வளிமண்டல கீழடுக்கு சுழற்சியால் தமிழ்நாடு, புதுவையில் இன்று முதல் 5 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு; வானிலை ஆய்வு மையம் தகவல்
2022-06-23@ 14:05:52

சென்னை: வளிமண்டல கீழடுக்கு சுழற்சியால் தமிழ்நாடு, புதுவை, காரைக்காலில் இன்று முதல் 5 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. வளிமண்டல கீழடுக்கு சுழற்சியால் தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்காலில் இன்று முதல் 5 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதன்படி, இன்று முதல் 27-ஆம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்காலில் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. ஜூன் 26, 27-ல் கன்னியாகுமரி, நெல்லை, மேற்கு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என்றும் சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு ஒரு சில பகுதிகளில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இன்றும், நாளையும் குமரிக்கடல், மன்னர் வளைகுடா, தென்மேற்கு வங்கக்கடல், தென் தமிழக கரையோரம் பலத்த காற்று வீசும் என்றும் இன்றும், நாளையும் கர்நாடகா, மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளி காற்று வீசக்கூடும் எனவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
ஜூன் 25, 26-ல் லட்சத்தீவு, கேரளா, கர்நாடகா கரையோரம், மத்திய கிழக்கு, தென் கிழக்கு அரபிக்கடலில் சூறாவளி வீசக்கூடும். மணிக்கு 35 முதல் 50 கிமீ வேகத்தில் பலத்த காற்று வீசும் என்பதால் இன்று முதல் 5 நாட்களுக்கு மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகள்
மின்சாரம் பாய்ந்து இருவர் பலி
மாநகராட்சி நடுநிலைப் பள்ளிக்கு தலைமை ஆசிரியரை நியமிக்க வேண்டும்: பெற்றோர் வலியுறுத்தல்
அடிப்படை வசதியில்லாத தகர கொட்டகையில் இயங்கும் அவலம் இடிந்து விழும் நிலையில் வியாசர்பாடி காவல் நிலையம்: தினம் தினம் செத்துப் பிழைக்கும் போலீசார்
குடும்ப தகராறில் பேராசிரியர் தற்கொலை: சாவில் சந்தேகம் இருப்பதாக புகார்
கோயம்பேடு மார்க்கெட் வளாகத்தில் கட்டண கழிப்பறைகள் சீரமைப்பு: முதன்மை அதிகாரி நடவடிக்கை
லாரி மோதியதில் மாணவன் பலி 3 பேர் படுகாயம்
தொடர் கனமழை : சிட்னி நகரத்தை சூழ்ந்த வெள்ளம்.. 50 ஆயிரம் மக்கள் வீடுகளை விட்டு வெளியேற அறிவுறுத்தல்..
மெக்சிகோவில் விநோதம்.! பெண் முதலையை முத்தம் கொடுத்து மணந்த மேயர்!!
தோண்ட தோண்ட சடலங்கள்.. மணிப்பூரில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 42 ஆக உயர்வு!!
அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் லாரி ஒன்றில் 53 அகதிகள் சடலமாக மீட்பு... 16 பேர் கவலைக்கிடம்!!
கலிபோர்னியாவில் மீண்டும் பற்றி எரியும் காட்டுத் தீ..135 ஏக்கர் வனப்பகுதி தீக்கிரை..!!