முதலீட்டாளர்கள் அதிர்ச்சி எல்ஐசி பங்கு விலை கடுமையான வீழ்ச்சி: ரூ5 லட்சம் கோடிக்கு கீழ் சந்தை மதிப்பு சரிவு
2022-06-07@ 00:15:17

புதுடெல்லி: பொதுத்துறை நிறுவனமான எல்ஐசி.யின் பங்கு விற்பனை விலை கடுமையான வீழ்ச்சி அடைந்ததைத் தொடர்ந்து, அதன் சந்தை மதிப்பு ரூ5 லட்சம் கோடிக்கும் கீழ் சரிவடைந்துள்ளது. பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்கி, அதன் மூலம் வருவாய் ஈட்டுவதில் ஒன்றிய அரசு தீவிரம் காட்டி வருகிறது. இதன் ஒரு பகுதியாக, எல்ஐசி நிறுவன பங்குகளை விற்க முடிவு செய்யப்பட்டு, முதல் கட்டமாக சுமார் ரூ21,000 கோடி திரட்ட 3.5 சதவீத பங்குகளுக்கான ஐபிஓ-க்கள் வெளியிடப்பட்டன. ஒரு பங்கின் விலை ரூ902 முதல் ரூ949 வரை நிர்ணயிக்கப்பட்டது. கடந்த மாதம் 4ம் தேதி பங்கு விற்பனை தொடங்கியது பொது பங்கு விற்பனை 9ம் தேதி முடிந்தது. இந்திய பங்குச்சந்தையில் எல்ஐசி நிறுவனத்தின் பங்குகள் கடந்த மாதம் 17ம் தேதி பட்டியலிடப்பட்டது. பட்டியலிடப்பட்ட தினமே எல்ஐசி பங்குகள் கடும் சரிவை சந்தித்தன. இதனால் மிகுந்த எதிர்பார்ப்புடன் முதலீடு செய்திருந்த முதலீட்டாளர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்தனர். இந்நிலையில், தொடர் சரிவை சந்தித்து வந்த எல்ஐசி பங்குகளின் விலை நேற்று ஒரே நாளில் எல்ஐசி பங்கின் விலை ரூ23 வரை குறைந்து ரூ775க்கு விற்பனையானது. ஒரு பங்கின் விலை ரூ949க்கு ஒதுக்கப்பட்ட நிலையில், அதன் தற்போதைய விலை ரூ174 வரை சரிந்துள்ளது. இதனால், ரூ6 லட்சம் கோடியாக இருந்த எல்ஐசியின் சந்தை மதிப்பு தற்போது ரூ4.94 லட்சம் கோடியாக வீழ்ச்சி அடைந்துள்ளது.
மேலும் செய்திகள்
நகை வாங்குபவர்களுக்கு நற்செய்தி... இறங்குமுகத்தில் தங்கம், வெள்ளி விலை!: சவரனுக்கு ரூ.96 குறைந்து ரூ.42,704க்கு விற்பனை..!!
அதானி குழுமம் நிறுவனங்களில் எல்.ஐ.சி. நிறுவனம் செய்துள்ள முதலீடுகளால் நஷ்டம் இல்லை: எல்.ஐ.சி. நிறுவனம் விளக்கம்
தங்கத்தின் விலை மேலும் அதிகரிப்பு ஒரு சவரன் ரூ.42,800க்கு விற்பனை: பொதுமக்கள் கலக்கம்
சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.40 உயர்ந்து ரூ.42,800க்கு விற்பனை
அதிரடியாக உயர்ந்து வந்த நிலையில் தங்கம் விலை திடீர் சரிவு: சவரனுக்கு ரூ.280 குறைந்தது
நிதி முறைகேடு, போலி பரிவர்த்தனை அறிக்கை எதிரொலி; 2வது நாளாக அதானி குழும பங்குகள் வீழ்ச்சி: ஹிண்டன்பர்க் மீது சட்ட நடவடிக்கை எடுக்க முடிவு
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!
சீனாவில் வசந்த காலத் திருவிழா கோலாகலக் கொண்டாட்டம்: கலாச்சார நிகழ்வுகள், விளையாட்டுப் போட்டிகள் என உற்சாகம்..!
ஆரஞ்சு மரத்தை அதிர்ஷ்டமாக கருதும் ஹாங்காங் மக்கள்: வேண்டுதல்களை தாள்களில் எழுதி மரத்தில் தொங்கவிட்டு பிரார்த்தனை..!!