அனுப்பிய மெசேஜ்களை எடிட் செய்யும் வசதி: வாட்ஸ்அப் செயலில் விரைவில் அறிமுகம்..!
2022-06-01@ 15:32:47

வாஷிங்டன்: அனுப்பிய மெசேஜ்யை எடிட் செய்யும் வசதியை வாட்ஸ் அப் விரைவில் கொண்டுவர உள்ளது. இந்திய அளவில் மட்டுமில்லாமல் உலக அளவிலும் பல கோடி மக்கள் தினசரி பயன்படுத்தும் ஒரு செயலியாக தற்போது வாட்ஸ்அப் மாறி உள்ளது. வாட்ஸ் அப்பை பேஸ்புக் நிறுவனம் விலைக்கு வாங்கிய பின்னர் வாட்ஸ்அப்பில் பல்வேறு அப்டேட்களை வாட்ஸ்அப் நிறுவனம் வழங்கி வருகிறது. மேலும் வாட்ஸ்அப்பில் பாதுகாப்பு வசதியை அதிகரிக்கும் நோக்கிலும் பயனாளிகளை கவரும் விதத்திலும் புதிய அப்டேட்கள் வெளியாகி வருகின்றன. இந்நிலையில் எதிர்கால அப்டேட்களை கருத்தில் கொண்டு தற்போது வாட்ஸ் அப்பில் ஒரு புதிய மாற்றத்தை கொண்டு வர முடிவு செய்யப்பட்டுள்ளது.
அதன்படி அனுப்பிய மெசேஜ்களை எடிட் செய்யும் வசதி வாட்ஸ்அப்பில் விரைவில் அறிமுகமுள்ளாதாக தகவல் வெளியாகி உள்ளது. பயனர்கள் தங்கள் மெசேஜ்களில் உள்ள தட்டச்சுப் பிழைகளை நீக்க இனி அந்த மெசேஜை முழுமையாக டெலிட் செய்ய வேண்டிய அவசியம் இருக்காது. தவறான மெசேஜ்களை கிளிக் செய்து அதை திருத்த இந்த புதிய வசதி உதவும். வாட்ஸ்அப்பின் இந்த புதிய வசதி சோதனை முயற்சியாக தற்போது பீட்டா வெர்ஷனில் வழங்கப்பட்டு வருகிறது. இதற்கான சோதனை நடப்பதாகவும், ஆன்ட்ராய்ட், ஐஓஎஸ், மற்றும் டெஸ்க்டாப் என அனைத்திலும் இவ்வசதி கிடைக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் செய்திகள்
மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் தயாரிக்கப்பட்ட சக்தி வாய்ந்த டவர் ஸ்பீக்கரை அறிமுகம் செய்கிறது Zebronics
கான்டக்ட் லிஸ்டில் இல்லாத நபருக்கும் மெசேஜ் அனுப்பும் புதிய வசதி : வாட்ஸ் அப் செயலியில் கூடுதல் அப்டேட்டுகள் என்னென்ன ?
Google Chrome new logo : 8 ஆண்டுகளுக்கு பின் லோகோவை மாற்றிய கூகுள் குரோம்
துபாயில் ஹைட்ரஜன் எரிபொருள் மூலமாக இயங்கும் ‘பறக்கும் படகு’ விரைவில் அறிமுகம்
பிளாக்பெர்ரி மொபைலுக்கு குட் பை! ... கிளாசிக் சாதனங்களுக்கு அளித்து வந்த ஆதரவையும் நிறுத்துவதாக அறிவிப்பு!!
14 அப்பாவி மக்கள் சுட்டுக்கொலை: துணை ராணுவ வீரர்களிடம் விசாரணை நடத்த அனுமதி
தொடர் கனமழை : சிட்னி நகரத்தை சூழ்ந்த வெள்ளம்.. 50 ஆயிரம் மக்கள் வீடுகளை விட்டு வெளியேற அறிவுறுத்தல்..
மெக்சிகோவில் விநோதம்.! பெண் முதலையை முத்தம் கொடுத்து மணந்த மேயர்!!
தோண்ட தோண்ட சடலங்கள்.. மணிப்பூரில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 42 ஆக உயர்வு!!
அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் லாரி ஒன்றில் 53 அகதிகள் சடலமாக மீட்பு... 16 பேர் கவலைக்கிடம்!!
கலிபோர்னியாவில் மீண்டும் பற்றி எரியும் காட்டுத் தீ..135 ஏக்கர் வனப்பகுதி தீக்கிரை..!!