தேர்தல் சீர்திருத்தம்
2022-06-20@ 00:37:48

நாட்டை ஆளப்போகும் தலைவர்களை தேர்வு செய்வதில் இந்தியா போன்ற நாடுகளில் இன்னமும் விழிப்புணர்வு ஏற்பட்ட மாதிரி தெரியவில்லை. நூறு சதவீதம் வாக்குப்பதிவு என்பது தேர்தல் ஆணையத்தின் இலக்காக இருந்தாலும், முன்னேறிய மாநிலங்களில் கூட 80 சதவீத வாக்குப்பதிவு நடப்பதில்லை. இந்நிலையில் தேர்தல் விதிமுறைகளில் சில சீர்திருத்தங்கள் அவசியமாகிறது. கடந்த 2021ம் ஆண்டு தேர்தல் விதிமுறைகள் திருத்த சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு விட்டது.
அதன்படி வாக்காளர் பட்டியலை ஆதார் எண்ணுடன் இணைப்பது விரைவில் அமலாகிறது. ஒருவர் வாக்காளராக பதிவு செய்யும்போதே, அவரது ஆதார் விபரங்களும் கோரப்படும். ஒரு வாக்காளருக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட தொகுதியில் பெயர் இருப்பதை இதன்மூலம் தடுக்க முடியும். அதே சமயம் ஒருவருக்கு ஆதார் எண் இல்லை என்பதற்காக, அவருக்கு வாக்குரிமை மறுக்கவும் கூடாது என தேர்தல் விதிமுறை சட்டம் தெளிவாக கூறுகிறது. மேலும் தேர்தல்களில் ஜனவரி 1ம் தேதி வரை 18 வயது பூர்த்தி அடைந்தவர்கள் மட்டுமே அவ்வாண்டு நடக்கும் தேர்தலில் வாக்களித்து வந்தனர்.
பிப்ரவரி மாதத்திலோ, ஏப்ரல் மாதத்திலோ 18வயது பூர்த்தி அடைந்தவர்கள் அதே ஆண்டில் நடக்கும் தேர்தலில் வாக்களிக்க முடியாது. இனிமேல் ஜனவரி 1, ஏப்ரல் 1, ஜூலை 1 மற்றும் அக்டோபர் 1 ஆகிய தேதிகளில் கூட புதிய வாக்காளர்கள் தாங்கள் 18 வயது பூர்த்தியானதை தெரிவித்து வாக்காளராக இடம் பெற முடியும். இத்தகைய புதிய சீர்திருத்தங்கள் விரைவில் அமலாக உள்ள நிலையில், வாக்காளர்கள் மத்தியில் அதற்கான வரவேற்பு குறித்து வருங்காலங்களில் தெரியும்.
இந்தியாவை பொறுத்தவரை தேர்தல் சீர்திருத்தங்கள் என்பது புதியதல்ல. நாம் சுதந்திரம் பெறுவதற்கு முன்பு படித்தவர்களும், சொத்து அதிகம் வைத்திருப்ேபார் மட்டுமே வாக்களிக்க முடியும் என்ற நிலை இருந்தது. சுதந்திரம் பெற்ற பின்னர், 21 வயது நிரம்பிய அனைவருக்கும் வாக்களிக்கும் உரிமை வழங்கப்பட்டது.
1988ம் ஆண்டு வாக்களிப்பதற்கான வயதை 21ல் இருந்து 18 ஆக தேர்தல் ஆணையம் குறைத்தது. வேட்பாளர்களின் சொத்து மதிப்பை குறிப்பிடுவது, வாக்குப்பதிவு இயந்திரத்தில் வாக்களிப்பது, கருத்து கணிப்புகளுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள், நோட்டா அறிமுகம் என இந்திய தேர்தல்கள் பல்வேறு மாற்றங்களை காலப்போக்கில் எதிர்கொண்டதை மறுக்க முடியாது. இத்தகைய சூழலில் தேர்தல் ஆணையம் இப்போது கொண்டு வரும் சீர்திருத்தங்களும் வாக்காளர்களுக்கு பயனுள்ளதாகவே இருக்க வேண்டும். அதே சமயம் ஆதார் அட்டையை இணைக்கவில்லை என கூறி ஆயிரக்கணக்கானோரின் வாக்குரிமையை பறித்தால், அதை விட ஜனநாயகத்திற்கு பேராபத்து எதுவுமில்லை.
மேலும் செய்திகள்
உரிமை கோராத டெபாசிட்
தொடரும் ரெய்டு
ஆரோக்கியமான சமுதாயம்
தமிழகம் ஒளிர்கிறது
தமிழர் பெருமை
வழக்காடு மொழி தமிழ்
நாட்டின் 75-வது சுதந்திர தின கொண்டாட்டம்: மூவர்ண விளக்குகளால் ஜொலிக்கும் ஒன்றிய, மாநில அரசு கட்டடங்கள்..!!
போதையைத் தவிர்..கல்வியால் நிமிர்!: தமிழக பள்ளி மாணவர்கள் போதைக்கு எதிராக உறுதிமொழி ஏற்பு..!!
கியூபாவில் பயங்கர தீ விபத்து: 17 பேர் பலி..!!
தென்கொரியாவை புரட்டிபோட்ட கனமழை!! இதுவரை 9 பேர் பலி..
பிரிட்டன் ஃபார்ன் தீவில் பரவும் பறவை காய்ச்சல்: ஆயிரக்கணக்கான பறவைகள் துடிதுடித்து இறப்பு..!!