SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் மேலும் 55 பேர் பாதிப்பு; புதிய உயிரிழப்பு இல்லை; 41 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ்

2022-05-27@ 19:42:21

சென்னை: தமிழகத்தில் இன்று புதிதாக 55 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பு குறித்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது: தமிழகத்தில் இன்று புதிதாக 55 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை 34 லட்சத்து 55 ஆயிரத்து 154 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பால் இன்று யாரும் உயிரிழக்கவில்லை. இதனால் இதுவரை மொத்தம் 38 ஆயிரத்து 025 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்து உள்ளனர்.

தமிழகத்தில் இன்றைய நிலவரப்படி 401 பேர் பல்வேறு மருத்துவமனைகளில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா பாதிப்பில் இருந்து இன்று 41 பேர் ‘டிஸ்சார்ஜ்' செய்யப்பட்டு உள்ளனர். இதுவரையில் 34 லட்சத்து 16 ஆயிரத்து 728 பேர் குணம் அடைந்து உள்ளனர். அதிகபட்சமாக சென்னையில் 35 பேருக்கு தொற்று உறுதியாகியிருக்கிறது. செங்கல்பட்டில் 9 பேருக்கும், காஞ்சிபுரத்தில் 1 பேருக்கும், கோவையில் 3 பேருக்கும், திருவள்ளுரில் 3 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • israel-desert-24

    இஸ்ரேலில் உள்ள பாலைவனத்தில் நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சியில் பழங்கால மசூதி கண்டுபிடிப்பு..!!

  • Ecuador_protests

    ஈக்வேடாரில் தொடர்ந்து உயரும் எரிபொருட்களின் விலையால் பொதுமக்கள் சாலையில் போராட்டம்..!!

  • pondi-scl-23

    புதுச்சேரியில் இன்று பள்ளிகள் திறப்பு: மாணவர்களை உற்சாகமாக வரவேற்ற ஆசிரியர்கள்..!!

  • admk-23

    50 ஆண்டுகளில் முதன்முறையாக தொடங்கிய சில நிமிடங்களிலேயே முடிந்தது அதிமுக பொதுக்குழு கூட்டம்..!!

  • Goat_Pakistan

    பாகிஸ்தானில் 48 செ.மீ. நீளமுடைய காதைக் கொண்டு உலக சாதனை படைத்த சிம்பா ஆட்டுக்குட்டி..!!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்