சமூகப் பரவல் நோயாக குரங்கம்மை மாறக்கூடும்: உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை
2022-05-28@ 00:16:54

ஜெனிவா: ‘குரங்கம்மை நோய்’ சமூக பரவலாக மாறும் அபாயம் உள்ளதாக உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது. கடந்த 2 ஆண்டுகளாக உலக மக்களை கொரோனா ஆட்டிப் படைத்தது. இந்நிலையில், ஆப்ரிக்க நாடுகளில் பரவிய குரங்கம்மை நோய், தற்போது மெதுவாக பல்வேறு நாடுகளுக்கு பரவி வருகிறது. தற்போதைய நிலவரப்படி, 20 நாடுகளில் 200 பேருக்கு இது தாக்கி இருக்கிறது.
இந்நோய் பரவல் குறித்து உலக சுகாதார அமைப்பின், ‘உலக தொற்று அபாய தயார்நிலை’ குழுவின் இயக்குனர் சில்வி பிரையன்ட் நேற்று கூறுகையில், ‘‘மக்கள் கவலைப்படும் அளவுக்கு குரங்கம்மை வேகமாக பரவும் நோயல்ல. ஆனால், மெதுவாக இது சமூக பரவலாக மாறக் கூடிய அபாயம் உள்ளது. இதை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்கு விரைவான நடவடிக்கை தேவை. தடுப்பூசியும், முறையான சிகிச்சையும் இதற்கு ஒரே தீர்வு.
சில நாடுகளிடம் மட்டுமே இந்த நோய்க்கான முதல் தலைமுறை தடுப்பூசிகள் கையிருப்பு இருக்கின்றன. உலகளவில் எவ்வளவு தடுப்பூசி கையிருப்பு இருக்கிறது என்ற புள்ளி விவரம் இல்லை. பாதிக்கப்பட்டவர்களை கண்டுபிடித்து, தனிமைப்படுத்துவதே, இதன் பரவலை தடுப்பதற்கான முதல் கட்ட நடவடிக்கையாகும்,’’ என்றார்.
மேலும் செய்திகள்
கொலம்பியா நாட்டில் உள்ள சிறையில் ஏற்பட்ட தீ விபத்தில் 50 கைதிகள் உடல் கருகி உயிரிழப்பு..பலருக்கு பலத்த தீக்காயம்!!
லாரியில் அடைக்கப்பட்ட 51 அகதிகள் மூச்சுத் திணறி பலியான சம்பவம்... இதயத்தையே நொறுக்கிவிட்டதாக அமெரிக்க அதிபர் ஜோபிடன் வேதனை!!
அமெரிக்க டாலரை ஓரம் கட்ட அதிரடி; சிறு நாடுகளை வளைக்க சீனா அடுத்த சதி திட்டம்; யுவானில் கடன் வழங்க புதிய நிதியம்
பொது விவாதம், தகவல் பரவல் உட்பட கருத்து சுதந்திரத்துக்கு பாதுகாப்பு; ஜி7 மாநாட்டில் மோடி உறுதி
ரணிலின் நீண்ட போராட்டத்துக்கு வெற்றி.! அதிபரின் அதிகாரங்களை குறைக்கும் சட்டத்துக்கு அமைச்சரவை ஒப்புதல்: இலங்கை நாடாளுமன்றத்தில் விரைவில் தாக்கல்
மீண்டும் அதிரடி தாக்குதல் உக்ரைன் வணிக வளாகத்தில் ரஷ்ய படைகள் ஏவுகணை தாக்குதல்; 16 பேர் பலி; 59 பேர் காயம்
அமெரிக்காவில் ரயில் தடம் புரண்டு 3 பேர் பரிதாப சாவு; 50 பேர் காயம்
அசாம் வெள்ளப்பெருக்கு: 135 பேர் உயிரிழந்த நிலையில் மீட்புப்பணிகள் தீவிரம்
ஊர் சுற்றலாம் வாங்க!: உள்ளம் கொள்ளை கொள்ளும் அழகான இந்திய சுற்றுலா இடங்களின் புகைப்பட தொகுப்பு..!!
உக்ரைனில் 1,000 பேர் இருந்த மாலில் ரஷ்யா ஏவுகணை தாக்குதல்: 16 பேர் பலி... 59 பேர் படுகாயம்;
மெக்சிகோவில் நூற்றுக்கணக்கான ஒரே பாலின ஜோடிகளுக்கு ஒன்றாக திருமணம்..!!