தமிழகத்தில் பிஏ5 தொற்று 25% வரை பரவி உள்ளது: சுகாதாரத்துறை தகவல்
2022-06-23@ 00:29:39

சென்னை: தமிழகத்தில் பிஏ5 தொற்று வகை 25% வரை பரவி உள்ளது என சுகாதாரத் துறை தகவல் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இதனை தொடர்ந்து தமிழகத்தில் பிஏ5 என்ற ஒமிக்ரான் வகை பாதிப்பு 25 சதவீதம் வரை தற்போது பரவி இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருகிறது, பல்வேறு மாவட்டங்களில் நோய் பரவல் அதிகரித்து வரும் நிலையில் இதற்கான காரணங்கள் குறித்து சுகாதாரத்துறை பல்வேறு ஆய்வுகளையும் ஆலோசனைகளின் அதிகாரிகள் மட்டத்தில் நடத்தி வருகிறது.
சென்னை மற்றும் சுற்றுவட்டார மாவட்டங்களில் குழு பரவல் அதிகரித்து வரும் நிலையில் கொரோனா மூன்றாவது அலையில் நோய் பரவல் அதிகமாக காரணமாக அமைந்த ஓமிக்ரான் வகை பாதிப்புகள் தற்போது உருமாற்றம் அடைந்து இருப்பதாகவும் எட்டு வகையான உருமாற்றங்கள் கண்டறியப்பட்டுள்ளதாகவும் சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது. இதில் தமிழகத்தில் பிஏ5 என்ற ஒமிக்ரான் வகை பாதிப்பு 25% வரை தற்போது பரவி இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.இதன் காரணமாக தொற்று கண்டறியப்பட்ட இடங்களில் மேற்கொள்ளப்படும் மரபணு பகுப்பாய்வு அதிகப்படுத்த உள்ளதாக சுகாதாரத் துறை திட்டமிட்டுள்ளது. மக்கள் முகக்கவசம் மற்றும் தடுப்பூசி செலுத்திக் கொள்வதை தொடர்ந்து செய்தாலே பிஏ5 வகை கொரோனா பரவலை தடுக்கலாம் என்று சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.
Tags:
In Tamil Nadu PA5 infection spreading up to 25% health sector தமிழகத்தில் பிஏ5 தொற்று 25% வரை பரவி சுகாதாரத்துறைமேலும் செய்திகள்
மின்சாரம் பாய்ந்து இருவர் பலி
மாநகராட்சி நடுநிலைப் பள்ளிக்கு தலைமை ஆசிரியரை நியமிக்க வேண்டும்: பெற்றோர் வலியுறுத்தல்
அடிப்படை வசதியில்லாத தகர கொட்டகையில் இயங்கும் அவலம் இடிந்து விழும் நிலையில் வியாசர்பாடி காவல் நிலையம்: தினம் தினம் செத்துப் பிழைக்கும் போலீசார்
குடும்ப தகராறில் பேராசிரியர் தற்கொலை: சாவில் சந்தேகம் இருப்பதாக புகார்
கோயம்பேடு மார்க்கெட் வளாகத்தில் கட்டண கழிப்பறைகள் சீரமைப்பு: முதன்மை அதிகாரி நடவடிக்கை
லாரி மோதியதில் மாணவன் பலி 3 பேர் படுகாயம்
தொடர் கனமழை : சிட்னி நகரத்தை சூழ்ந்த வெள்ளம்.. 50 ஆயிரம் மக்கள் வீடுகளை விட்டு வெளியேற அறிவுறுத்தல்..
மெக்சிகோவில் விநோதம்.! பெண் முதலையை முத்தம் கொடுத்து மணந்த மேயர்!!
தோண்ட தோண்ட சடலங்கள்.. மணிப்பூரில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 42 ஆக உயர்வு!!
அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் லாரி ஒன்றில் 53 அகதிகள் சடலமாக மீட்பு... 16 பேர் கவலைக்கிடம்!!
கலிபோர்னியாவில் மீண்டும் பற்றி எரியும் காட்டுத் தீ..135 ஏக்கர் வனப்பகுதி தீக்கிரை..!!