வியாசர்பாடியில் கஞ்சா விற்ற ரவுடி சிறையிலடைப்பு
2022-05-30@ 14:28:31

பெரம்பூர்: வியாசர்பாடியில் கஞ்சா விற்பனை செய்த ரவுடி கைது செய்யப்பட்டார். சென்னை எம்கேபி நகர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் இரவு நேரங்களில் ஒரு மர்ம நபர், கஞ்சா விற்பதாக எம்கேபி நகர் இன்ஸ்பெக்டர் அம்பேத்கருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் நேற்றிரவு வியாசர்பாடி சர்மா நகர் தொழிற்பட்டை அருகே எம்கேபி நகர் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்திற்கிடமாக சுற்றி திரிந்த ஒருவரை பிடித்து சோதனை செய்தனர்.
அவரிடம் 400 கிராம் கஞ்சா இருந்தது. அவரை காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரணை செய்ததில், வியாசர்பாடி பி.வி.காலனி 29வது தெருவை சேர்ந்த தினகரன் (எ) தீனா என்பதும் இரவு நேரங்களில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது. இவர் மீது வியாசர்பாடி, எம்கேபி நகர் உள்ளிட்ட காவல் நிலையங்களில் பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. போலீசார் வழக்கு பதிந்து தினகரனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையிலடைத்தனர்.
மேலும் செய்திகள்
ஆட்டோவில் கஞ்சா கடத்திய பெண்ணுக்கு 5 ஆண்டு கடுங்காவல்
புளியந்தோப்பில் போதைப்பொருள் கடத்தல் 3 பேருக்கு தலா 10 ஆண்டு சிறை: சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு
சினிமா பைனான்சியரிடம் ரூ. 35 லட்சம் மோசடி உதயம் தியேட்டர் முன்னாள் உரிமையாளர் கைது
கொள்ளை போனதாக பொய் புகார் 3 கிலோ தங்க நகையுடன் ஊழியர்கள் பிடிபட்டனர்
ஐஸ்வர்யா வீட்டை தொடர்ந்து ரஜினி வீட்டிலும் கைவரிசை புகார் அளித்ததோ 60 சவரன்; பறிமுதலோ ரூ. 3 கோடி நகைகள்: வேலைக்கார பெண், கார் டிரைவரிடம் விடிய விடிய விசாரணை
போலி பெண் டாக்டர் கைது
ஈக்வடார் நாட்டில் பயங்கர நிலச்சரிவு : 16 பேர் பலி
அடடா.. என்ன ஒரு அழகு!: ஆண்களெல்லாம் அழகு தேவதையாக மாறும் கேரள திருவிழா..!!
இஸ்ரேலில் நீதித்துறையின் அதிகாரத்தை குறைக்க புதிய சட்டம்: பிரதமர் நெதன்யாகுவுக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டம்..!!
அதிமுக பொதுச்செயலாளரானார் எடப்பாடி பழனிசாமி: இனிப்பு வழங்கி பட்டாசு வெடித்து தொண்டர்கள் கொண்டாட்டம்!!
ஜெர்மனியில் போக்குவரத்து ஊழியர்கள் மிகப்பெரிய வேலை நிறுத்தப் போராட்டம் : வெறிச்சோடிய நகரங்கள்!!