வடகொரியா மீதான தீர்மானம் தோல்வி வீட்டோ அதிகாரத்தில் வீழ்த்திய சீனா, ரஷ்யா: அமெரிக்கா ஏமாற்றம்
2022-05-28@ 00:01:45

ஐநா: வட கொரியா மீது கூடுதல் தடைகளை விதிக்கும் வகையில் ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானத்தை ரஷ்யாவும், சீனாவும் தனது வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி தோற்கடித்தன.ஐநா போன்ற சர்வதேச அமைப்புகள், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் கடும் எதிர்ப்பையும் மீறி, வடகொரியா தொடர்ந்து அணு ஆயுதங்களை தாங்கிச் செல்லும் ஏவுகணைகளை சோதனை செய்து வருகிறது. அமெரிக்கா, தென் கொரியா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளை அச்சுறுத்தும் வகையிலேயே இந்த ஏவுகணை சோதனைகளில் அது ஈடுபட்டு வருகிறது. இந்த ஆண்டு தொடக்கம் முதல் இதுநாள் வரை வட கொரியா 23 முறை ஏவுகணை பரிசோதனைகளை செய்து உள்ளது. சில நாட்களுக்கு முன் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தென் கொரியாவுக்கு அரசு முறை சுற்றுப் பயணம் சென்றார். அவர் அந்த நாட்டில் இருந்து புறப்பட்ட சென்ற சில மணி நேரத்தில், வட கொரியா கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை உள்பட 3 ஏவுகணைகளை ஏவி அடுத்தடுத்து சோதனை நடத்தியது.
இது மேற்கத்திய நாடுகளுக்கு அச்சம் விளைவித்துள்ள நிலையில், வட கொரியாவின் மீதான கூடுதல் பொருளாதாரத் தடைகளை விதிக்க அமெரிக்கா முடிவு செய்தது. அதற்கான தீர்மானத்தை ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் அமெரிக்கா நேற்று கொண்டு வந்தது. 15 உறுப்பினர்களை கொண்ட பாதுகாப்பு கவுன்சிலில் 13-2 என்ற அடிப்படையில் தீர்மானம் தோல்வி அடைந்தது. மற்ற நாடுகள் ஆதரித்து வாக்களித்த நிலையில், ரஷ்யாவும், சீனாவும் தங்கள் வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி, அமெரிக்காவின் இந்த தீர்மானத்தை தோற்கடித்து வட கொரியாவை காப்பாற்றின. இதனால், அமெரிக்கா ஏமாற்றம் அடைந்தது.
மேலும் செய்திகள்
ஊருக்கு மட்டுமே உபதேசம் செய்யும் ஐரோப்பிய நாடுகள் மீண்டும் அழிவுப்பாதை: கைவிடப்பட்ட பருவநிலை கொள்கை; திறக்கப்படும் நிலக்கரி சுரங்கங்கள்
ரஷ்யாவிடம் இருந்து தங்கம் இறக்குமதி செய்ய ஜி-7 தடை
40க்கும் மேற்பட்ட நாடுகளில் பாதிப்பு குரங்கம்மை அவசர நிலை இப்போது தேவை இல்லை: உலக சுகாதார அமைப்புக்கு பரிந்துரை
உச்ச நீதிமன்ற தடையால் புது முடிவு கருக்கலைப்புக்கான செலவை ஏற்கும் அமெரிக்க நிறுவனங்கள்
கடும் நெருக்கடிக்கு இடையே பெட்ரோல், டீசல் விலை இலங்கையில் அதிகரிப்பு: ஒரு லிட்டர் ரூ.470, ரூ.460
ஜெர்மனியில் பிரதமர் மோடி பேச்சு ஒவ்வொரு இந்தியன் மரபணுவிலும் ஜனநாயகம்: ஜி-7 மாநாட்டில் பங்கேற்பு
இஸ்ரேலில் உள்ள பாலைவனத்தில் நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சியில் பழங்கால மசூதி கண்டுபிடிப்பு..!!
ஈக்வேடாரில் தொடர்ந்து உயரும் எரிபொருட்களின் விலையால் பொதுமக்கள் சாலையில் போராட்டம்..!!
புதுச்சேரியில் இன்று பள்ளிகள் திறப்பு: மாணவர்களை உற்சாகமாக வரவேற்ற ஆசிரியர்கள்..!!
50 ஆண்டுகளில் முதன்முறையாக தொடங்கிய சில நிமிடங்களிலேயே முடிந்தது அதிமுக பொதுக்குழு கூட்டம்..!!
பாகிஸ்தானில் 48 செ.மீ. நீளமுடைய காதைக் கொண்டு உலக சாதனை படைத்த சிம்பா ஆட்டுக்குட்டி..!!!