வேன்களில் அபாயநிலையில் சரக்கு மூட்டைகளுடன் வியாபாரிகள் பயணம்
2022-06-23@ 15:15:39

புழல்: சென்னை நகரில் இருந்து காய்கறி மூட்டைகளுடன் செல்பவர்களும், கோயம்பேடு மார்க்கெட்டுக்கு கீரை, காய்கறிகளை ஏற்றி வரும் வியாபாரிகள் வேனின் பின்பக்கத்திலும் மூட்டைகளின்மேல் அபாயநிலையில் அமர்ந்தபடி சென்று வருகின்றனர். இவற்றை தடுக்க போக்குவரத்து போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.
திருவள்ளூர் மாவட்டப் பகுதிகளான கும்மிடிப்பூண்டி, சோழவரம், செங்குன்றம் உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து நாள்தோறும் அதிகாலை நேரங்களில் சென்னை கோயம்பேடு மார்க்கெட்டுக்கு வேன்களில் காய்கறி, கீரை மூட்டைகளை வியாபாரிகள் ஏற்றி வருகின்றனர். அவ்வாறு வரும்போது, அவர்கள் அனைவரும் வேனின் பின்பக்கத்தில் அபாயநிலையில் அமர்ந்தபடி வருகின்றனர்.
அதேபோல் கோயம்பேடு மார்க்கெட்டில் இருந்து காய்கறி, பழவகைகள் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை ஏற்றிக்கொண்டு, காலை நேரங்களில் சென்னை உள்பட புறநகர் பகுதிகளுக்கு கொண்டு செல்லும் பெண்கள் உள்பட வியாபாரிகள், மூட்டைகளின்மீது அமர்ந்தோ அல்லது வேனின் பின்பக்கத்தில் நின்றபடியோ, பின்பக்க கதவை திறந்து கால்களை தொங்கவிட்டபடி செல்கின்றனர்.
அந்த வேன் திடீர் பிரேக் போடும்போது, இவ்வாறு மூட்டைகளின்மீது அமர்ந்து கொண்டோ, கால்களை தொங்க விட்டு செல்பவர்கள் கீழே விழுந்து படுகாயம் அடைகின்றனர். மேலும் சிலர் உயிரிழக்கவும் வாய்ப்பு உள்ளது. இதேபோல் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் கூலிவேலைக்கு செல்பவர்களையும் வேன், டிராக்டர்களில் அபாயநிலையில் ஏற்றி செல்லப்படுகின்றனர். இதனால் சாலை விபத்துகள் மூலம் உயிரிழப்புகள் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.
எனவே, சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் போக்குவரத்து போலீசார் ஆங்காங்கே சோதனை நடத்தி, இதுபோன்று அபாயநிலையில் செல்பவர்களை தடுத்து நிறுத்தி, மீண்டும் தொடருவதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.
மேலும் செய்திகள்
மின்சாரம் பாய்ந்து இருவர் பலி
மாநகராட்சி நடுநிலைப் பள்ளிக்கு தலைமை ஆசிரியரை நியமிக்க வேண்டும்: பெற்றோர் வலியுறுத்தல்
அடிப்படை வசதியில்லாத தகர கொட்டகையில் இயங்கும் அவலம் இடிந்து விழும் நிலையில் வியாசர்பாடி காவல் நிலையம்: தினம் தினம் செத்துப் பிழைக்கும் போலீசார்
குடும்ப தகராறில் பேராசிரியர் தற்கொலை: சாவில் சந்தேகம் இருப்பதாக புகார்
கோயம்பேடு மார்க்கெட் வளாகத்தில் கட்டண கழிப்பறைகள் சீரமைப்பு: முதன்மை அதிகாரி நடவடிக்கை
லாரி மோதியதில் மாணவன் பலி 3 பேர் படுகாயம்
தொடர் கனமழை : சிட்னி நகரத்தை சூழ்ந்த வெள்ளம்.. 50 ஆயிரம் மக்கள் வீடுகளை விட்டு வெளியேற அறிவுறுத்தல்..
மெக்சிகோவில் விநோதம்.! பெண் முதலையை முத்தம் கொடுத்து மணந்த மேயர்!!
தோண்ட தோண்ட சடலங்கள்.. மணிப்பூரில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 42 ஆக உயர்வு!!
அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் லாரி ஒன்றில் 53 அகதிகள் சடலமாக மீட்பு... 16 பேர் கவலைக்கிடம்!!
கலிபோர்னியாவில் மீண்டும் பற்றி எரியும் காட்டுத் தீ..135 ஏக்கர் வனப்பகுதி தீக்கிரை..!!