கோத்தகிரி அருகே டாஸ்மாக் பார்களில் போலீசார் அதிரடி சோதனை: மதுவை பதுக்கி விற்ற 6 ஊழியர் கைது
2022-06-12@ 05:38:56

கோத்தகிரி: நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே கட்டபெட்டு, எஸ்.கைக்காட்டி ஆகிய பகுதிகளில் உள்ள டாஸ்மாக் பார்களில் அதிகாலை நேரம் மற்றும் இரவு முழுவதும் மதுபாட்டில்கள் கூடுதல் விலைக்கு விற்கப்படுவதாக மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், தனிப்படை போலீசார் கட்டபெட்டு மற்றும் எஸ்.கைக்காட்டி பகுதியில் உள்ள டாஸ்மாக் பாரில் அதிரடி சோதனை நடத்தினர்.
அப்போது கட்டபெட்டுவில் 104 மதுபாட்டில்கள், ரூ.12,000 ரொக்கம் மற்றும் எஸ்.கைக்காட்டி பகுதியில் 25 மதுபாட்டில்கள் ரூ.17,000 ரொக்கம் ஆகியவற்றை கைப்பற்றினர். பார் ஊழியர்கள் 6 பேரை தனிப்படை போலீசார் பிடித்து கோத்தகிரி போலீசில் ஒப்படைத்தனர். கோத்தகிரி போலீசார் அவர்களை கைது செய்தனர்.
மேலும் செய்திகள்
ஆட்டோவில் கஞ்சா கடத்திய பெண்ணுக்கு 5 ஆண்டு கடுங்காவல்
புளியந்தோப்பில் போதைப்பொருள் கடத்தல் 3 பேருக்கு தலா 10 ஆண்டு சிறை: சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு
சினிமா பைனான்சியரிடம் ரூ. 35 லட்சம் மோசடி உதயம் தியேட்டர் முன்னாள் உரிமையாளர் கைது
கொள்ளை போனதாக பொய் புகார் 3 கிலோ தங்க நகையுடன் ஊழியர்கள் பிடிபட்டனர்
ஐஸ்வர்யா வீட்டை தொடர்ந்து ரஜினி வீட்டிலும் கைவரிசை புகார் அளித்ததோ 60 சவரன்; பறிமுதலோ ரூ. 3 கோடி நகைகள்: வேலைக்கார பெண், கார் டிரைவரிடம் விடிய விடிய விசாரணை
போலி பெண் டாக்டர் கைது
ஈக்வடார் நாட்டில் பயங்கர நிலச்சரிவு : 16 பேர் பலி
அடடா.. என்ன ஒரு அழகு!: ஆண்களெல்லாம் அழகு தேவதையாக மாறும் கேரள திருவிழா..!!
இஸ்ரேலில் நீதித்துறையின் அதிகாரத்தை குறைக்க புதிய சட்டம்: பிரதமர் நெதன்யாகுவுக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டம்..!!
அதிமுக பொதுச்செயலாளரானார் எடப்பாடி பழனிசாமி: இனிப்பு வழங்கி பட்டாசு வெடித்து தொண்டர்கள் கொண்டாட்டம்!!
ஜெர்மனியில் போக்குவரத்து ஊழியர்கள் மிகப்பெரிய வேலை நிறுத்தப் போராட்டம் : வெறிச்சோடிய நகரங்கள்!!