வரும் 26,27ம் தேதிகளில் நடக்கும் ஜி7 மாநாட்டில் பங்கேற்க மோடி ஜெர்மனி பயணம்: நபிகள் சர்ச்சைக்கு இடையே அமீரகமும் செல்கிறார்
2022-06-23@ 00:19:03

புதுடெல்லி: வரும் 26, 27ம் தேதிகளில் ஜெர்மனியில் நடக்கும் ஜி-7 மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி செல்கிறார். நபிகள் நாயகம் சர்ச்சைக்கு இடையே 28ம் தேதி அமீரகத்துக்கும் அவர் செல்கிறார். 48வது ஜி-7 மாநாடு வரும் 26, 27ம் தேதிகளில் ஜெர்மனியில் நடைபெற உள்ளது. இதில், சிறப்பு அழைப்பாளராக பங்கேற்கும்படி பிரதமர் மோடிக்கு ஜெர்மனி அதிபர் ஓலாப் ஸ்கோல்ஸ் அழைப்பு விடுத்துள்ளார். அதை ஏற்று மோடி ஜெர்மனி செல்ல உள்ளார். இது குறித்து வெளியுறவு அமைச்சகம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘அதிபர் ஓலாப் ஸ்கோல்ஸின் அழைப்பின் பேரில், ஜி-7 மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி ஜூன் 26, 27ம் தேதிகளில் ஜெர்மனி செல்கிறார். இந்த கூட்டதில் சுற்றுச்சூழல், எரிசக்தி, காலநிலை, உணவுப் பாதுகாப்பு, சுகாதாரம், பாலின சமத்துவம், மற்றும் ஜனநாயகம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து அவர் பேசுவார்.
இந்தியாவைத் தவிர, இந்தோனேசியா, தென் ஆப்பிரிக்கா, அர்ஜென்டினா மற்றும் செனகல் போன்ற நாடுகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளன. மாநாட்டின் போது சில வெளிநாட்டு தலைவர்களுடன் மோடி பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்,’ என கூறப்பட்டுள்ளது. மாநாட்டை முடித்த பிறகு, ஐக்கிய அரபு அமீரகத்துக்கும் மோடி செல்கிறார். அங்கு, அந்நாட்டின் புதிய அதிபர் சயீத் அல் நஹ்யான் உட்பட பல உயர்மட்டத் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துகிறார்.
நபிகள் நாயகம் குறித்து சமீபத்தில் பாஜ தலைவர்கள் தெரிவித்த சர்ச்சை கருத்துக்கு, அரபு நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்தன. இந்த சூழ்நிலையில், மோடியின் அமீரக பயணம் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
Tags:
Coming up on 26th and 27th G7 Conference Modi Travel to Germany Prophets Controversy UAE வரும் 26 27ம் தேதி ஜி7 மாநாட்டில் மோடி ஜெர்மனி பயணம் நபிகள் சர்ச்சை அமீரகம்மேலும் செய்திகள்
சிரஞ்சீவியின் காட்ஃபாதர் வீடியோ ரிலீஸ்
பெண் தெய்வத்தை இழிவுபடுத்திய விவகாரம் இயக்குனர் லீனா மீது நடிகை கடும் தாக்கு: கனடாவில் உள்ள இந்திய தூதரகமும் கண்டனம்
பவன் கல்யாண் பெயரை பச்சை குத்திய நடிகை
அல்லு அர்ஜுனுடன் இணைகிறார் விஜய் சேதுபதி
துணை ஜனாதிபதி தேர்தல் மனுதாக்கல் தொடங்கியது: ஆக.6ம் தேதி வாக்குப்பதிவு
குடும்ப சுமையால் வெளி உலகத்தையே பார்க்காதவர் தாயை 56 ஆயிரம் கிமீ ஆன்மிக பயணம் அழைத்து செல்லும் மகன்: திருப்பதியில் சுவாமி தரிசனம்
தொடர் கனமழை : சிட்னி நகரத்தை சூழ்ந்த வெள்ளம்.. 50 ஆயிரம் மக்கள் வீடுகளை விட்டு வெளியேற அறிவுறுத்தல்..
மெக்சிகோவில் விநோதம்.! பெண் முதலையை முத்தம் கொடுத்து மணந்த மேயர்!!
தோண்ட தோண்ட சடலங்கள்.. மணிப்பூரில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 42 ஆக உயர்வு!!
அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் லாரி ஒன்றில் 53 அகதிகள் சடலமாக மீட்பு... 16 பேர் கவலைக்கிடம்!!
கலிபோர்னியாவில் மீண்டும் பற்றி எரியும் காட்டுத் தீ..135 ஏக்கர் வனப்பகுதி தீக்கிரை..!!