ஏற்காட்டில் களைகட்டிய மலர் கண்காட்சி!: 25,000-க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் ஆர்வமுடன் கண்டு ரசிப்பு..!!
2022-05-28@ 09:46:30

சேலம்: ஏற்காட்டில் நடைபெறும் மலர் கண்காட்சியை இதுவரை 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் கண்டு களித்துள்ளனர். கொரோனா தொற்று காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக நடத்தப்படாமல் இருந்த ஏற்காடு கோடைவிழா இன்று மே 25 தொடங்கி ஜூன் 1ஆம் தேதி வரை நடத்தப்படுகிறது. மலர் கண்காட்சி அமைக்கப்பட்டுள்ள அண்ணா பூங்கா மட்டுமல்லாமல் ஏரி பூங்கா, படகு இல்லம், சேர்வராயன் கோயில் உள்ளிட்ட இடங்கள் இரவு நேரங்களில் வண்ண மின் விளக்குகளால் ஜொலிக்கிறது.
உற்சாகமாக நடைபெற்று வரும் கோடை விழாவை காண சேலம் மாவட்டம் மட்டுமல்லாது தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து தினந்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். கோடை விழாவின் சிறப்பு அம்சமாக ஏற்காடு கலையரங்கில் நாள்தோறும் கலைநிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. சின்னத்திரை நட்சத்திரங்கள் பங்கேற்கும் இசை கச்சேரி மற்றும் ரோபோ நடனங்களை காண சுற்றுலா பயணிகள் ஆர்வம் காட்டி வருகின்றன. 5 லட்சம் மலர்களை கொண்டு மலர் கண்காட்சி, காய்கறி கண்காட்சி, மாம்பழக் கண்காட்சி ஆகியவையும் சுற்றுலா பயணிகள் ஆர்வமுடன் கண்டு ரசித்து வருகின்றனர்.
மேலும் செய்திகள்
பணி நியமனங்களில் முறைகேடு: சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் அரசு குழு விசாரணை தொடங்கியது.! முதற்கட்டமாக ஆவணங்கள் ஆய்வு
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் பாஜக ஆதரவு அளிக்கும் கட்சிக்கு ஐஜேகே ஆதரவு: பாரிவேந்தர் பேட்டி
அம்மன் கோயிலில் பொங்கல் வைக்க ஒரு பிரிவினருக்கு அனுமதி மறுப்பு: தண்டராம்பட்டு அருகே போலீஸ் குவிப்பு
ஒன்றிய பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியாகுமா? என எதிர்பார்ப்பு: ஓசூர் - சென்னை இடையே ரயில் இயக்க மக்கள் கோரிக்கை
மதுரையில் உள்ள திருமங்கலத்தில் 16ம் நூற்றாண்டை சேர்ந்த நடுகற்கள் கண்டுபிடிப்பு..!!
50 ஆண்டுகள் வாழும் அறிய வகை பறவை இனமான மலை இருவாச்சி அந்தியூர் அருகே உள்ள நீர்நிலைகளில் காணப்பட்டதாக தகவல்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!
சீனாவில் வசந்த காலத் திருவிழா கோலாகலக் கொண்டாட்டம்: கலாச்சார நிகழ்வுகள், விளையாட்டுப் போட்டிகள் என உற்சாகம்..!
ஆரஞ்சு மரத்தை அதிர்ஷ்டமாக கருதும் ஹாங்காங் மக்கள்: வேண்டுதல்களை தாள்களில் எழுதி மரத்தில் தொங்கவிட்டு பிரார்த்தனை..!!
மும்பையில் கோலாகலமாக நடைபெற்ற செல்லப் பிராணிகள் திருவிழா: லிம்கா சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ள Pet Fed நிகழ்ச்சி
பிரான்ஸ் அரசின் ஓய்வூதிய சீர்திருத்தக் கொள்கைக்கு எதிர்ப்பு: அதிபர் மேக்ரான் அரசுக்கு எதிராக நாடு தழுவிய போராட்டம்..!!