SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சில்லி பாயின்ட்...

2022-06-15@ 00:49:41

*கிராண்ட் ஸ்லாம்  போட்டியான விம்பிள்டன், ஜூன் 27ம் தேதி லண்டனில் தொடங்குகிறது. இந்த ஆண்டுக்கான மொத்த பரிசுத்தொகை ரூ.383.12 கோடியாக அறிவிக்கப்பட்டுள்ளது (கடந்த ஆண்டை விட 11.1 சதவீதம் அதிகம்). ஒற்றையர் பிரிவுகளில் பட்டம் வெல்பவர்களுக்கு தலா ரூ19 கோடி கிடைக்கும். கத்தாரில் இந்த ஆண்டு இறுதியில் நடைபெற உள்ள  உலக கோப்பை கால்பந்து போட்டியில்  விளையாட ஏற்கனவே 30 அணிகள் தகுதி பெற்றிருந்தன. எஞசிய 2 இடங்களுக்கான போட்டியில் ஆஸ்திரேலியா - பெரு, நியூசிலாந்து - கோஸ்டாரிகா மோதின. ஆஸி. - பெரு இடையிலான ஆட்டம்  0-0 என டிராவில் முடிய, பெனால்டி ஷூட் அவுட்டில் ஆஸி  5-4 என்ற கோல் கணக்கில் வென்று 31வது அணியாக முன்னேறியது.   ஐஎஸ்எல் கால்பந்து போட்டியில் பங்கேற்கும் சென்னையின் எப்சி அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக  தாமஸ் பிரட்ரிக் (47 வயது) நியமிக்கப்பட்டுள்ளார்.  ஜெர்மனியை சேர்ந்த முன்னாள் கால்பந்து வீரரான  தாமஸ்  ஓய்வுக்கு பிறகு பயிற்சியாளராக பணியாற்றி வருகிறார். பல்வேறு அணிகளுக்கு தலைமை பயிற்சியாளராக இருந்தபோது நடந்த 75 ஆட்டங்களில் 50 வெற்றிகளை பெற்றுள்ளார் (15 டிரா). சிறந்த பயிற்சியாளர் விருதையும் பெற்றுள்ளார்.

* இந்தோனேசியாவில் நடக்கும் ஈஸ்ட் வென்ச்சர்ஸ் ஓபன் பேட்மின்டன் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின்  பி.வி.சிந்து 14-21, 18-21 என நேர் செட்களில் சீனாவின்  ஜியோ பிங் ஹீயிடம் அதிர்ச்சி தோல்வி கண்டார்.  ஆடவர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் சாய் பிரனீத், கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின்  இஷான் பட்நாகர் - தனிஷா கிறிஸ்டோ தோல்வியை சந்தித்து ஏமாற்றமளித்தனர்.  ஜோர்டனில் நடந்த  மாற்றுத் திறனாளிகளுக்கான பாரா  டேபிள்  டென்னிஸ் போட்டியில்   தமிழக வீரர் ஏ.ராஜ் அரவிந்தன் வெண்கலம் (பிரிவு-5)  வென்றார். நாடு திரும்பிய அவருக்கு  தமிழ்நாடு  பாரா டேபிள்  டென்னிஸ் மேம்பாட்டு சங்க நிர்வாகிகள் பாராட்டு தெரிவித்துள்ளனர். ஸ்போர்ட்டனா அகடமி சார்பில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கான  விளையாட்டுப் போட்டி நடைபெற உள்ளது. சென்னை சேத்துப்பட்டு நேரு பூங்காவில்   இம்மாதம் 25ம்தேதி நடைபெறும் இந்தப் போட்டியில் பங்கேற்க விரும்புவோர் தொடர்பு கொள்ள: 86104 43961.

Like Us on Facebook Dinkaran Daily News
 • gandhi-13

  ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள செல்பிக்கள்

 • taipei-fashion-week-taiwan

  தைவானில் உள்ள தைபே ஃபேஷன் வீக் பாரம்பரிய உடைகளில் கவனம் செலுத்துகிறது..!!

 • kalifffo1

  தண்ணீரில் நகரம் .. கண்ணீரில் மக்கள்... கலிஃபோர்னியாவை புரட்டிப்போட்ட பேய் மழை, சூறைக்காற்று!!

 • pak-123

  பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 9 பேர் பலி

 • cherry-blossom-tokyo

  டோக்கியோ, வாஷிங்டன், பெய்ஜிங்கில் செர்ரி மலரும் பருவம் தொடக்கம்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்