நாட்டிலேயே முதல்முறையாக கோவையில் இருந்து சீரடி செல்லும் முதல் தனியார் ரயில் சேவை இன்று மாலை 6 மணிக்கு தொடக்கம்!!
2022-06-14@ 12:38:53

கோவை : நாட்டிலேயே முதல்முறையாக கோவையில் இருந்து சீரடி செல்லும் முதல் தனியார் ரயில் சேவை இன்று தொடங்குகிறது. ரயில்களை இயக்க தனியாருக்கு அனுமதி வழங்கிய பிறகு தனியார் மூலம் இயக்கப்படும் முதல் ரயில் சேவை இதுவாகும். வாரம் ஒரு முறை மட்டுமே இயக்கப்படும் இந்த சிறப்பு ரயில் இன்று மாலை கோவையில் இருந்து 6 மணிக்கு சீரடிக்கு புறப்படுகிறது. இதன் டிக்கெட் முதல் பராமரிப்பு பணிகள் வரை தனியார் நிறுவனமே மேற்கொள்ள உள்ளது.
பிரதமர் மோடியின் பாரத் கவுரவ் திட்டத்தின் கீழ் தனியார் வசம் கொடுக்கப்பட்டுள்ள ரயிலில் உள்கட்டமைப்பு வடிவங்களை தனியார் நிறுவனம் மேற்கொண்டுள்ளது. இதற்காக, போத்தனூர் ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த பணிகளை தெற்கு ரயில்வே பொது மேலாளர் பி.ஜி.மல்யா, சேலம் கோட்ட மேலாளர் கவுதம் சீனிவாசன் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர். தனியார் வசம் கொடுக்கப்படும் ரயிலில் பயணிகளுக்கு செய்யப்பட்டுள்ள வசதிகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தனர்.
குறிப்பாக, பயணிகளுக்கு செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள், உணவு வசதிகள், செல்போன் சார்ஜ், மற்றும் பயணிகளுக்கு வழங்கப்படும் படுக்கை, போர்வை, உள்ளிட்ட பொருட்கள் ஆகியவற்றை ஆய்வு செய்தனர். ரயில்வே துறை சேவைகளை தனியார் வசம் ஒப்படைக்க தமிழகம் மட்டுமின்றி பிற மாநிலங்களில் இருந்தும் தமிழக எம்பிக்கள் மத்தியில் எதிர்ப்புகள் எழுந்துள்ள நிலையில், இன்று முதல் தனியார் ரயில் சேவை கோவையில் இருந்து துவங்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகள்
நெல்லை - தாம்பரம் இடையே சிறப்பு ரயில் இன்று இயக்கம்
ஏப்ரல் 1 முதல் அமல் கீழடி அருங்காட்சியகத்தில் பார்வையாளர் கட்டணம் நிர்ணயம்
ஊட்டி ஏரியில் வெகு நேரம் காத்திருந்து படகு சவாரி செய்த சுற்றுலா பயணிகள்
ஊட்டியில் கொட்டும் மழையிலும் தாவரவியல் பூங்கா ஊழியர்கள் 3வது நாளாக போராட்டம்
தமிழர்களின் பாரம்பரிய பெருமையை சொல்ல வேண்டும் என்றால் அதற்கு 2 நூற்றாண்டுகள் தேவைப்படும்; அமைச்சர் அன்பில் மகேஷ்
திருத்துறைப்பூண்டி மனநல காப்பகத்தை சுகாதார துறை அதிகாரி ஆய்வு
ஸ்பெயினில் ராக்கெட் வேகத்தில் பரவி வரும் காட்டுத் தீ; சாம்பலாகும் அரிய பெரிய மரங்கள்..!!
ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள செல்பிக்கள்
தைவானில் உள்ள தைபே ஃபேஷன் வீக் பாரம்பரிய உடைகளில் கவனம் செலுத்துகிறது..!!
தண்ணீரில் நகரம் .. கண்ணீரில் மக்கள்... கலிஃபோர்னியாவை புரட்டிப்போட்ட பேய் மழை, சூறைக்காற்று!!
பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 9 பேர் பலி