SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கர்நாடகாவில் நிலநடுக்கம் - மக்கள் அலறியடித்து ஓட்டம்

2022-06-23@ 16:50:11

கர்நாடகா: கர்நாடகாவில் இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டதை அடுத்து மக்கள் வீட்டில் இருந்து அலறியடித்துக் கொண்டு வெளியே ஓடினர். கர்நாடகா மாநிலம் ஹாசன் மாவட்டத்தில் இன்று அதிகாலை 5 மணியளவில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது.

ரிக்டர் அளவுகோலில் இது 3.4 ஆக பதிவானது. ஹாசன் மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டது. அதேபோல, குடகு மாவட்டத்திலும் நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கத்தை உணர்ந்த மக்கள், வீட்டில் இருந்து அலறியடித்துக் கொண்டு வெளியே ஓடி வந்தனர். சுமார் 1 நிமிடத்துக்கு இந்த நிலநடுக்கம் நீடித்தது.

உயிர்ச்சேதம் ஏதும் ஏற்படாத போதிலும், பல வீடுகள் சேதமடைந்தன. இதுகுறித்து கர்நாடகா பேரிடர் மேலாண்மை ஆணையர் மனோஜ் ராஜன் கூறுகையில், 'இது லேசான நிலநடுக்கம்தான். இதனால் ஹாசன், குடகு மாவட்டங்களில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. ஹாசன் மாவட்டத்தின் மலுங்கஹள்ளி கிராமத்தை மையமாக கொண்டு இந்த நிலநடுக்கம் ஏற்படடிருக்கிறது. மக்கள் யாரும் அச்சப்பட தேவையில்லை' என்றார்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • spain-trees-24

    ஸ்பெயினில் ராக்கெட் வேகத்தில் பரவி வரும் காட்டுத் தீ; சாம்பலாகும் அரிய பெரிய மரங்கள்..!!

  • gandhi-13

    ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள செல்பிக்கள்

  • taipei-fashion-week-taiwan

    தைவானில் உள்ள தைபே ஃபேஷன் வீக் பாரம்பரிய உடைகளில் கவனம் செலுத்துகிறது..!!

  • kalifffo1

    தண்ணீரில் நகரம் .. கண்ணீரில் மக்கள்... கலிஃபோர்னியாவை புரட்டிப்போட்ட பேய் மழை, சூறைக்காற்று!!

  • pak-123

    பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 9 பேர் பலி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்