மாமல்லபுரம் கடற்கரையில் மனைவியுடன் நடந்து சென்றவர் மயங்கி பலி
2022-05-27@ 17:35:10

மாமல்லபுரம்: மாமல்லபுரத்தில் நண்பரின் குடும்ப நிகழ்ச்சியில் பங்கேற்று, தனது மனைவியுடன் கடற்கரையில் நடந்து சென்ற வாலிபர் திடீரென மயங்கி விழுந்து பலியானார். இப்புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர். சென்னை போரூரை சேர்ந்தவர் திவாகரன் என்பவரின் மகன் தினேஷ் (33). இவர், துபாயில் ஒரு சிறிய நிறுவனம் துவங்கி, தொழில் செய்து வந்தார். இவரது நெருங்கிய நண்பரின் குடும்ப நிகழ்ச்சி நேற்று மாமல்லபுரத்தில் ஒரு தனியார் ரிசார்ட்டில் நடைபெற்றது. இதில் தினேஷ், தனது மனைவியுடன் பங்கேற்றுள்ளார்.
பின்னர் நிகழ்ச்சி முடிந்ததும் நேற்று மாலை தனது மனைவியுடன் மாமல்லபுரம் கடற்கரையில் தினேஷ் நடந்து சென்றுள்ளார். அப்போது அவர் திடீரென மயங்கி விழுந்துள்ளார். மாமல்லபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு தினேஷை பரிசோதித்த டாக்டர்கள், அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
மேலும் செய்திகள்
ஊட்டியில் சுற்றித்திரிந்த குதிரைகள் சிறைபிடிப்பு: உரிமையாளர்களுக்கு அபராதம்
தமிழகம் மாளிகையில் உலா வரும் சிறுத்தை: கூண்டு வைத்து பிடிக்க கோரிக்கை
ஊட்டி - கோத்தகிரி சாலை கோடப்பமந்தில் தடுப்பு சுவர் அமைக்கும் பணி தீவிரம்
உடன்குடியில் அனல்மின் நிலையம் துறைமுகம் அமைக்கும் பணி தீவிரம்
குலசையில் ஆட்டோ டிரைவர்களுக்கு விழிப்புணர்வு மோட்டார் வாகன சட்டத்தை மீறினால் கடும்நடவடிக்கை : எஸ்பி பாலாஜி சரவணன் எச்சரிக்கை
காரைக்குடி அருகே தனியாரால் ஆக்கிரமிக்கப்பட்ட ரூ.10 கோடி கண்மாய் நிலம் மீட்பு: முதல்வர் தனிப்பிரிவு புகார் மீது அதிரடி நடவடிக்கை
நுபுர் சர்மாவை ஆதரித்த டெய்லர் தலை துண்டித்து கொடூர கொலை ராஜஸ்தானில் வன்முறை, போராட்டம்!!
ஆச்சர்யமூட்டும் கலைநயம்!: அமெரிக்கா சியாட்டெலில் அமைந்துள்ள கண்ணாடி பூங்காவின் வியக்க வைக்கும் புகைப்படங்கள்..!!
அமெரிக்காவில் ரயில் தடம் புரண்டு 3 பேர் பரிதாப சாவு; 50 பேர் காயம்
அசாம் வெள்ளப்பெருக்கு: 135 பேர் உயிரிழந்த நிலையில் மீட்புப்பணிகள் தீவிரம்
ஊர் சுற்றலாம் வாங்க!: உள்ளம் கொள்ளை கொள்ளும் அழகான இந்திய சுற்றுலா இடங்களின் புகைப்பட தொகுப்பு..!!