SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பாதுகாப்பான சென்னை என்ற கருத்தை வலியுறுத்தி பெண்களுக்கான இரவு நேர மிதிவண்டி ஓட்டும் நிகழ்ச்சி: 6 இடங்களில் இன்று நடக்கிறது

2022-05-28@ 00:42:08

சென்னை: சிங்கார சென்னை 2.0 வீதி விழாவின் ஒரு பகுதியாக, பாதுகாப்பான சென்னை என்ற கருத்தை வலியுறுத்தும் வகையில்  பெண்களுக்கான இரவு நேர மிதிவண்டி ஓட்டும் நிகழ்ச்சி    இன்று  இரவு 8 மணி முதல் 9 மணி வரை நடைபெற உள்ளது  என மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து சென்னை மாநகராட்சி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை:
பாலின வேறுபாடு இல்லாமல் பெண்கள் இயல்பாக பொதுஇடங்களை உபயோகப்படுத்துவதற்காகவும், பெண்களின் பாதுகாப்பு எல்லோருடைய பொறுப்பு என்பதை உணர்த்தும் வகையிலும்,  சிங்கார சென்னை 2.0  வீதி விழாவின் ஒரு பகுதியாக, பாதுகாப்பான சென்னை என்ற கருத்தை வலியுறுத்தி பெண்களுக்கான இரவு நேர மிதிவண்டி ஓட்டும் நிகழ்ச்சி  இன்று (28ம் தேதி)  இரவு 8 மணி முதல் 9 மணி வரை சென்னையில் 6 இடங்களில் நடைபெற உள்ளது.

இந்த நிகழ்ச்சியை   மேயர் பிரியா,   இந்திரா நகர் (எம்ஆர்டிஎஸ்) நுழைவாயில் அருகில் தொடங்கி வைத்து சைக்கிள் பேரணியில் கலந்து கொள்கிறார். இந்த சைக்கிள் பேரணி  இரவு 8 மணிக்கு இந்திரா நகர் (எம்ஆர்டிஎஸ்) நுழைவாயில் அருகில் புதிய மிதிவண்டி தடம் இடம், நேரு பூங்கா மெட்ரோ ரயில் நிலையம், எல்ஐசி மெட்ரோ ரயில் நிலையம், அரும்பாக்கம் மெட்ரோ ரயில் நிலையம், மெரினா கடற்கரை கலங்கரை விளக்கம், திருவல்லிக்கேணி (மெரினா) நீச்சல் குளம் ஆகிய 6 இடங்களில் தொடங்கி,  தியாகராய நகர் பாண்டி பஜாரில்  இரவு 9 மணிக்கு நிறைவடைகிறது.

இந்நிகழ்வில் பங்கேற்க விரும்புவோர் https://forms.gle/Y3GBdvtWJgpuRhKCA என்ற இணைப்பை பயன்படுத்தி பதிவு செய்து சைக்கிள் பேரணியில் கலந்து கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • tailllo111

    நுபுர் சர்மாவை ஆதரித்த டெய்லர் தலை துண்டித்து கொடூர கொலை ராஜஸ்தானில் வன்முறை, போராட்டம்!!

  • glass-park-29

    ஆச்சர்யமூட்டும் கலைநயம்!: அமெரிக்கா சியாட்டெலில் அமைந்துள்ள கண்ணாடி பூங்காவின் வியக்க வைக்கும் புகைப்படங்கள்..!!

  • america_tra11

    அமெரிக்காவில் ரயில் தடம் புரண்டு 3 பேர் பரிதாப சாவு; 50 பேர் காயம்

  • asaam_rain

    அசாம் வெள்ளப்பெருக்கு: 135 பேர் உயிரிழந்த நிலையில் மீட்புப்பணிகள் தீவிரம்

  • tour-28

    ஊர் சுற்றலாம் வாங்க!: உள்ளம் கொள்ளை கொள்ளும் அழகான இந்திய சுற்றுலா இடங்களின் புகைப்பட தொகுப்பு..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்