உலக அளவில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 50 கோடியை தாண்டியது!!
2022-05-27@ 07:40:52

வாஷிங்டன் : உலக நாடுகளை 2 ஆண்டுகளுக்கும் கூடுதலாக அச்சுறுத்தி வரும் கொரோனா பெருந்தொற்று, சீனாவின் உகான் நகரில் 2019ம் ஆண்டு டிசம்பர் இறுதியில் முதன்முறையாக கண்டறியப்பட்டு வெளியுலகிற்கு தெரிய வந்தது. தற்போது கொரோனா வைரஸ் 225க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையிலும் வைரஸ் உருமாற்றமடைந்து பாதிப்பு அதிகரித்து வருகிறது. டெல்டா, டெல்டா பிளஸ், ஒமைக்ரான் என்று உருமாறி வரும் வகைகளால் பல நாடுகளில் கொரோனா பரவல் அதிகரித்து பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது.
இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 53 கோடியே 1 லட்சத்து 48 ஆயிரத்து 68 ஆக அதிகரித்துள்ளது. இது நேற்று 52 கோடியே 95 லட்சத்து 40 ஆயிரத்து 303 ஆக இருந்தது. தொற்று பாதிக்கப்பட்டவர்களில் 2 கோடியே 32 லட்சத்து 52 ஆயிரத்து 734 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 50 கோடியே 5 லட்சத்து 87 ஆயிரத்து 748 பேர் குணமடைந்துள்ளனர். எனினும், கொரோனா வைரசால் உலகம் முழுவதும் இதுவரை 63 லட்சத்து 7 ஆயிரத்து 585 பேர் உயிரிழந்து உள்ளனர்.
மேலும் செய்திகள்
உணவு தட்டுப்பாட்டால் உலகம் பேரழிவைச் சந்திக்கும்: உலக நாடுகளுக்கு ஐக்கிய நாடுகள் சபை எச்சரிக்கை..!
கருக்கலைப்பு உரிமை சட்டம் ரத்து செய்யப்பட்டது அமெரிக்காவுக்கு மோசமான நாள்: ஜோ பைடன் கருத்து..!
மீண்டும் வேகமெடுக்கும் கொரோனா பரவல்.. உலக நாடுகளில் அதிகரிக்கும் வைரஸ் பாதிப்பு.. இதுவரை 54.82 கோடி பேருக்கு தொற்று உறுதி!!
ரஷ்யாவின் சரக்கு விமானம் விபத்து: 4 பேர் பலி
சுகாதார அதிகாரிகள் பரபரப்பு குற்றச்சாட்டு: இங்கி.யில் போலியோ வைரஸ் பரவக் காரணம் பாகிஸ்தான்
சண்டை போட ஆயுதங்கள் இருக்கு... உயிர் கொடுக்கதான் எதுவுமில்லை; சாப தேசம்: பூகம்பம் இடிபாடுகளை கையால் அகற்றி சொந்தங்களை மீட்கும் ஆப்கான் மக்கள்
இஸ்ரேலில் உள்ள பாலைவனத்தில் நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சியில் பழங்கால மசூதி கண்டுபிடிப்பு..!!
ஈக்வேடாரில் தொடர்ந்து உயரும் எரிபொருட்களின் விலையால் பொதுமக்கள் சாலையில் போராட்டம்..!!
புதுச்சேரியில் இன்று பள்ளிகள் திறப்பு: மாணவர்களை உற்சாகமாக வரவேற்ற ஆசிரியர்கள்..!!
50 ஆண்டுகளில் முதன்முறையாக தொடங்கிய சில நிமிடங்களிலேயே முடிந்தது அதிமுக பொதுக்குழு கூட்டம்..!!
பாகிஸ்தானில் 48 செ.மீ. நீளமுடைய காதைக் கொண்டு உலக சாதனை படைத்த சிம்பா ஆட்டுக்குட்டி..!!!