SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தமிழகத்தில் சிறைக்கைதிகளின் மன அழுத்தத்தை குறைக்க ஈஷா சார்பில் 26 சிறைகளில் சிறப்பு யோகா வகுப்பு

2022-06-23@ 16:57:39

சென்னை: குடும்பத்தை பிரிந்து தனிமையில் வாடும்  சிறை கைதிகளின் மன அழுத்தத்தை குறைக்க ஈஷா சார்பில் தமிழ்நாடு முழுவதும் உள்ள சிறைகளில் சிறப்பு யோகா வகுப்புகள் நடத்தப்பட்டன. அதன்படி, சென்னை, கோவை, மதுரை, திருச்சி, பாளையங்கோட்டை, வேலூர், கடலூர், சேலம், விழுப்புரம், நாகர்கோவில் என பல்வேறு இடங்களில் உள்ள ஆண்களுக்கான மத்திய சிறைகள், பெண்களுக்கான சிறப்பு சிறைகள் மற்றும் மாவட்ட சிறைகள் என 26 சிறைகளில் இவ்வகுப்புகள் நடத்தப்பட்டன. இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கைதிகள் மற்றும் சிறை வார்டன்கள் பங்கேற்று பயன்பெற்றனர்.

சத்குருவால் பயிற்சி அளிக்கப்பட்ட யோகா ஆசிரியர்கள் சிறைகளுக்கு நேரில் சென்று ‘உயிர் நோக்கம்’ என்ற 3 நாள் யோகா வகுப்பை நடத்தினர். இதில் யோக நமஸ்காரம், நாடி சுத்தி போன்ற எளிமையான, அதேசமயம் சக்திவாய்ந்த யோகப் பயிற்சிகள் கற்றுக்கொடுக்கப்பட்டது.

இப்பயிற்சிகளை சிறை கைதிகள் தினமும் செய்து வருவதன் மூலம் மன அழுத்தப் பாதிப்பில் இருந்து விடுபட முடியும். மேலும், முதுகுத்தண்டு வலுப்பெறும், மூட்டு வலியில் இருந்து விடுதலை பெறலாம். உடல் ஆரோக்கியம் மேம்படும். இவ்வகுப்புகள் சிறைகள் மற்றும் சீர்திருத்தப் பணிகள் துறை தலைமை இயக்குநர் திரு. சுனில் குமார் சிங் ஐ.பி.எஸ் அவர்களின் ஒத்துழைப்புடன் மே 30-ம் தேதி முதல் ஜூன் 18-ம் தேதி வரை நடைபெறுகிறது.

சிறை கைதிகளுக்கு இதுபோன்ற இலவச யோகா வகுப்புகளை கடந்த 30 வருடங்களாக ஈஷா நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • SYDNEYY111

    தொடர் கனமழை : சிட்னி நகரத்தை சூழ்ந்த வெள்ளம்.. 50 ஆயிரம் மக்கள் வீடுகளை விட்டு வெளியேற அறிவுறுத்தல்..

  • Mexico_Mayor

    மெக்சிகோவில் விநோதம்.! பெண் முதலையை முத்தம் கொடுத்து மணந்த மேயர்!!

  • manipurlandaa1

    தோண்ட தோண்ட சடலங்கள்.. மணிப்பூரில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 42 ஆக உயர்வு!!

  • America_Truck

    அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் லாரி ஒன்றில் 53 அகதிகள் சடலமாக மீட்பு... 16 பேர் கவலைக்கிடம்!!

  • wild-fire-california-30

    கலிபோர்னியாவில் மீண்டும் பற்றி எரியும் காட்டுத் தீ..135 ஏக்கர் வனப்பகுதி தீக்கிரை..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்