கோவையில் கார் மீது வேன் மோதிய கோர விபத்தில் 4 வயது சிறுவன் பரிதாப பலி!: பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சி வெளியீடு..!!
2022-05-27@ 15:56:59

கோவை: கோவை மதுக்கரை நெடுஞ்சாலையில் கார் மீது வேன் மோதிய விபத்தில் 4 வயது சிறுவன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். கோவை வீரபாண்டி பிரஸ் காலனியை சேர்ந்த அமல் சிபோனின் 3 குழந்தைகள், தாத்தா செல்வராஜ் உடன் கேரள மாநிலம் மலப்புழா அணைக்கு சென்று காரில் திரும்பியபோது, விபத்து நேரிட்டுள்ளது. மதுக்கரை பால்துரை சந்திப்பு அருகே எதிரே வேகமாக வந்த வேன் மோதி காரை பின்னோக்கி தள்ள எதிர்புறம் வந்த மற்றொரு வாகனம் மீது பயங்கரமாக மோதியது.
இதில் காரில் இருந்த 4 பேரும் படுகாயங்களுடன் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். 4 வயது சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துவிட்டார். விபத்து தொடர்பான பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. தொடர்ந்து, சிசிடிவி காட்சியை வைத்து விசாரணை நடத்தி வரும் போலீசார், விபத்து ஏற்படுத்திவிட்டு தப்பி சென்ற வேன் ஓட்டுநரை தேடி வருகின்றனர்.
மேலும் செய்திகள்
பட்டதாரி பெண்ணை கர்ப்பமாக்கி கருக்கலைப்பு மாஜி எம்எல்ஏவின் மகனுக்கு போலீஸ் வலை
கரூர் திருமாநிலையூரில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் கலந்துகொள்ள தனிவிமானம் மூலம் திருச்சி புறப்பட்டார் முதல்வர் முக.ஸ்டாலின்
சாத்தான்குளம் அருகே விஷம் வைத்து 20 கோழிகள் சாகடிப்பு
பயிர் காப்பீட்டு தொகை வழங்காததை கண்டித்து திருவேங்கடத்தில் விவசாயிகள் காத்திருப்பு போராட்டம்
ராஜபாளையம் தொகுதியில் அரசு நெல் கொள்முதல் நிலையம் திறப்பு
காட்பாடியில் சீரமைப்பு பணி முடிந்தது ரயில்வே மேம்பாலத்தில் போக்குவரத்து தொடக்கம்
அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் லாரி ஒன்றில் 53 அகதிகள் சடலமாக மீட்பு... 16 பேர் கவலைக்கிடம்!!
கலிபோர்னியாவில் மீண்டும் பற்றி எரியும் காட்டுத் தீ..135 ஏக்கர் வனப்பகுதி தீக்கிரை..!!
நுபுர் சர்மாவை ஆதரித்த டெய்லர் தலை துண்டித்து கொடூர கொலை ராஜஸ்தானில் வன்முறை, போராட்டம்!!
ஆச்சர்யமூட்டும் கலைநயம்!: அமெரிக்கா சியாட்டெலில் அமைந்துள்ள கண்ணாடி பூங்காவின் வியக்க வைக்கும் புகைப்படங்கள்..!!
அமெரிக்காவில் ரயில் தடம் புரண்டு 3 பேர் பரிதாப சாவு; 50 பேர் காயம்