SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அக்னிபாத் திட்டத்தை எதிர்த்து 2 இளைஞர்கள் தற்கொலை... துணை ராணுவ படைகளில் 10% முன்னுரிமை தருவதாக ஒன்றிய அரசு சமாதானம்

2022-06-18@ 11:34:49

ஹைதரபாத் : அக்னிபாத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து 2 இளைஞர்கள் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முப்படைகளில் குறுகிய கால ஆட்சேர்ப்புக்கான அக்னிபாதை திட்டத்தை ஒன்றிய அரசு கடந்த 13ம் தேதி அறிவித்தது. இதன்படி 17.5 வயது முதல் 21 வயதுக்கு உட்பட்ட இளைஞர்கள் 4 ஆண்டுகால ராணுவ பணியில் சேரலாம். இவர்களில் 75 சதவீதம் பேர் 4 ஆண்டுக்குப் பின் பணியிலிருந்து விடுவிக்கப்படுவர். அவர்களுக்கு பென்சன் கிடையாது. இத்திட்டம் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து ராணுவத்தில் ஆட்சேர்ப்புக்கான முந்தைய நடவடிக்கைகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதனால், பல ஆண்டுகள் கஷ்டப்பட்டு, தேர்வு எழுதி முடிவுக்காக காத்திருக்கும் இளைஞர்கள் கொந்தளித்துள்ளனர்.இதையடுத்து அக்னிபாதை திட்டத்திற்கு எதிரான போராட்டம் தென் மாநிலங்கள் உட்பட நாடு முழுவதும் நேற்று பரவியது. தெலங்கானா, பீகார், அரியானா, மத்திய பிரதேசம், உபி உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட மாநிலங்களில் போராட்டம் வன்முறையாக வெடித்துள்ளது. நாடு முழுவதும் ரயில் எரிப்பு சம்பவங்களும் நடைபெற்று வருகிறது. நாடு முழுவதும் குறைந்தது 12 ரயில்கள் தீவைக்கப்பட்டுள்ளன.

இளைஞர்கள் 2 பேர் தற்கொலை!!

இந்நிலையில் ஒடிசா மாநிலம் பாலாசூர் மாவட்டத்தை சேர்ந்த தனஞ்சய் மொஹாந்தி என்ற இளைஞர் நான்கு ஆண்டுகளாக இந்திய ராணுவத்தில் சேர்வதற்காக தொடர் பயிற்சியில் ஈடுபட்டு வந்த நிலையில் ஒன்றிய அரசின் அக்னிபாத்  திட்டத்தால் தனது ராணுவ கனவு நிராசை ஆகிவிட்டது என்று மனமுடைந்து தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். அதேபோல் ஹரியானா மாநிலம் ரோஹ்டாக் மாவட்டத்தில் உள்ள
ஜிண்டின் லஜ்வானா கிராமத்தைச் சேர்ந்த சச்சின் என்ற 23 வயது இளைஞர் ஒருவரும் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

ஒன்றிய அமைச்சகம் சலுகை அறிவிப்பு!!

நாடு முழுவதும் போராட்டம் வலுத்து வரும் நிலையில் அக்னிபாத் திட்டத்தின் கீழ் சேரும் வீரர்களுக்கு ஒன்றிய உள்துறை அமைச்சகம் சலுகை அறிவித்துள்ளது. அக்னிபாத் திட்டத்தின் கீழ் பணி செய்வோருக்கு துணை ராணுவப் படைகளான மத்திய ஆயுதப்படை மற்றும் அசாம் ரைபிள்ஸ் பிரிவில் 10% இட ஒதுக்கீடு அளிக்கப்படும் என்றும் துணை ராணுவம் மற்றும் அசாம் ரைபிள்ஸ் பிரிவில் சேரும் அக்னி பாத் வீரர்களுக்கு வயது வரம்பிலும் 3 ஆண்டுகள் சலுகை வழங்கப்படும் என்றும் உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. அதே போல் அக்னி பாத் திட்டத்தில் முதல் சுற்றில் தேர்வாவோருக்கு வயது உச்ச வரம்பில் 5 ஆண்டுகள் கூடுதல் சலுகை வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • spain-trees-24

    ஸ்பெயினில் ராக்கெட் வேகத்தில் பரவி வரும் காட்டுத் தீ; சாம்பலாகும் அரிய பெரிய மரங்கள்..!!

  • gandhi-13

    ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள செல்பிக்கள்

  • taipei-fashion-week-taiwan

    தைவானில் உள்ள தைபே ஃபேஷன் வீக் பாரம்பரிய உடைகளில் கவனம் செலுத்துகிறது..!!

  • kalifffo1

    தண்ணீரில் நகரம் .. கண்ணீரில் மக்கள்... கலிஃபோர்னியாவை புரட்டிப்போட்ட பேய் மழை, சூறைக்காற்று!!

  • pak-123

    பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 9 பேர் பலி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்