆனால், இந்தாண்டு ஜூன் மாத ஏலத்தில் ரூ.78 விற்பனையானது. இதனால், தேயிலை ஏற்றுமதி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. டன் கணக்கில் தேயிலை தூள் தேக்கமடைந்துள்ளது.எனவே, ஒன்றிய அரசு தேயிலைக்கு குறைந்தபட்ச விலையை நிர்ணயம் செய்ய வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
மேலும் செய்திகள்
நெல்லை - தாம்பரம் இடையே சிறப்பு ரயில் இன்று இயக்கம்
ஏப்ரல் 1 முதல் அமல் கீழடி அருங்காட்சியகத்தில் பார்வையாளர் கட்டணம் நிர்ணயம்
ஊட்டி ஏரியில் வெகு நேரம் காத்திருந்து படகு சவாரி செய்த சுற்றுலா பயணிகள்
ஊட்டியில் கொட்டும் மழையிலும் தாவரவியல் பூங்கா ஊழியர்கள் 3வது நாளாக போராட்டம்
தமிழர்களின் பாரம்பரிய பெருமையை சொல்ல வேண்டும் என்றால் அதற்கு 2 நூற்றாண்டுகள் தேவைப்படும்; அமைச்சர் அன்பில் மகேஷ்
திருத்துறைப்பூண்டி மனநல காப்பகத்தை சுகாதார துறை அதிகாரி ஆய்வு
ஸ்பெயினில் ராக்கெட் வேகத்தில் பரவி வரும் காட்டுத் தீ; சாம்பலாகும் அரிய பெரிய மரங்கள்..!!
ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள செல்பிக்கள்
தைவானில் உள்ள தைபே ஃபேஷன் வீக் பாரம்பரிய உடைகளில் கவனம் செலுத்துகிறது..!!
தண்ணீரில் நகரம் .. கண்ணீரில் மக்கள்... கலிஃபோர்னியாவை புரட்டிப்போட்ட பேய் மழை, சூறைக்காற்று!!
பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 9 பேர் பலி