ஆவடி ரயில்வே ஸ்டேஷன் அருகே சாலையோரம் வாகனங்கள் நிறுத்துவதை தடுக்க கோரிக்கை
2022-05-27@ 17:55:22

ஆவடி: ஆவடி ரயில் நிலையத்துக்கு செல்லும் ஸ்டேஷன் சாலையில் 6 தனியார் பார்க்கிங் மற்றும் ஒரு ரயில்வே பார்க்கிங் வசதி உள்ளது. இங்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பேர் இருசக்கர வாகனங்களை நிறுத்திவிட்டு, ரயில்கள் மூலம் பல்வேறு இடங்களில் வேலைக்கு சென்று வருகின்றனர். இதில் சிலர் பார்க்கிங் பகுதியில் இருசக்கர வாகனங்களை நிறுத்தாமல், ஸ்டேஷன் சாலையோர பகுதிகளில் வரிசையாக நிறுத்திவிட்டு செல்கின்றனர்.
இதனால் ஸ்டேஷன் சாலையில் எந்நேரமும் போக்குவரத்து நெரிசலில் சிக்கி மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். அங்கு போக்குவரத்து காவலர்கள் பணியில் இருந்தபோதும் கண்டுகொள்வதில்லை. இங்கு நாள்தோறும் நான்கைந்து இருசக்கர வாகனங்கள் திருடுபோகின்றன. இப்புகார்களின்பேரில் போலீசார் விசாரித்தும், சாலையோர வாகனங்களை அகற்ற முன்வருவதில்லை. எனவே, ஸ்டேஷன் சாலையில் நிறுத்தப்படும் இருசக்கர வாகனங்களை அகற்றி, அங்கு போக்குவரத்து காவலர்களை வைத்து எச்சரித்தும், அந்த சாலையை சீரமைத்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.
மேலும் செய்திகள்
தமிழ்நாடு அரசு பள்ளிகளில் தகுதியற்ற, தற்காலிக ஆசிரியர்களை நியமனம் செய்வது ஆபத்தானது : ஐகோர்ட் அதிரடி
சென்னையில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்தபோது விஷவாயு தாக்கி 2 பேர் உயிரிழப்பு
அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு தடை விதிக்க முடியாது... நீதிமன்ற அவமதிப்பு வழக்கு ஜூலை 4ல் விசாரணை: உயர்நீதிமன்றம் திட்டவட்டம்!!
மின் விபத்துகளை தவிர்க்க நடவடிக்கை எடுங்கள்... பொறியாளர்கள், ஊழியர்களுக்கு மின்சார வாரியம் உத்தரவு!!
சொத்துக்காக தொழிலதிபரை கடத்திய வழக்கு போலீஸ் உதவி கமிஷனருக்கு நிபந்தனை முன்ஜாமீன்: உயர் நீதிமன்றம் உத்தரவு
விஐடி குழும இன்டர்நேஷனல் பள்ளி திறப்பு விழா: தாய்மொழியில் பேசுவதை ஊக்குவிக்க வேண்டும்: துணை ஜனாதிபதி வெங்கய்யா நாயுடு பேச்சு
நுபுர் சர்மாவை ஆதரித்த டெய்லர் தலை துண்டித்து கொடூர கொலை ராஜஸ்தானில் வன்முறை, போராட்டம்!!
ஆச்சர்யமூட்டும் கலைநயம்!: அமெரிக்கா சியாட்டெலில் அமைந்துள்ள கண்ணாடி பூங்காவின் வியக்க வைக்கும் புகைப்படங்கள்..!!
அமெரிக்காவில் ரயில் தடம் புரண்டு 3 பேர் பரிதாப சாவு; 50 பேர் காயம்
அசாம் வெள்ளப்பெருக்கு: 135 பேர் உயிரிழந்த நிலையில் மீட்புப்பணிகள் தீவிரம்
ஊர் சுற்றலாம் வாங்க!: உள்ளம் கொள்ளை கொள்ளும் அழகான இந்திய சுற்றுலா இடங்களின் புகைப்பட தொகுப்பு..!!