அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு 7 எஸ்பிக்கள் தலைமையில் 2,000 போலீஸ் பாதுகாப்பு
2022-06-23@ 00:34:46

சென்னை: சென்னை வானகரத்தில் இன்று நடைபெறும் அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு 7 எஸ்பிக்கள் தலைமையில் 2 ஆயிரம் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. குழு மோதல்களை தடுக்கும் வகையில் போலீசார் சிறப்பு ஏற்பாடுகளை செய்துள்ளனர். அதிமுகவிற்கு ஒன்றைத் தலைமை கோரிக்கை கடந்த ஒரு வாரமாக நடந்து வருகிறது.இந்த பரபரப்பான சூழலில் இன்று வானகரத்தில் நடைபெறும் அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு ஆவடி மாநகர காவல்துறை கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் மேற்பார்வையில் 7 எஸ்பிக்கள் தலைமையில் 21 டிஎஸ்பிக்கள், இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள், காவலர்கள் மற்றும் ஆயுதப்படை காவலர்கள் என மொத்தம் 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். பொதுக்குழு நடைபெறும் மண்டபம் அருகே 3 அடுக்குகளாக பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். பொதுக்குழுவின் போது இருதரப்பு மோதல்களை தடுக்கும் வகையில் சாதாரண உடையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள்.
Tags:
AIADMK general body meeting headed by 7 SPs 2 000 police security அதிமுக பொதுக்குழு கூட்டம் 7 எஸ்பிக்கள் தலைமை 2 000 போலீஸ் பாதுகாப்புமேலும் செய்திகள்
மின்சாரம் பாய்ந்து இருவர் பலி
மாநகராட்சி நடுநிலைப் பள்ளிக்கு தலைமை ஆசிரியரை நியமிக்க வேண்டும்: பெற்றோர் வலியுறுத்தல்
அடிப்படை வசதியில்லாத தகர கொட்டகையில் இயங்கும் அவலம் இடிந்து விழும் நிலையில் வியாசர்பாடி காவல் நிலையம்: தினம் தினம் செத்துப் பிழைக்கும் போலீசார்
குடும்ப தகராறில் பேராசிரியர் தற்கொலை: சாவில் சந்தேகம் இருப்பதாக புகார்
கோயம்பேடு மார்க்கெட் வளாகத்தில் கட்டண கழிப்பறைகள் சீரமைப்பு: முதன்மை அதிகாரி நடவடிக்கை
லாரி மோதியதில் மாணவன் பலி 3 பேர் படுகாயம்
தொடர் கனமழை : சிட்னி நகரத்தை சூழ்ந்த வெள்ளம்.. 50 ஆயிரம் மக்கள் வீடுகளை விட்டு வெளியேற அறிவுறுத்தல்..
மெக்சிகோவில் விநோதம்.! பெண் முதலையை முத்தம் கொடுத்து மணந்த மேயர்!!
தோண்ட தோண்ட சடலங்கள்.. மணிப்பூரில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 42 ஆக உயர்வு!!
அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் லாரி ஒன்றில் 53 அகதிகள் சடலமாக மீட்பு... 16 பேர் கவலைக்கிடம்!!
கலிபோர்னியாவில் மீண்டும் பற்றி எரியும் காட்டுத் தீ..135 ஏக்கர் வனப்பகுதி தீக்கிரை..!!