மகளிர் டி20 தொடர் இலங்கை-இந்தியா இன்று மோதல்
2022-06-23@ 00:04:47

அம்பாந்துறை: இலங்கை சென்றுள்ள இந்திய அணி அங்கு தலா 3 ஆட்டங்களை கொண்ட டி20, ஒருநாள் தொடர்களில் விளையாட உள்ளது.டி20 ஆட்டங்கள் ஜூன் 23, 25, 27 ஆகிய தேதிகளில் அம்பாந்துறையில் உள்ள தம்புல்லாவில் நடைபெற உள்ளன. தொடர்நது ஒருநாள் ஆட்டங்கள் ஜூலை 1, 4, 7 தேதிகளில் பல்லேகலேவில் நடக்கும். மிதாலி ராஜ் ஓய்வு பெற்ற பிறகு, ஹர்மன்பிரீத் முதல்முறையாக ஒருநாள் அணிக்கும் கேப்டனாக களம் காண இருக்கிறார். மற்றொரு மூத்த வீராங்கனை ஜூலன் கோஸ்வாமியும் ஒருநாள் அணியில் இடம் பெறவில்லை. அதே நேரத்தில் அனுபவ வீராங்கனைகள் மந்தானா, ராஜேஸ்வரி, மேக்னா, ஷபாலி, தீப்தி, பூஜா ஆகியோர் டி20, ஒருநாள் என 2 அணிகளிலும் இடம் பிடித்திருப்பது பலம்.
இன்று தொடங்கும் முதல் டி20 ஆட்டத்தில் இந்திய அணி வெற்றியுடன் தொடங்க முனைப்புக் காட்டும். அது எளிதாகவும் இருக்கும் என்று வரலாறு சொல்கிறது. இந்த 2 அணிகளும் மோதிய 17 டி20 ஆட்டங்களில் இந்தியா 14 ஆட்டங்களில் வென்று இருக்கிறது. அதிலும் கடைசியாக மோதிய 5 ஆட்டங்களில் ஒன்றில் கூட இந்தியா தோற்கவில்லை. அதே நேரத்தில் சமரி அட்டப்பட்டு தலைமையிலான இலங்கை அணிக்கு சொந்த மண்ணில் விளையாடுவது கூடுதல் பலம். அனுபவ, அறிமுக வீராங்கனைகள் கொண்ட இலங்கை அணி சாதிக்க துடிப்பது இந்தியாவுக்கு சவாலாக இருக்கலாம்.
மேலும் செய்திகள்
ரூட் - பேர்ஸ்டோ அபார ஆட்டம் இமாலய இலக்கை விரட்டி இங்கிலாந்து அணி சாதனை: தொடரை சமன் செய்து அசத்தல்
சில்லி பாய்ன்ட்...
விம்பிள்டன் டென்னிஸ் 34 வயது மரியா முதல் முறையாக அரையிறுதிக்கு தகுதி!
விம்பிள்டன் டென்னிஸ் காலிறுதியில் ரைபாகினா
மாஸ்டர்ஸ் மகளிர் உலக கோப்பை: இங்கிலாந்து செல்லும் இந்திய ஹாக்கி அணி
வங்கதேசத்துடன் 2வது டி20: வெஸ்ட் இண்டீஸ் வெற்றி
தொடர் கனமழை : சிட்னி நகரத்தை சூழ்ந்த வெள்ளம்.. 50 ஆயிரம் மக்கள் வீடுகளை விட்டு வெளியேற அறிவுறுத்தல்..
மெக்சிகோவில் விநோதம்.! பெண் முதலையை முத்தம் கொடுத்து மணந்த மேயர்!!
தோண்ட தோண்ட சடலங்கள்.. மணிப்பூரில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 42 ஆக உயர்வு!!
அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் லாரி ஒன்றில் 53 அகதிகள் சடலமாக மீட்பு... 16 பேர் கவலைக்கிடம்!!
கலிபோர்னியாவில் மீண்டும் பற்றி எரியும் காட்டுத் தீ..135 ஏக்கர் வனப்பகுதி தீக்கிரை..!!