நெல்லையில் இன்று முதல் டிஎன்பிஎல் தொடக்கம்
2022-06-23@ 00:04:46

திருநெல்வேலி: இன்று தொடங்கும் தமிழ்நாடு பிரிமீயர் லீக்(டிஎன்பிஎல்) டி20 கிரிக்கெட் போட்டியின் முதல் ஆட்டத்தில் சேப்பாக்கம்-நெல்லை அணிகள் களம் காண உள்ளன.டிஎன்பிஎல் போட்டியின் 6வது தொடர் இன்று நெல்லையில் தொடங்குகிறது. மொத்தம் 2 அணிகள் பங்கேற்கும் இந்த தொடர் நெல்லை, திண்டுக்கல், சேலம், கோவை ஆகிய இடங்களில் நடைபெறும். கொரோனா விதிகள் தளத்தப்பட்டு உள்ளதால் ஆட்டங்களை காண 100சதவீத ரசிகர்களுக்கு அனுமதி அளிக்கப்படும்.இந்திய அணியில் ஆடிய முரளி விஜய், டி.நடராஜன், விஜய் சங்கர், ஐபிஎல் தொடர்களில் இடம்பிடித்த அருண் கார்த்திக், முருகன் அஷ்வின் , ஜி.பெரியசாமி சாய் கிஷோர், பாபா இந்திரஜித், அபரஜித், நாரயண் ஜெகதீசன், மணிமாறன் சித்தார், சாய் சுதர்சன், ரகுபதி சிலம்பரசன், செழியன் ஹரிநிஷாந்த், சதுர்வேத் என பெரும் படையே இந்த தொடரில் கலக்க காத்திருக்கின்றது.
ரவுண்ட் ராபின் முறையில் நடைபெறும் இந்த தொடரில் மொத்தம் 28லீக் ஆட்டங்கள், ஜூலை 24ம் தேதி வரை நடக்கும். அத்துடன் பிளே ஆப் சுற்றில் பைனல் உட்பட 4 ஆட்டங்கள் நடைபெறும். இறுதி ஆட்டம் ஜூலை 31ம் தேதி கோவையில் நடக்க உள்ளது.
இன்று நெல்லையில் நடைபெறும் முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் சேப்பாக் சூப்பர் கில்லீஸ்-நெல்லை ராயல்ஸ் கிங்ஸ் அணிகள் களம் காணுகின்றன.
மேலும் செய்திகள்
ரூட் - பேர்ஸ்டோ அபார ஆட்டம் இமாலய இலக்கை விரட்டி இங்கிலாந்து அணி சாதனை: தொடரை சமன் செய்து அசத்தல்
சில்லி பாய்ன்ட்...
விம்பிள்டன் டென்னிஸ் 34 வயது மரியா முதல் முறையாக அரையிறுதிக்கு தகுதி!
விம்பிள்டன் டென்னிஸ் காலிறுதியில் ரைபாகினா
மாஸ்டர்ஸ் மகளிர் உலக கோப்பை: இங்கிலாந்து செல்லும் இந்திய ஹாக்கி அணி
வங்கதேசத்துடன் 2வது டி20: வெஸ்ட் இண்டீஸ் வெற்றி
தொடர் கனமழை : சிட்னி நகரத்தை சூழ்ந்த வெள்ளம்.. 50 ஆயிரம் மக்கள் வீடுகளை விட்டு வெளியேற அறிவுறுத்தல்..
மெக்சிகோவில் விநோதம்.! பெண் முதலையை முத்தம் கொடுத்து மணந்த மேயர்!!
தோண்ட தோண்ட சடலங்கள்.. மணிப்பூரில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 42 ஆக உயர்வு!!
அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் லாரி ஒன்றில் 53 அகதிகள் சடலமாக மீட்பு... 16 பேர் கவலைக்கிடம்!!
கலிபோர்னியாவில் மீண்டும் பற்றி எரியும் காட்டுத் தீ..135 ஏக்கர் வனப்பகுதி தீக்கிரை..!!