SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அக்னியாய் சுடும் திட்டங்கள்

2022-06-19@ 00:26:38

ஒன்றிய அரசின் புதிய அறிவிப்புகள், திட்டங்கள், திருத்த மசோதாக்கள், நாட்டு மக்களுக்கு எதிரானதாகவே உள்ளதாக கூறி தொடர்ந்து போராட்டங்கள் நாடு முழுவதும் நடந்து வருகின்றன. ஏற்கனவே வேளாண் திருத்த சட்ட மசோதாவை எதிர்த்து தலைநகர் டெல்லி, பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில் விவசாயிகள் தீவிர போராட்டங்களை நடத்தி வந்தனர். இதில் நூற்றுக்கணக்கான விவசாயிகள் உயிரிழந்தனர். போராட்டத்தின் தீவிரத்தை மிகவும் தாமதமாக உணர்ந்த ஒன்றிய அரசு, வேளாண் திருத்த சட்ட மசோதாவை திரும்ப பெற்றது.

இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனமான எல்ஐசியின் பங்குகளை விற்கும் முடிவுக்கும் நாடு முழுவதும் எதிர்ப்பலை வீசி வருகிறது. எல்ஐசி ஊழியர்கள் ஒன்றிய அரசின் இந்த முடிவை எதிர்த்து தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். அடுத்த கட்டமாக, பாரத் கவுரவ் திட்டத்தின்படி 5 பெருநகரங்களில் இருந்து தனியார் ரயில்களை இயக்க ரயில்வே அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது. இதையடுத்து நாட்டின் முதல் தனியார் ரயில் கோவையிலிருந்து ஷீரடிக்கு கடந்த 14ம் தேதி இயக்கப்பட்டது. இதே நிலையில் ரயில்களை இயக்கினால் ரயில்வே முழுமையாக தனியார்மயமாவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக கூறி, எஸ்ஆர்எம்யூ உள்ளிட்ட ரயில்வே தொழிற் சங்கங்களின் ஊழியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்த தனியார் ரயிலில் கட்டணமும் அதிகளவு உள்ளதாக பயணிகள் புலம்பி வருகின்றனர். உதாரணத்திற்கு, கோவை - ஷீரடிக்கு 1,458 கிமீ பயண தூரம். இதில் ஸ்லீப்பர் கட்டணமாக ரூ.2,500 பெறப்பட்டுள்ளது. ஏற்கனவே ரூ.1,280 மட்டுமே பெறப்பட்டது. இதுபோல ஒவ்வொரு கட்டணமும் உயர்த்தப்பட்டுள்ளது. மேலும், பயணத்தின்போது தரமான உணவுகள் வழங்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டுகளையும் பயணிகள் தெரிவித்துள்ளனர். திமுக எம்பி டி.ஆர்.பாலு, இதுதொடர்பாக ஒன்றிய ரயில்வே அமைச்சருக்கு எழுதியுள்ள கடிதத்தில், தனியார் ரயில்வே சேவையை அனுமதிப்பதால் இந்திய ரயில்வேயின் பங்கு பறிக்கப்படும். எனவே, கோவை - ஷீரடி தனியார் ரயில் சேவையை ஒன்றிய அரசு உடனடியாக திரும்ப பெற வேண்டுமென தெரிவித்துள்ளார்.

முப்படைகளில் குறுகிய கால ஆட் சேர்ப்பு திட்டமான அக்னிப்பாதை திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் போராட்டங்கள் வெடித்துள்ளன. பல இடங்களில் ரயில்கள், பஸ்கள் எரிக்கப்பட்டுள்ளன. நாட்டின் பாதுகாப்பில் முப்படைகளின் பங்கு மிகவும் முக்கியமானது. 4 ஆண்டு ஒப்பந்த அடிப்படையில் சேர்க்கப்படும் வீரர்களில், 75 சதவீத வீரர்கள் விடுவிக்கப்படுவார்கள். பென்ஷன் கிடையாது என ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. இதனை கண்டித்தும் பீகார், ராஜஸ்தானில் தொடங்கிய போராட்டங்கள், படிப்படியாக அதிகரித்து தெலங்கானா, அரியானா, மத்திய பிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலும் தீவிரமடைந்துள்ளன.

சென்னையிலும் போராட்டங்கள் தொடங்கி உள்ளது. ஒன்றிய அரசின் இந்த திட்டத்தால், முப்படைவீரர்களின் அர்ப்பணிப்பு உணர்வு கேள்விக்குறியாகும் நிலை உள்ளது. மறைமுகமாக நாட்டின் பாதுகாப்பும் தனியார்மயமாகிறதோ என்ற கேள்வி நாட்டு மக்களின் மனதில் எழுந்துள்ளது. அக்னி வீரர்களுக்கு இட ஒதுக்கீடு, சலுகை என ஒன்றிய அரசு கூறி வந்தாலும், மக்கள் விரோத இந்த திட்டத்தையும் உடனடியாக வாபஸ் பெற வேண்டுமென கோரிக்கையை எதிர்க்கட்சிகள் வலுவாக முன் வைத்துள்ளன.

LikeGamezop
Like Us on Facebook Dinkaran Daily News
  • inde-12

    நாட்டின் 75-வது சுதந்திர தின கொண்டாட்டம்: மூவர்ண விளக்குகளால் ஜொலிக்கும் ஒன்றிய, மாநில அரசு கட்டடங்கள்..!!

  • drugs-11

    போதையைத் தவிர்..கல்வியால் நிமிர்!: தமிழக பள்ளி மாணவர்கள் போதைக்கு எதிராக உறுதிமொழி ஏற்பு..!!

  • cuba-fire-accident

    கியூபாவில் பயங்கர தீ விபத்து: 17 பேர் பலி..!!

  • south korea

    தென்கொரியாவை புரட்டிபோட்ட கனமழை!! இதுவரை 9 பேர் பலி..

  • birds-flu-10

    பிரிட்டன் ஃபார்ன் தீவில் பரவும் பறவை காய்ச்சல்: ஆயிரக்கணக்கான பறவைகள் துடிதுடித்து இறப்பு..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்