அரசு நிர்வாகத்தில் கடந்த ஆட்சியாளர்கள் தொழில்நுட்பத்தை புகுத்தாததால் ஏழை, நடுத்தர மக்களுக்கு பாதிப்பு: டிரோன் திருவிழாவில் பிரதமர் குற்றச்சாட்டு
2022-05-28@ 00:02:00

புதுடெல்லி: ‘அரசு நிர்வாகத்தில் தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதில் முந்தைய ஆட்சியாளர்கள் அலட்சியமாக இருந்ததால் ஏழைகள், நடுத்தர மக்கள் பாதிக்கப்பட்டனர்’ என பிரதமர் மோடி குற்றம்சாட்டினார்.டெல்லியில், ‘பாரத் டிரோன் மகோத்சவ்’ என்ற பெயரில் நாட்டின் மிகப்பெரிய டிரோன் திருவிழா நேற்று தொடங்கி 2 நாட்கள் நடக்கிறது. இந்த திருவிழாவை தொடங்கி வைத்து பிரதமர் மோடி பேசியதாவது:முந்தைய அரசாங்கங்கள், தொழில்நுட்பத்தை பிரச்னையின் ஒரு பகுதியாக பார்த்தன. இதை ஏழைகளுக்கு எதிரானவை என முத்திரை குத்த முயற்சிகள் செய்தன. இதன் காரணமாக, 2014ம் ஆண்டுக்கு முன்பாக அரசு நிர்வாகத்தில் தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதில் அலட்சிய போக்கு இருந்தது.
ஆனால், கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு நாங்கள் நல்லாட்சிக்காக ‘குறைந்தபட்ச அரசு, அதிகபட்ச நிர்வாகம்’, ‘எளிதாக வாழ்தல்’, ‘எளிதாக தொழில் தொடங்குதல்’ போன்ற திட்டங்களுக்கு முன்னுரிமை அளித்தோம். அரசு நிர்வாகத்தில் தொழில்நுட்பத்தை பெருமளவு பயன்படுத்திக் கொண்டதன் மூலம், இவை நாட்டின் தொலைதூரத்தில் விளிம்பு நிலையில் இருக்கும் மக்களுக்கும் அரசு திட்டங்கள் சென்றடைவதை உறுதி செய்துள்ளன. இதற்கு பிரதம மந்திரி சுவாமித்வா யோஜனா திட்டம் ஓர் சிறந்த எடுத்துக்காட்டாகும். இத்திட்டத்தின் கீழ் முதல் முறையாக கிராமங்களில் உள்ள ஒவ்வொரு சொத்தும் டிஜிட்டல் முறையில் வரைபடமாக்கப்பட்டு, டிஜிட்டல் சொத்து அட்டைகள் மக்களுக்கு வழங்கப்படுகின்றன. இந்தியாவில் டிரோன் தொழில்நுட்பத்தின் வளர்ச்சி உற்சாகத்தையும் ஆச்சரியத்தையும் அளிக்கிறது. இதன் மூலம் நாட்டின் வேலைவாய்ப்புகளும் அதிகரிக்கும். மேலும் விவசாயம், விளையாட்டு, பாதுகாப்பு மற்றும் பேரிடர் மேலாண்மை போன்ற துறைகளிலும் டிரோன்களின் பயன்பாடு அதிகரிக்கும்.இவ்வாறு அவர் பேசினார்.
நினைவில் நிற்கும் பயணம்
சென்னையில் நேற்று முன்தினம் பல்வேறு திட்டங்களை தொடங்கி வைக்கும் திட்டத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் பங்கேற்ற பிரதமர் மோடி, டெல்லி திரும்பிய பிறகு தனது பயணம் பற்றிய டிவிட்டர் பதிவை வெளியிட்டுள்ளார். அதில், ‘நன்றி தமிழ்நாடு. எனது நேற்றைய தமிழ்நாடு பயணம் என்றும் நினைவில் நிற்கக் கூடியது,’ என்று கூறியுள்ளார்.
மேலும் செய்திகள்
ஜிஎஸ்டி இழப்பீட்டுத் தொகை நிறுத்தம்?.. முடிவெடுக்காமல் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நிறைவடைந்ததால் பல்வேறு மாநிலங்கள் அதிர்ச்சி..!
ஆட்டோ மீது உயர் மின்னழுத்த கம்பி அறுந்து விழுந்து ஆட்டோ முழுவதும் மின்சாரம் பாய்ந்து தீப்பற்றியதில் 8 பேர் உடல் கருகி பலி
இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் கொரோனா ... சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 1 லட்சத்தை தாண்டியது; அதிர்ச்சி தரும் ரிப்போர்ட்!! ..
'ஆதார் - பான்' எண்ணை இணைக்காவிடில் நாளை முதல் இரு மடங்கு அபராதம் : வருமான வரித்துறை எச்சரிக்கை!!
மகாராஷ்டிராவில் மலரும் தாமரை.. பாஜகவின் தேவேந்திர பட்னாவிஸ் மீண்டும் முதல்வராக நாளை பதவியேற்பு!!
அதிமுக பொதுக்குழு விவகாரம் ஐகோர்ட் உத்தரவுக்கு எதிராக நத்தம் விஸ்வநாதன் மேல்முறையீடு: உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல்
நுபுர் சர்மாவை ஆதரித்த டெய்லர் தலை துண்டித்து கொடூர கொலை ராஜஸ்தானில் வன்முறை, போராட்டம்!!
ஆச்சர்யமூட்டும் கலைநயம்!: அமெரிக்கா சியாட்டெலில் அமைந்துள்ள கண்ணாடி பூங்காவின் வியக்க வைக்கும் புகைப்படங்கள்..!!
அமெரிக்காவில் ரயில் தடம் புரண்டு 3 பேர் பரிதாப சாவு; 50 பேர் காயம்
அசாம் வெள்ளப்பெருக்கு: 135 பேர் உயிரிழந்த நிலையில் மீட்புப்பணிகள் தீவிரம்
ஊர் சுற்றலாம் வாங்க!: உள்ளம் கொள்ளை கொள்ளும் அழகான இந்திய சுற்றுலா இடங்களின் புகைப்பட தொகுப்பு..!!