ரயிலில் கூடுதல் லக்கேஜ் எடுத்து சென்றால் 6 மடங்கு அபராதம்; ரயில்வே நிர்வாகம் அதிரடி அறிவிப்பு
2022-06-03@ 18:32:53

புதுடெல்லி: ரயில் பயணிகள் ரயிலில் கூடுதல் லக்கேஜ் எடுத்து சென்றால், 6 மடங்கு அபராதம் விதிக்கப்படும் என்று ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. இந்திய ரயில்வே விதிகளின்படி, ரயில்களில் பயணிக்கும் பயணிகள் தாங்கள் பயணிக்கும் ரயில் பெட்டியில் 40 கிலோ முதல் 70 கிலோ வரை எடையுள்ள லக்கேஜ்களை எடுத்துச் செல்லலாம். கூடுதல் பொருட்களை எடுத்து சென்றால் சம்பந்தப்பட்ட பயணிகள் கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டும். ஏற்கனவே இருந்த அபாராத தொகையை காட்டிலும் ஆறு மடங்கு அதிகமாக செலுத்த வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ரயில்வே நிர்வாகம் வெளியிட்ட அறிவிப்பில், ‘ரயிலில் பயணம் செய்யும் போது அதிக லக்கேஜ்களை பயணிகள் எடுத்துச் செல்ல வேண்டாம். அதிகப்படியான லக்கேஜ்களை எடுத்து சென்றால், அதற்கான முன்பதிவு கட்டணத்தை செலுத்த வேண்டும். குறைந்தபட்ச கட்டணமாக ரூ.30 செலுத்த வேண்டும்.
ரயில் புறப்படும் நேரத்திற்கு குறைந்தது 30 நிமிடங்களுக்கு முன், பயணிகள் தங்களது பொருட்கள் குறித்த விபரங்களை முன்பதிவு நிலையத்தின் லக்கேஜ் அலுவலகத்தில் தெரிவிக்க வேண்டும். டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யும் போது முன்கூட்டியே லக்கேஜ் விபரங்களை முன்பதிவு செய்யலாம். குறைந்த பட்ச அத்தியாவசிய பொருட்களை கொண்டு பயணிக்குமாறு பயணிகளை கேட்டுக் கொள்கிறோம்’ என்று கூறப்பட்டுள்ளது.
மேலும் செய்திகள்
திருப்பதியில் 8 மணிநேரத்தில் ஏழுமலையான் தரிசனம்
இலியானாவுக்கு என்ன நோய்?..மருத்துவமனையில் திடீர் அட்மிட்
ராஜமவுலி, தனுஷ் வெளியிட்ட தசரா டீசர்
ஒரு வருடத்துக்கு பிறகு மகளின் முகத்தை காட்டினார் பிரியங்கா
தொடர் தோல்விகளால் ஓட்டல் தொழிலுக்கு மாற இருந்தேன்; ஷாருக்கான் பளிச்
ஆன்லைன் பரிசோதனையின் போது பெண் டாக்டர் முன் நிர்வாண போஸ்: வாலிபர் கைது
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!
சீனாவில் வசந்த காலத் திருவிழா கோலாகலக் கொண்டாட்டம்: கலாச்சார நிகழ்வுகள், விளையாட்டுப் போட்டிகள் என உற்சாகம்..!
ஆரஞ்சு மரத்தை அதிர்ஷ்டமாக கருதும் ஹாங்காங் மக்கள்: வேண்டுதல்களை தாள்களில் எழுதி மரத்தில் தொங்கவிட்டு பிரார்த்தனை..!!