SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தேனி விஐபி நீக்கிய நபர்களுக்கு கட்சியில் இடம் அளிக்கும் சேலம்காரரின் தந்திரம் பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

2022-06-23@ 00:04:58

‘‘பொதுக்குழு கூடி முடியறதுக்குள்ள... இலை கட்சியினர் தலையில் பாதி முடி இருக்காது போல...’’ என்றார் பீட்டர் மாமா.‘‘இலைக்கட்சியில நடக்கிற ஒற்றைத்தலைமை பஞ்சாயத்துல யாருக்கு லாபமோ, நஷ்டமோ, நீக்கப்பட்ட பலருக்கு ஜாக்பாட் என்றுதான் சொல்ல வேண்டும். கட்சி கட்டுப்பாட்டை மீறியதாக கட்டம் கட்டப்பட்ட மாஜி செய்தி தொடர்பாளரான பெங்களூருக்காரர், ஒருங்கிணைப்பை நேரில் சந்தித்து ஆதரவு தந்தார். ஆனால், தேனிக்காரரின் மாவட்டத்தில் உள்ளவர்களில் பலர் தேனிக்காரரால் பாதிக்கப்பட்டு, கட்சியில் இருந்து உள்நோக்கத்துடன் நீக்கப்பட்டவர்களாம். ஹனீபீ மாவட்டத்தில், 186 ஏக்கர் அரசு நிலத்தை தனியாருக்கு பட்டா மாற்றிய விவகாரத்தில் சிக்கிய மாஜி இலைக்கட்சி ஒன்றிய செயலாளர், திடீரென இணை ஒருங்கிணைப்பை நேரில் சந்தித்து, அவரது டீமில் இணைந்து கொண்டாராம். ஒருங்கிணைப்புக்கு உதவியாளராக பணியாற்றி நில மோசடி வழக்கில் சிக்கியவர், திடீரென அணி மாறியது தேனி மாவட்ட இலைக்கட்சி நிர்வாகிகள் மத்தியில் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இதுபோல கடந்த சில மாதங்களுக்கு முன் இருவரால் இணைந்து நீக்கப்பட்ட பல நிர்வாகிகள், தொண்டர்கள், இணை ஒருங்கிணைப்பை சந்தித்து ஆதரவு தெரிவித்து வருகின்றனராம். அதேபோல தேனியில் இலை கட்சியில் இருந்து நீக்கப்பட்ட நூற்றுக்கும் மேற்பட்டவர்கள், ஆயிரக்கணக்கான தொண்டர்களுக்கு கட்சியிலில் மீண்டும் பொறுப்பு வழங்கப்படுமென சேலம் தரப்பு அளித்துள்ளதாம். இதற்காக கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர்களை தேடி அலையும் அசைன்மென்ட் சில மாஜி அமைச்சர்களிடம், சேலம்காரர் அளித்துள்ளாராம். இது ஒர்க் அவுட் ஆனதால் தான் தென்மாவட்டங்கள், வட மாவட்டங்களில் இருந்து தேனி ஆதரவாளர்கள் பலரும் சேலம்காரர் பக்கம் இணைந்து வர்றாங்களாம்...’’ என்றார் விக்கியானந்தா.

‘‘தரமான உணவு இல்லாவிட்டாலும் பரவாயில்லை... தனக்கு மாசம் தர வேண்டியதை தரச் சொல்லி யார் டார்ச்சர் தர்றா...’’ என்று கேட்டார் பீட்டர் மாமா.‘‘ டெக்ஸ்டைல் மாவட்டத்தில் ஆயுதப்படை வளாகத்தில் தற்காலிக காவலர் பயிற்சி மையம் இருக்காம். நூற்றுக்கும் மேற்பட்டோர் இங்கு தங்கியிருந்து பயிற்சி பெற்று வருகிறார்களாம். இவர்களுக்கு என்று தனியாக கேன்டீன் இருக்காம். இந்த கேன்டீனை தங்கத்தின் பெயரை முதல் எழுத்தாகவும், மறைந்த சினிமா பாடலாசிரியரின் பெயரை ஒருங்கே கொண்டவர் ஒப்பந்த அடிப்படையில் எடுத்து நடத்தி வருகிறார். இந்த நிலையில்தான் கேன்டீன்காரருக்கு காவலர் பயிற்சி மையத்தின் துணை முதல்வர் மூலம் டார்ச்சர் ஆரம்பித்துள்ளதாம். அடிக்கடி கேன்டீனுக்கு வந்து சம்பந்தம் இல்லாமல் ‘‘விட்டமின் ப’’ வாங்கி செல்கிறாராம். கேன்டீன் வருமானத்தில் கமிஷன் கேட்டும் தொந்தரவு செய்து வருகிறாராம். கேட்கும் பணத்தை தரா விட்டால், கேன்டீன் உரிமம் ரத்து செய்து விடுவதாகவும் மிரட்டல் விடுத்து வருகிறாராம். என்ன செய்வது என்று தெரியாமல் கேன்டீன் ஓனர்.. மூடிவிட்டு ஓடலாமா... லஞ்சத்தை கொடுத்து ேகன்டீனை ஓட்டலாமா என்று யோசித்து கொண்டிருக்கிறாராம்...’’ என்றார் விக்கியானந்தா.

‘‘சொல்வது ஒன்று செய்வது ஒன்று என்று தங்கள் தலைவரை பற்றி புலம் தொண்டர்கள் எந்த கட்சியில் இருக்காங்க...’’ என்று கேள்வி எழுப்பினார் பீட்டர் மாமா.‘‘தாமரைகட்சி தலைவரு மாங்கனி மாவட்டத்தில் உள்ள மலைவாசஸ்தலத்திற்கு சமீபத்தில் விசிட் அடித்தாராம். மலைவாழ் பழங்குடியின மக்களை சந்தித்து கலந்துரையாடுகிறார் என்று அறிவிக்கப்பட்டு இருந்ததாம். அட மலைவாழ் பழங்குடியினர் மீது நம்ம தலைவருக்கு பாசம் அதிகம் என்று கட்சி நிர்வாகிகளும் தொண்டர்களும் சந்தோஷப்பட்டனர். ஆனால், உண்மையிலேயே தாமரை தலைவரு வந்தது, கட்சி நிர்வாகி ஒருவரின் தங்கும் விடுதி திறப்பு விழாவிற்காம். ஸ்பாட்டுக்கு வந்தவுடன் சம்மந்தப்பட்ட நிர்வாகியின் எஸ்டேட் பங்களாவுக்கு போய், லஞ்ச் முடிச்ச தலைவரு, விடுதியை திறந்து வைத்து அவரது குடும்பத்தினருடன் கலந்துரையாடினாராம். அப்போது கட்சியின் மாநில நிர்வாகிகளை மட்டும் உடனிருக்க அனுமதிச்சாராம். சிலமணி நேரம் இந்த மீட்டிங் நடந்ததாம். அதன் பிறகு ஒப்புக்கு மலைவாழ் மக்களை சந்திச்ச தலைவரு, அரைமணி நேரத்தில் அங்கிருந்து புறப்பட்டு சென்றாராம். இதனால் சொந்த வாகனங்களை எடுத்துக் கொண்டு தலைவரை பார்க்க வந்த நிர்வாகிங்க எல்லாம் கடும் அப்செட் ஆகிட்டாங்களாம். மலைவாழ் மக்களுக்காக அதிக நேரம் செலவிடாமல் திறப்பு விழாவுக்கு செலவிட்டுள்ளது மலைவாழ் மக்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளதாம். மேலும் பேசாமல் லாட்ஜ் திறப்பு என்று ஓபனாக அறிவிக்க வேண்டியது தானே. எதற்காக அப்பாவி மக்களை ஏமாத்தறார் என்று அக்கட்சி தொண்டர்களே புலம்பறாங்க...’’ என்றார் விக்கியானந்தா.‘‘இலை கட்சியில் தந்தைக்கு எதிரி, மகனுக்கு நண்பனாக இருக்க முயலும் மாஜி மந்திரி பற்றி சொல்லுங்க...’’ என்றார் பீட்டர் மாம.

‘‘வடமாநில நதி பெயரில் முடியும் மாவட்டத்தில் இலைக்கட்சியினரின் ஒற்றைத் தலைமை விவகாரத்திற்கான ஆதரவு வேறு விதமாக இருக்கிறது. அதாவது இரு தலைமைக்குமே ஜால்ரா அடிக்கின்றனர். இதனால் மாவட்டத் தலைமையில் இருப்பவர்கள் யார் பக்கம் என்பதைத் தெரிந்து கொள்ள முடியாமலேயே தொண்டர்கள் கலங்கிப் போய் இருக்கிறார்களாம். மாவட்டத்தின் மாஜி மந்திரி ஒருங்கிணைப்புக்கே ஆதரவாக இருந்தார். இவரை, தன் பக்கம் இழுக்க திட்டமிட்ட இணை ஒருங்கிணைப்பு, இந்த மாவட்டத்தை இரண்டாக பிரித்து, தெற்கு மாவட்ட செயலாளராக நியமிப்பதாக கூறி கிரீன் சிக்னல் கொடுத்தாராம். இதைத்தொடர்ந்து மாவட்ட மந்திரியாக இருந்தவர், இணை ஒருங்கிணைப்பை சந்தித்து மகிழ்ச்சி தெரிவித்து விட்டு வந்திருக்கிறாராம். இதனையறிந்த, மாவட்டச் செயலாளரும், சிட்டிங் எம்எல்ஏவுமானவர் மாவட்டத்தை 2ஆக பிரிக்க வேண்டாமென, இணை ஒருங்கிணைப்பைச் சந்தித்து உருக்கமான கோரிக்கை வைத்து விட்டு வந்திருக்கிறாராம். இதன்பிறகு, எப்போதும் இல்லாத வகையில் ஒருங்கிணைப்பின் மகனான எம்பியுடன் கூடுதல் நெருக்கத்தை அதிகப்படுத்திக் கொண்டுள்ளாராம். அதாவது, எந்தப்பக்கம் காத்தடிக்கிறதோ அந்தப்பக்கம் சாயலாம் என இருவரும் காத்திருக்கிறார்களாம். இது ஒட்டுமொத்த இலைக்கட்சித் தொண்டர்களை எந்தப்பக்கம் போவதென்ற பெரும் குழப்பத்திற்கு தள்ளி இருக்கிறதாம்...’’’ என்றார் விக்கியானந்தா.

மேலும் செய்திகள்

LikeGamezop
Like Us on Facebook Dinkaran Daily News
 • america_fire

  கலிபோர்னியாவை அச்சுறுத்தும் காட்டுத்தீ.. தீயை அணைக்க வீரர்கள் போராட்டம்!!

 • mexico-mine-17

  மெக்சிகோ சுரங்கத்தில் ஏற்பட்ட வெள்ளத்தால் சுரங்கத் தொழிலாளர்களை மீட்கும் முயற்சி தீவிரம்...

 • oil-tanker-17

  பாகிஸ்தானில் ஆயில் டேங்கர் லாரியும், பயணிகள் பேருந்தும் மோதி தீ விபத்து.. 20 பேர் உடல் கருகி உயிரிழப்பு..!!

 • kite_chennai

  மாமல்லபுரத்தில் நடைபெற்ற பிரம்மாண்ட பட்டத் திருவிழா..!!

 • poland-fish-16

  போலந்தில் நதிநீர் மாசுபாட்டால் டன் கணக்கில் செத்து மிதக்கும் மீன்கள்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்