எரியாத மின் விளக்குகளால் இருளில் மூழ்கும் கிழக்கு கடற்கரை சாலை: வாகன ஓட்டிகள் அவதி
2022-06-22@ 00:38:16

சென்னை: சென்னை - புதுச்சேரி இடையே உள்ள கிழக்கு கடற்கரை சாலை முக்கிய போக்குவரத்து தடமாக உள்ளது. தினசரி ஆயிரக்கணக்கான வாகனங்கள் பயன்படுத்தும் இந்த சாலையில், மாமல்லபுரம் அடுத்த பட்டிப்புலத்தில் இருந்து திருவிடந்தை பகுதி வரை சுமார் 8 கிலோ மீட்டர் தூரத்திற்கு சென்டர் மீடியனில், தமிழ்நாடு சாலை மேம்பாட்டு நிறுவனம் சார்பில் 100க்கும் மேற்பட்ட மின் விளக்குகள் அமைக்கப்பட்டது. இது வாகன ஓட்டிகளுக்கு பயனுள்ள வகையில் இருந்தது.
இந்நிலையில், கடந்த 2 மாதங்களாக இந்த மின் விளக்குகள் எரியாததால் இரவு நேரங்களில் சாலை இருளில் மூழ்கியுள்ளது. இதனால், வாகன ஓட்டிகள் தடுமாறியபடி செல்வதுடன், அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன. எனவே, இச்சாலையின் முக்கியத்துவம் கருதி, அனைத்து மின் விளக்குகளும் இரவு நேரங்களில் பிரகாசமாக எரியும் வகையில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென வானக ஓட்டிகள், சமூக ஆர்வலர்கள் வலியுத்தி உள்ளனர்.
மேலும் செய்திகள்
புகைப்படத்தை மார்பிங் செய்து ஆபாசமாக வெளியிட்ட பாஜக நிர்வாகி மீது நடவடிக்கை: சைபர் கிரைமில் நடிகை காயத்ரி ரகுராம் பரபரப்பு புகார்
பரோட்டா சாப்பிட்டு தூங்கிய வாலிபர் உயிரிழந்த பரிதாபம்: வியாசர்பாடியில் பரபரப்பு
கோயம்பேடு பேருந்து நிலையத்தில் 10வது நாளாக சிஎம்டிஏ அதிகாரிகள், போலீசார் தீவிர கண்காணிப்பு பணி
ஜெயக்குமார் மீதான நில அபகரிப்பு வழக்கு ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு.!
சென்னை விமான நிலையத்தில் ஜி-20 மாநாட்டு குழுவினரை வரவேற்பதற்கான பதாகைகளில் முதல்வர் படம் இல்லாததால் அதிருப்தி
10,11,12-ம் பொதுத்தேர்வுக்கு விண்ணப்பிக்கத் தவறிய தனித்தேர்வர்கள் தக்கல் முறையில் விண்ணப்பித்துக் கொள்ளலாம்: அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!
சீனாவில் வசந்த காலத் திருவிழா கோலாகலக் கொண்டாட்டம்: கலாச்சார நிகழ்வுகள், விளையாட்டுப் போட்டிகள் என உற்சாகம்..!
ஆரஞ்சு மரத்தை அதிர்ஷ்டமாக கருதும் ஹாங்காங் மக்கள்: வேண்டுதல்களை தாள்களில் எழுதி மரத்தில் தொங்கவிட்டு பிரார்த்தனை..!!
மும்பையில் கோலாகலமாக நடைபெற்ற செல்லப் பிராணிகள் திருவிழா: லிம்கா சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ள Pet Fed நிகழ்ச்சி
பிரான்ஸ் அரசின் ஓய்வூதிய சீர்திருத்தக் கொள்கைக்கு எதிர்ப்பு: அதிபர் மேக்ரான் அரசுக்கு எதிராக நாடு தழுவிய போராட்டம்..!!