தேசிய கல்விக்கொள்கை தமிழ்நாட்டிற்கு தேவையில்லை: அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி
2022-06-23@ 15:57:05

மதுரை: தேசிய கல்விக்கொள்கை வேண்டாம் என்பதற்காகத்தான் மாநில கல்விக் கொள்கை கொண்டு வரப்படுகிறது என அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி தெரிவித்துள்ளார் .தமிழக அரசின் மாநில கல்விக் கொள்கையை வடிவமைக்க கல்வியாளர்கள் வல்லுனர்கள் அடங்கிய மாநில அளவிலான குழு அமைத்து தமிழக அரசு சமீபத்தில் அரசாணை வெளியிட்டிருந்தது. அந்தக் குழுவில் பல்வேறு பேராசிரியர்களும், கல்வியாளர்களும் இடம்பெற்றுள்ளனர். இந்தக் குழு, ஒரு வருடத்தில் கல்விக் கொள்கையை வடிவமைத்து அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என அந்த அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் மதுரையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, தேசிய கல்விக்கொள்கை வேண்டாம் என்பதற்காகத்தான் மாநில கல்விக் கொள்கை கொண்டு வரப்படுகிறது எனத் தெரிவித்துள்ளார். மாணவர்களுக்கு உகந்த மாநில கல்விக்கொள்கை கொண்டுவரப்படும் என்றும் மாணவச் செல்வங்களுக்கு ஏற்ற கல்வியை முதலமைச்சர் தேர்வு செய்வார் எனவும் அமைச்சர் அன்பில் மகேஷ் கூறினார்.
மேலும் செய்திகள்
2020ல் விடுதி சமையலர் பணிக்கு தேர்வு செய்யப்பட்டோர் பட்டியலை வெளியிட ஐகோர்ட் கிளை உத்தரவு
ஊராட்சி பொது நிதியில் இருந்து மக்கள் நலப்பணியாளர்களுக்கு கூடுதலாக ரூ.2,500 ஊதியம்: ஊரக வளர்ச்சி இயக்குநரகம் உத்தரவு
வேறொரு பெண்ணுடன் தொடர்பு என மனைவி புகார் போலீஸ் விசாரணையின்போது விஷம் குடித்து கணவன் தற்கொலை: அரக்கோணத்தில் அதிர்ச்சி சம்பவம்
தற்காலிக ஆசிரியர்கள் நியமன தடையை நீக்க கோரி முறையீடு: 8ம் தேதி விசாரணை
இலங்கை தமிழர்கள் 8 பேர் தனுஷ்கோடி வருகை
நெல்லையில் முதல் குறைதீர் கூட்டம் ஊர்காவல் படையில் திருநங்கைகளுக்கு வேலை: கலெக்டர் தகவல்
தொடர் கனமழை : சிட்னி நகரத்தை சூழ்ந்த வெள்ளம்.. 50 ஆயிரம் மக்கள் வீடுகளை விட்டு வெளியேற அறிவுறுத்தல்..
மெக்சிகோவில் விநோதம்.! பெண் முதலையை முத்தம் கொடுத்து மணந்த மேயர்!!
தோண்ட தோண்ட சடலங்கள்.. மணிப்பூரில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 42 ஆக உயர்வு!!
அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் லாரி ஒன்றில் 53 அகதிகள் சடலமாக மீட்பு... 16 பேர் கவலைக்கிடம்!!
கலிபோர்னியாவில் மீண்டும் பற்றி எரியும் காட்டுத் தீ..135 ஏக்கர் வனப்பகுதி தீக்கிரை..!!