சாலை, கட்டிடம், பஸ் நிலையங்கள் பெயரிடல் மற்றும் மாற்றம் செய்ய அரசு அனுமதி பெற்றே மன்றங்களில் தீர்மானங்கள் நிறைவேற்ற வேண்டும்: நகராட்சி நிர்வாக துறை செயலாளர் சிவ் தாஸ் மீனா உத்தரவு
2022-05-31@ 00:10:03

சென்னை: அனைத்து நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு உட்பட்ட சாலைகள், கட்டிடங்கள், பேருந்து நிலையங்கள் பெயரிடல் மற்றும் பெயர் மாற்றம் செய்வதற்கான முன்மொழிவுகள் அரசிற்கு அனுப்பப்பட்டு, அரசின் அனுமதி பெற்ற பின்னரே மன்றங்களில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட வேண்டும் என்று நகராட்சி துறை செயலாளர் சிவ் தாஸ் மீனா அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை வருமாறு: நாகர்கோவில் மாநகராட்சியில் பாலமோர் பகுதியில் உள்ள பழமையான கட்டிடம் இடிக்கப்பட்டு தற்போது நாகர்கோவில் மாநகராட்சி அலுவலகத்திற்கான கட்டிடம் புதிதாக கட்டப்பட்டு வருகிறது. இக்கட்டிடத்திற்கு பெயரிடுவதில் சில பிரச்னைகள் எழுந்துள்ளன. இக்கட்டிடம் ஏற்கனவே இருந்தவாறே, கலைவாணர் பெயரிலேயே அழைக்கப்படும் என்பதை உறுதியாக தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழ்நாடு மாவட்ட நகராட்சிகளின் சட்டம் 1920-ன் பிரிவு 189 மற்றும் கோயம்புத்தூர் மாநகராட்சி சட்டம் 1981-ன் பிரிவு 266 முதலானவற்றில், அரசின் அனுமதி பெற்ற பின்னரே, மன்றங்கள் மற்றும் மாமன்றங்கள் அனைத்து நகராட்சி சொத்துகளுக்கு பெயரிட வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், மேற்குறிப்பிட்ட சட்டவிதிகளை பின்பற்றாமல், அரசின் ஒப்புதலின்றி நகராட்சி சொத்துகளுக்கு பெயர் வைப்பதற்கான முன்மொழிவுகளை மன்றத்தில் வைத்து தீர்மானங்கள் இயற்றப்படுவதாக அரசின் கவனத்திற்கு தெரியவந்துள்ளது.
எனவே முதல்வர் அறிவுறுத்தலின்படி மேற்குறிப்பிட்ட சட்டப்பிரிவுகளுக்குட்பட்டு, மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சிகளுக்கு சொந்தமான சாலைகள், தெருக்கள், பேருந்து நிலையங்கள், கட்டிடங்கள், பூங்கா, விளையாட்டு இடங்கள் முதலியவற்றிற்கு பெயர் வைப்பது அல்லது பெயர் மாற்றுவது தொடர்பான முன்மொழிவுகள் நகராட்சி நிர்வாக இயக்குனர், பேரூராட்சிகளின் ஆணையர் வழியாக அரசிற்கு அனுப்பப்பட வேண்டும். அரசின் அனுமதி பெற்ற பின்னரே பெயரிடுவது மற்றும் பெயர் மாற்றம் குறித்த தீர்மானங்கள் சம்பந்தப்பட்ட மாமன்றங்களின் ஒப்புதலுக்கு வைக்கப்படுதல் வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
Tags:
Road Building Bus Stands Naming Government Permission Execution of Resolutions in Forums Municipal Administration Secretary Shiv Das Meena சாலை கட்டிடம் பஸ் நிலையங்கள் பெயரிடல் அரசு அனுமதி மன்றங்களில் தீர்மானங்கள் நிறைவேற்ற நகராட்சி நிர்வாக துறை செயலாளர் சிவ் தாஸ் மீனாமேலும் செய்திகள்
வடபழனி, திருவான்மியூர், வியாசர்பாடி ஆகிய 3 பணிமனைகளை மேம்படுத்த ரூ.1,600 கோடி நிதி ஒதுக்கீடு: 1000 புதிய பேருந்துகள் வாங்கப்படும்
சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ் ரூ.32.62 கோடி மதிப்பீட்டில் விக்டோரியா மஹால் புனரமைப்பு பணி: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
சென்னையில் உள்ள 74 ரயில் நிலையங்களில் 96 தானியங்கி டிக்கெட் வழங்கும் இயந்திரம்: ரயில்ேவ கோட்டம் தகவல்
3வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியை முன்னிட்டு நாளை போக்குவரத்து மாற்றம்: போலீசார் அறிவிப்பு
அடுத்த இரண்டு ஆண்டுகளில் நீர்நிலைகள், குளங்கள், ஊரணிகள் ரூ.800 கோடியில் புதுப்பிக்கப்படும்
14500 மெகாவாட் திறன்கொண்ட 15 புதிய நீரேற்று மின் திட்டங்கள் 2030க்குள் செயல்படுத்தப்படும்: ரூ.77,000 கோடி நிதி ஒதுக்கீடு
மலாவி, மொசாம்பிக், மடகாஸ்கர் ஆகிய நாடுகளில் ஃப்ரெடி புயலால் 500க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு.!!
அயர்லாந்தில் புனித பாட்ரிக் தினத்தை ஆடல், பாடலுடன் கொண்டாடிய மக்களின் புகைப்படங்கள்..!!
பிரான்ஸில் ஓய்வூதிய சீர்திருத்தத் திட்டத்திற்கான போராட்டத்தில் வன்முறை: சாலைகளில் வாகனங்களை தீயிட்டு கொளுத்தியதால் பதற்றம்..!!
புதிய உலக சாதனை: சிட்னியில் 40 மணி நேரத்திற்கு மேல் அலைச்சறுக்கு செய்து வீரர் அசத்தல்
சென்னை பத்மாவதி தாயார் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலம்.. .சாரல் மழையில் கண் குளிர தரிசனம்..!!