SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தங்கம் விலை சவரனுக்கு 160 அதிகரிப்பு

2022-06-24@ 00:06:35

சென்னை: தங்கம் விலை நேற்று சவரனுக்கு 160 அதிகரித்தது.தங்கம் விலை கடந்த சில மாதங்களாக ஏற்றம் இறக்கத்துடன் காணப்பட்டு வருகிறது. கடந்த 20ம் தேதி தங்கம் விலை கிராமுக்கு 10 அதிகரித்து ஒரு கிராம் 4,775க்கும், சவரனுக்கு 80 அதிகரித்து ஒரு சவரன் 38,200க்கு விற்கப்பட்டது. 21ம் தேதி தங்கம் விலை சற்று குறைந்தது. கிராமுக்கு 10 குறைந்து ஒரு கிராம் 4,765க்கும், சவரனுக்கு 80 குறைந்து ஒரு சவரன் ₹38,120க்கும் விற்கப்பட்டது. 2வது நாளாக நேற்று முன்தினமும் தங்கம் விலை சரிவை சந்தித்தது. அதாவது கிராமுக்கு 20 குறைந்து ஒரு கிராம் 4,745க்கும், சவரனுக்கு 160 குறைந்து ஒரு சவரனுக்கு 37,960க்கும் விற்கப்பட்டது.

தொடர்ச்சியாக 2 நாட்களில் மட்டும் தங்கம் விலை சவரனுக்கு 240 அளவுக்கு குறைந்தது. இது நகை வாங்குவோருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இந்த நிலையில் நேற்று தங்கம் விலையில் மாற்றம் காணப்பட்டது. அதாவது, கிராமுக்கு 20 அதிகரித்து ஒரு கிராம் 4,765க்கும், சவரனுக்கு 160 அதிகரித்து ஒரு சவரன் 38,120க்கும் விற்கப்பட்டது. 2 நாட்களாக குறைந்து வந்த நிலையில் தங்கம் விலை மீண்டும் அதிகரித்து இருப்பது நகை வாங்குவோரை சற்று கலக்கமடைய செய்துள்ளது.


மேலும் செய்திகள்

LikeGamezop
Like Us on Facebook Dinkaran Daily News
  • inde-12

    நாட்டின் 75-வது சுதந்திர தின கொண்டாட்டம்: மூவர்ண விளக்குகளால் ஜொலிக்கும் ஒன்றிய, மாநில அரசு கட்டடங்கள்..!!

  • drugs-11

    போதையைத் தவிர்..கல்வியால் நிமிர்!: தமிழக பள்ளி மாணவர்கள் போதைக்கு எதிராக உறுதிமொழி ஏற்பு..!!

  • cuba-fire-accident

    கியூபாவில் பயங்கர தீ விபத்து: 17 பேர் பலி..!!

  • south korea

    தென்கொரியாவை புரட்டிபோட்ட கனமழை!! இதுவரை 9 பேர் பலி..

  • birds-flu-10

    பிரிட்டன் ஃபார்ன் தீவில் பரவும் பறவை காய்ச்சல்: ஆயிரக்கணக்கான பறவைகள் துடிதுடித்து இறப்பு..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்