8 ஆண்டு பாஜக ஆட்சியின் தோல்வி ஓராண்டில் ரு.30 லட்சம் கோடி சம்பாதித்த 142 பணக்காரர்கள்: காங்கிரஸ் தலைவர்கள் குற்றச்சாட்டு
2022-05-27@ 15:34:51

புதுடெல்லி: கோவிட் காலத்தில் ஓராண்டில் ரூ.30 லட்சம் கோடி லாபத்தை 142 பெரும் பணக்காரர்கள் ஈட்டியுள்ளதாக காங்கிரஸ் தலைவர்கள் குற்றம்சாட்டி உள்ளனர். பிரதமர் மோடி தலைமையிலான ஒன்றிய அரசு ஆட்சிக்கு வந்து எட்டு ஆண்டுகள் முடியும் நிலையில், ‘எட்டு ஆண்டுகள் - 8 சூழ்ச்சிகள் - பாஜக அரசு தோல்வி’ என்ற தலைப்பில் சிறு கையேட்டை காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ளது. இதுகுறித்து காங்கிரஸ் மூத்த தலைவர்கள் அஜய் மாகேன், ரந்தீப்சிங் சுர்ஜேவாலா ஆகியோர் கூறுகையில், ‘ஆட்சிக்கு வருவதற்கு முன் பாஜக அளித்த வாக்குறுதிகள் எங்கே போனது என்றே தெரியவில்லை. பாஜக ஆட்சியில் அத்தியாவசியப் பொருட்களின் விலைவாசி, விண்ணை முட்டிக் கொண்டிருக்கிறது.
ஊடக சுதந்திரம், பாலின வேறுபாடு, சட்டம் ஒழுங்கு, சமூக நல்லிணக்கம், ஜனநாயக வளர்ச்சி, உணவு பாதுகாப்பு உள்ளிட்ட முக்கிய விஷயங்களில் சர்வதேச அளவில் இந்தியாவின் தரம் பலமடங்கு சரிந்து விட்டது. பாஜக அரசு அனைத்து துறைகளிலும் தோல்வி அடைந்து விட்டது என்பதை இது தெளிவாக காட்டுகிறது. எட்டு ஆண்டுகால பாஜக ஆட்சியில் நாட்டின் இறையாண்மை மற்றும் பாதுகாப்புக்கு தொடர்ச்சியான அச்சுறுத்தல்கள் ஏற்பட்டுள்ளன. நமது எல்லைக்குள் சீனா தொடர்ந்து ஊடுருவி வருகிறது. ஆனால், பிரதமர் அமைதியாக இருக்கிறார். இந்த அரசின் கொள்கையால் 12 கோடி பேர் வேலை இழந்துள்ளனர். 142 பெரும் பணக்காரர்கள் கோவிட் காலத்தில் கடந்த ஓராண்டில் ரூ.30 லட்சம் கோடி லாபம் ஈட்டியுள்ளனர்’ என்றார்.
மேலும் செய்திகள்
கடந்த 5 ஆண்டுகளில் எம்பிக்களின் ரயில் பயண செலவு ரூ.62 கோடி: ஒன்றிய அரசு தகவல்
ஏக்நாத் முதல்வரான நிலையில் சரத் பவாருக்கு வருமான வரித்துறை நோட்டீஸ்
சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கு; அமலாக்கத்துறை முன் சிவசேனா எம்பி ஆஜர்
ஐதராபாத்தில் நாளை, நாளை மறுநாள் பாஜக தேசிய செயற்குழு கூட்டம் ‘பை பை மோடி’ பேனர் வைத்ததால் பரபரப்பு
மதம் தொடர்பான கருத்து தெரிவித்த ஆபாச நடிகைக்கு கொலை மிரட்டல்
மணிப்பூர் நிலச்சரிவு சம்பவம், 7 வீரர்கள் உட்பட 14 பேரின் சடலம் மீட்பு; மேலும் 60 பேரின் கதி என்ன?
அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் லாரி ஒன்றில் 53 அகதிகள் சடலமாக மீட்பு... 16 பேர் கவலைக்கிடம்!!
கலிபோர்னியாவில் மீண்டும் பற்றி எரியும் காட்டுத் தீ..135 ஏக்கர் வனப்பகுதி தீக்கிரை..!!
நுபுர் சர்மாவை ஆதரித்த டெய்லர் தலை துண்டித்து கொடூர கொலை ராஜஸ்தானில் வன்முறை, போராட்டம்!!
ஆச்சர்யமூட்டும் கலைநயம்!: அமெரிக்கா சியாட்டெலில் அமைந்துள்ள கண்ணாடி பூங்காவின் வியக்க வைக்கும் புகைப்படங்கள்..!!
அமெரிக்காவில் ரயில் தடம் புரண்டு 3 பேர் பரிதாப சாவு; 50 பேர் காயம்