ஸ்ரீனிவாச பெருமாள் கோயில் மகா கும்பாபிஷேகம்: பக்தர்கள் பெருந்திரளாக பங்கேற்பு
2022-06-08@ 02:07:41

செங்கல்பட்டு: செங்கல்பட்டு அண்ணா நகர் பகுதியில் இரத்தின வினாயகர் கோயில் வளாகம் உள்ளது. இதில் ஸ்ரீதேவி பூமாதேவி சமேத நிவாசப் பெருமாள் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில், நீலாதேவி சமேத ஸ்ரீநிவாச பெருமாள், ஸ்ரீபத்மாவதி தாயார், ஸ்ரீஆண்டாள், கருடாழ்வார், ஆஞ்சநேயர், பால் முனீஸ்வரர் வைணவ என சன்னதிகள் திருப்பணி, கொடிமரம் மற்றும் விமான கோபுரங்களின் சீரமைக்கும் பணிகள் நிறைவு பெற்றது.
மஹாகும்பாபிஷேக விழாவையொட்டி, நேற்று முன்தினம் காலை நைமித்திக ஆராதனம், ஆச்சார்யாவரணம், வேத திவ்ய பிரபந்தம் தொடக்கம், புண்ணியாக வாசனம், பகவத் பிரார்த்தனை, மேதினி ஆராதனம், பாலிகை பிரதிஷ்டை, அங்குரார்ப்பணம், வாஸ்து ஹோமம், கும்ப ஆவாகனம், உக்தஹோமம், பூர்ணாஹுதி, மங்களஆர்த்தி உள்ளிட்ட பல்வேறு ஹோமங்கள் நடைபெற்றது. இதனையடுத்து, நேற்று னிவாச பெருமாளுக்கு புனிதநீர் தெளிக்கப்பட்டு கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைப்பெற்றது. இதில், ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர். கும்பாபிஷேகத்திற்கான ஏற்பாடுகளை ஆலய நிர்வாக குழு தலைவர் ஷண்முகநாதன், துணை செயலாளர் செந்தில்நாதன், துணைத்தலைவர் பார்த்திபன், பொருளாளர் தியாகராஜன் மற்றும் நிர்வாக குழு உறுப்பினர்கள் ஆகியோர் சிறப்பாக செய்து இருந்தனர்.
மேலும் செய்திகள்
சட்டப்பிரிவு 20ன் படி இந்திய குடிமகன் அல்லாதவருக்கும் பாஸ்போர்ட் வழங்க வேண்டும்: ஐகோர்ட் கிளை உத்தரவு
சவுதி அரேபியாவில் ஈரான் கடற்கொள்ளையர்கள் அட்டூழியம் தமிழக மீனவர்கள் மீது துப்பாக்கி சூடு: குண்டு பாய்ந்து குமரி மீனவர் படுகாயம்
ஷேர் மார்க்கெட்டில் நஷ்டம் தாய், மகன் விஷம் குடித்து தற்கொலை
தேசிய கீதம் அவமதிப்பு எஸ்ஐ அதிரடி சஸ்பெண்ட்
கோயில்களை லாபம் பார்க்கும் இடமாக மாற்றக்கூடாது: போலி இணையதள வழக்கில் ஐகோர்ட் கிளை கருத்து
கச்சத்தீவு அந்தோணியார் ஆலய திருவிழா தமிழ்நாட்டு பக்தர்கள் 2,500 பேருக்கு அனுமதி: பிப். 10க்குள் விண்ணப்பிக்க வேண்டும்
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!
சீனாவில் வசந்த காலத் திருவிழா கோலாகலக் கொண்டாட்டம்: கலாச்சார நிகழ்வுகள், விளையாட்டுப் போட்டிகள் என உற்சாகம்..!
ஆரஞ்சு மரத்தை அதிர்ஷ்டமாக கருதும் ஹாங்காங் மக்கள்: வேண்டுதல்களை தாள்களில் எழுதி மரத்தில் தொங்கவிட்டு பிரார்த்தனை..!!