பாஜ நிர்வாகிகளை தேச துரோக சட்டத்தில் கைது செய்ய வேண்டும்: எஸ்.டி.பி.ஐ. தலைவர் பேட்டி
2022-06-08@ 00:17:51

சென்னை: உலக நாடுகள் மத்தியில் இந்தியாவிற்கு பெரும் தலைகுனிவை ஏற்படுத்திய பாஜ நிர்வாகிகளை தேசத்துரோக சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என்று எஸ்.டி.பி.ஐ. கட்சி தலைவர் நெல்லை முபாரக் கூறியுள்ளார்.சென்னையில் உள்ள எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைமையகத்தில் மாநில தலைவர் நெல்லை முபாரக் நேற்று அளித்த பேட்டி:உலகம் முழுவதும் 200 கோடிக்கும் அதிகமான மக்களால், தங்கள் உயிரினும் மேலாக பெரிதும் மதிக்கும் இறைத்தூதர் முகமது நபி (ஸல்) குறித்த பாஜ செய்தி தொடர்பாளர் நுபுர் ஷர்மா மற்றும் நவீன் ஜிண்டால் ஆகியோரின் இழிவான மற்றும் அருவருப்பான பேச்சுகள் கண்டிக்கத்தக்கது. ஆகவே பாஜ நிர்வாகிகள் நுபுர் ஷர்மா, நவீன் குமார் ஜிண்டால் ஆகியோரை தேச துரோக சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.பேட்டியின் போது மாநில துணை தலைவர்கள் எஸ்.எம்.ரபீக் அகமது, அப்துல் ஹமீது, பொதுச்செயலாளர்கள் அச.உமர் பாரூக், அகமது நவவி, மாநில அமைப்பு பொதுச்செயலாளர் நஸூருதீன், மாநில செயலாளர்கள் ரத்தினம், அபுபக்கர் சித்திக், ஏ.கே.கரீம், நஜ்மா, பொருளாளர் அமீர் ஹம்சா ஆகியோர் உடனிருந்தனர்.
மேலும் செய்திகள்
சொல்லிட்டாங்க...
ஜனாதிபதியின் உரைக்கு ஏ.சி.சண்முகம் பாராட்டு
நீதிபதி ரோகிணி ஆணையம் பதவிக்காலம் நீட்டிப்பு: பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம்
தோழமை அடிப்படையில் அனைவரிடமும் பேச்சுவார்த்தை நடக்கிறது லேட்டா வந்தாலும் லேட்டஸ்டாக வருவோம்... மாஜி அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி
2 யூடியூப் சேனல்கள் மீது சரத்குமார் புகார்
இருள் விலகட்டும், இந்தியா விடியட்டும் எத்திசையும் அண்ணா எனும் பேரொளி பரவட்டும்: நினைவு நாளான 3ம் தேதி திமுகவினர் அமைதிப் பேரணி; முதல்வர் மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு கடிதம்
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!
சீனாவில் வசந்த காலத் திருவிழா கோலாகலக் கொண்டாட்டம்: கலாச்சார நிகழ்வுகள், விளையாட்டுப் போட்டிகள் என உற்சாகம்..!
ஆரஞ்சு மரத்தை அதிர்ஷ்டமாக கருதும் ஹாங்காங் மக்கள்: வேண்டுதல்களை தாள்களில் எழுதி மரத்தில் தொங்கவிட்டு பிரார்த்தனை..!!